Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: இரண்டாம் திருவந்தாதி (100 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2182இரண்டாம் திருவந்தாதி || ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான தம்முடைய சேஷத்வத்தையும்- அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது – ஜகத் வைசித்ரி யினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று அனுசந்திக்கிறார் – விசித்ரம் ஆக்கினான் ஸ்ரீ பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் – 1
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
ஞானம் தமிழ் புரிந்த நான், Gnanam Tamil Purindha Naan - பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ, Anbe Thagali Aa - (பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக, Aarvame Ney Aaga - (அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ, Inbu Urugu Chinthai Iduthiri Aa - (பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக, Nanbu Urugu - ஆத்மாவும் உருகப்பெற்று
நாரணற்கு, Naaranarku - ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன், Gnanam Sudar Vilakku Aetrinenn - பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.
2183இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் -அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி – நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்- பக்தி பரவசராய் கவி பாடினார்க்கு அவன் கொடுக்கும் பரிசு சொல்லுகிறது – பக்தி பரவசர்களாய்க் கொண்டு -அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை – ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய ஸூரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார் 2
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், – வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு.
நாரணன் தன், Naaranan Than - ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள், Naamangal - (திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று, Mattru - மற்றும்
அவன் பேர், Avan Per - அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால், Gnanaththal - (ப்ரேமரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து, Nangu Unarnthu - உள்ளபடியறிந்து
தானத்தால், Thaanaththal - (ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால், Saatrinhaal - அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு, Nangal Pani Amarar Koman Parisu - நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே, Vaanathu Ani Amarar Aakuvikkum Athu Andrae - பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம்.
2184இரண்டாம் திருவந்தாதி || கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே – அவ்வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்- இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் – அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் – அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் – அவன் செய்ததிலே தாம் ஈடுபடுகிறார்- அடுத்து அணித்தாகத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை ஆஸ்ரயிக்குமவர்கள் ஸ்ரீ பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் – 3
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், – புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.
பால் கடலான் பாதம், Paal Kadal Aan Paatham - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால், Parisu Narumalaral - செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார், Purivaar - விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர், Purivargal Thol Amarar - ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி, Kelvi - (கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து, Thulangu Olli Ser Thotratthu - மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர், Nal Amarar Goman Nagar - நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம், Pugapperuvar Polam - அடையப் பெறுவர்கள்
2185இரண்டாம் திருவந்தாதி || கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் – அன்றிக்கே -இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்- இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்- அன்பே தகளியா -என்று ஒரு விளக்கு ரூபித்தால் போலே ஒரு புஷ்பமாக ரூபித்து-அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்- அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு – தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார் 4
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.
நகர் இழைத்து, Nagar Izhaithu - என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு, Nithilathu Naal Malar Kondu - (அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து, Thigalum Mani Vairam Serkku - ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா, Nigar Illa - ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி, Paing Kamalam Aendhi - பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான், Pani Malaral Angam Valam Konda - குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி, Adi - திருவடிகளை
பணிந்தேன், Panindhen - வணங்கினேன்.
2186இரண்டாம் திருவந்தாதி || பக்தியைத் தீபமாகப் பேசினார் -நகரம் கோயிலாகப் பேசினார் -இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் – அன்றிக்கே-பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாகவுமாம் – நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே – ஸ்ரீ ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன-ஒன்றைச் சொன்னேன் அத்தனை – இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் – பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் – அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறது – ஸ்ரீ ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் – 5
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், – படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து.
படிநின்ற, Padinindra - பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே, Neer Otham Meeni Nedumale - கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம், Andru I Ulagam - முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடிமூன்றில் அளந்தாய் போலும், Adimundril Alandhai Polum - மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடிமூன்று அவனி, Adimundru Avani - மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய், Irandu Kondaai - (மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை, Nin Adiyai - இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து, Arinthu - நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓதவல்லார் ஆர், Othavallar Aar - பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)
2187இரண்டாம் திருவந்தாதி || அறியப் போமோ -என்றாரே -ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று – இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் – ஆகில் பின்னை இங்கனே எல்லோரும் அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் -அது வேண்டா இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள் அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் – அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் – அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்- ஞானத்துக்கு விஷயம் அன்றாகில்-சூன்யம் ஆகிறதோ என்னில் அபிநிவேசத்தை உடையராய் ஆஸ்ரயிக்க வல்ல-பாக்யவான்கள் அறிவர் -என்கிறது – ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் – 6
அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, – அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல்.
அறிந்து, Arinthu - (எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்க ளையும் நன்றாக) அறிந்துகொண்டு
பஞ்சேந்திரியங்களையும், Panjeendriyangalaiyum - பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி, Ul Adakki - (பட்டிமேயவொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய்மலர் கொண்டு, Aaymalar Kondu - (பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக்கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய், Aarvam Serintha Manathar Aay - பக்திமிகுந்த மனத்தையுடையராகி
செவ்வே அறிந்து, Sevve Arinthu - (எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன்பேர், Avanthanper - அப்பெருமானது திருநாமங்களை
ஓதி, Othi - இடைவிடாமற் சொல்லிக்கொண்டு
ஏத்தும், Aethum - துதிக்கின்ற
பெரும் தவத்தோர், Perum Thavaththor - மஹாபாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல், Kaarotham Vannan Kazhal - கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர், Kaanbar - கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.
2188இரண்டாம் திருவந்தாதி || இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் –என்று அறிந்து நீயும் விடாதே அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் – பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை – அவனை உகந்தார் காண்பரான பின்பு-நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தைப் பார்த்து சொல்லுகிறார் – பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்-நமுசி பட்டது படும் அத்தனை – இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே – நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் – 7
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து.
ஆழிநெஞ்சே, Aazhinenje - ஆழ்ந்த மனமே!
கழல் எடுத்து, Kazhal Eduthu - திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார், Maatrar - எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய்அஞ்ச, Azhai Edutha Sindhaiyar Aay Anja - பயாக்னி கொளுந்தின நெஞ்சையுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து, Vaai Madithu - உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று, Kan Suzhandru - (பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டுவிழும்படி) கண்கள் வட்டமிட
தழல்எடுத்த போர் ஆழி, Thazhal Edutha Por Aazhi - நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான், Aendinaan - தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே, Ponmalar Se Adiye - அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர், Uganthu Oor - விரும்பி அநுஸந்திப்பாயாக.
2189இரண்டாம் திருவந்தாதி || ஆனபின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் – அதாவது -பொய்யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது -ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க -அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் – நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்- பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது – இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் –பூதனையை முடித்தால் போலே அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் – 8
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, – உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று.
உகந்து, Uganthu - யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி, Unnai Vaangi - (நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை, Oliniram Kol Kongai - (பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான், Aham Kulira Un Enraan - (‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லிவாயிலே வைத்தாள்.
ஆனமையால், Aanamaiyaal - ஆகையினாலே,
அன்று, Andru - அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும், Neeyum - சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால், Alai Panbaal - அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே, Mulai Unbaai Pole - மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து, Uganthu - (பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து, Muninthu - (மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி, Aavi - (அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய், Undaai - உறிஞ்சி உட்கொண்டாய்.
2190இரண்டாம் திருவந்தாதி || வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் – இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை- பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் – ஸ்ரீ யசோதை பிராட்டி உடைய-சிநேகத்துக்கு உபமானம் உண்டோ-என்கிறது – பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ்விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய ஸ்ரீ யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் – 9
அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து.
அன்று, Andru - (பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அதுகண்டு, Adhukandu - முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத, Anjaadha - ‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி, Aaychi - யசோதைப் பிராட்டியானவள்
நன்று, Nandru - தரித்து நன்று
உனக்கு இரங்கி முலை தந்த, Unakku Irangi Mulai Thanda - உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு, I Neermaikku - இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம், Andru Nee Varanmuraiyal Alanda Maa Kadal Soozh Nyaalam - முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ, Perumuraiyal Eydhumo - இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?
2191இரண்டாம் திருவந்தாதி || ஆக -இருந்தபடி இதுவாகையால் இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது – அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் – உன்னுடையேனாய் இருந்து வைத்து நான் முன்பு தேவதாந்தரங்களை அனுவர்த்தித்துப் பட்ட பொல்லாங்கு இனி படாதபடி காத்தருள வேணும் அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் -ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே – அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் – 10
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.
காவலனே, Kaavalaney - ஸர்வரக்ஷகனே!,
பிள்ளைஆய், Pillaiyaai - சிறு குழந்தையாயிருந்து
மா சகடம், Maa Sakadam - (அஸுராவேசமுள்ள) பெரிய வொருவண்டியை
பர்த்தனை, Parthanai - கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண், Man - பூமியை
இரந்து, Irandu - (மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
பல் உயிரும், Pal Uyirum - எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை, Kaaththanai - ரக்ஷித்தருளினாய்;
நின், Nin - (இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால், Ulli Nindramaiyal - (ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன், Eythiya Naa Udaiyen - உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன், Poo Udaiyen - (அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
அடியேன், Adiyen - உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட, Patta - வெகுகாலமாக அடைந்துள்ள
கடை, Kadai - தாழ்வுகளை
கா, Kaa - போக்கியருள வேணும்.
2192இரண்டாம் திருவந்தாதி || கா என்று கொண்டு வெறுமனே தலையிலே ஏறிடுகிறது ஏன் -தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூ த்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் – தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன -இப்படிச் செய்வார் உண்டோ என்னில் – அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்- தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன இப்படி செய்வார் உண்டோ என்னில்-அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார் நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் – 11
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்.
அமரக் கடை நின்று, Amarak Kadai Nindru - தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது, Naalum Kazhal Thozhudhu - நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
இடைநின்ற இன்பத்தர் ஆவர், Idaininra Inbathar Aavar - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே, Pudaininra Neer Otham Menni Nedumale - (இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை, Nin Adiyai - உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர், Othavallaaravar Aar - அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)
2193இரண்டாம் திருவந்தாதி || ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ -அவர்களை ஷேபிக்கிறது ஏன் என்னில் – அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் – மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் -அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்- சிறியார் பெரியார் என்னாதே-ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாதார் எவர் – ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் – அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும் அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் – 12
அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.
எண்ணில், Ennil - (எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூபஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை, Avar Ivar Endru Illai - இன்னார்தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசியில்லை;
அரவு அணையான் பாதம், Aravu Anaiyaan Paatham - சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி, Vanangi - தொழுது
ஏத்தாதார், Aeththathaar - துதியாதவர்கள்
எவர், Evar - யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன், Pavarum Sezhugathiron - பரவின அழகிய ஆயிரங் கிரணங்களையுடையவனானஸூரியனும்
ஒள் மலரோன், Ol Malaron - அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாகவுடைய பிரமனும்
கண் நுதலோன், Kan Nuthaloon - நெற்றிக்கண்ணனான ருத்ரனும்
நாளும், Naalum - நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே, Thodarnthu Thozhum Thakaiyaar Andrae - அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத்தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?
2194இரண்டாம் திருவந்தாதி || ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ – அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்-அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை – எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே உள்ளது ஓன்று அன்றோ – அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி-அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார் ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று – இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது- விலஷண அதிகாரம் ஆகில் கிடையாதோ என்னில்-ஓர் ஆனைக்கன்றோ எளிதாய் தோன்றுகிறது – இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும் கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் – 13
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் ¦ கொண்டு,அன் – றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு.
தொடர் எடுத்த மால் யானை, Thodar Edutha Maal Yaanai - காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது
சூழ் கயம் புக்கு, Sool Kayam Pukku - (கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு, Padhar Eduthudhu Pai Kamalam Kondu - மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க, Andru Idar Adukka - அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி, Anji - (செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம், Azhiyan Paatham - (முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான், Thaan - அந்த கஜேந்திரம்
பண்டு, Pandhu - முற்காலத்தில்
வானவர் கோன்பாழி, Vaanavar Konpazhi - தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று, Eydhithru - அடைந்தது.
2195இரண்டாம் திருவந்தாதி || இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே பகவத் பஜனத்தைப் பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் – அவன் படி இதுவான பின்பு -சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து – திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் – அவன் படி இதுவான பின்பு-சம்சாரிகளை ஏற்றித் திரியாதே அவன் திருவடிகளிலே பணிந்து-திரு நாமங்களைச் சொல்லி உங்களுடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை-சுத்தமாக்கிக் கொள்ளுங்கோள்-என்கிறார் அன்றிக்கே வயிறாகிய பெரும் பதியை உண்டாக்கி என்னவுமாம் இப்படி அவன் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனபின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே – ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோள் -என்கிறார் – 14
பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, – எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.
பேதைகாள், Pethaikaal - அவிவேகிகளே!,
பண்டியை, Pandiyai - வயிற்றை
பெரு பதி ஆக்கி, Peru Pathi Aakki - பெரிய ஊர்போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு, Pazhi Paavam Kondu - தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு, Ingu - இவ்வுலகில்
வாழ்வாரை, Vaazhvaarai - வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே, Kooraadhe - புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான், En Thisaiyum Peertha Karam Naangu Udaiyaan - (உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதி, Othi - இடைவிடாது சொல்லிக்கொண்டு
திரிந்து, Thirinthu - திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின், Theerthakarar Aamin - (உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.
2196இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் -அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் – இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்- திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும் ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-இறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணனாவது -ஸ்ரீ ராமன் ஆவதாகக் கொண்டு அதி ஸூகுமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் – 15
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு.
வெம் சமத்து, Vem Samathu - கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர்கடவி, Therkadavi - (பார்த்தஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும், Thirindhathum - அலைந்ததும்,
அன்று, Andru - இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய், Maanpin Poi - மா·சனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும், Seethaiyai Pirindhadum - பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண், Kan - தரையிலே
பள்ளி கொள்ள, Palli Kollai - படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும், Purindhathuvum - ஆசைகொண்டதும்
நாகத்தின் தண்பள்ளிகொள்வான் தனக்கு, Naagaththin Thandpallikolvaan Thanakku - திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே, Azhagiyadhe - ஏற்றவையோ?
2197இரண்டாம் திருவந்தாதி || அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ – இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால் இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் – அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ -ஆனபின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ- ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை ஒழிய ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று – அன்றிக்கே ஏரியாம் வண்ணம் இயற்றுமது-மற்று வர்ஷிப்பிக்குமது இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம் ருசி உத்பாதகனும் தானே-பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம் இப்படி நம்மை பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க – சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார்- 16
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, – வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று.
தனக்கு, Thanakku - சேதநனாகிய தனக்கு
அடிமை, Adimai - சேஷத்வமென்பது
பட்டது, Pattadhu - அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும், Thaan Ariyaan Aelum - தான்தெரிந்துகொள்ள அசக்தனாயிருதாலும்
மனத்து, Manaththu - மனத்திலே
அடைய, Adaiya - வந்து சேர்ந்த வளவில்
மாலை, Maalai - அப்பெருமானை
வைப்பது, Vaippadhu - இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
வனம் திடரை, Vanam Thidharai - காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால், Aeri Aam Vannam Iyattrum Ithu Allaal - (பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி) ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று, Mattru - பின்னும்
மாரி, Maari - மழையை
பெய்கிற்பார், Peygirpaar - பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார், Yaar - யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)
2198இரண்டாம் திருவந்தாதி || இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் – நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரய ணீ யன் அவனே அன்றோ என்கிறார் ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ லப்த ச்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று – பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு இங்கு ஆஸ்ரய ணீ யர் இல்லை என்கிறது அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்- இவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் என்னில்-வேறு ஒருவர் இல்லாமை என்கிறது இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் – 17
மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, – ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு.
வானவர் கோன், Vaanavar Koon - தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன், Maa Malaron - (எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை, Sutrum Vanangum Thozhilaanaik - பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை, Maalai - எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான், Otrai Pirai Irundha Semsadayaan - ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின்சென்று, Pinsendru - அநுவர்த்தித்து
இரந்து, Irandu - (பல்லைக்காட்டி) யாசித்து
குறை, Kurai - தனது குறையை
தான் முடித்து கொண்டான், Thaan Mudithu Kondaaan - தான் நிறைவேற்றிக் கொண்டான்;
இயல் ஆவார், Iyal Aavaar - ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர், Mattru Aar - அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?
2199இரண்டாம் திருவந்தாதி || தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் – அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் – அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது- இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது- இப்படி ஸமாச்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து – தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் – 18
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.
குறள்உரு ஆய், Kuraluru Aay - வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம், Ulagam - பூமி முதலிய லோகங்களை
கொண்டது, Kondadhu - ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய், Kool Ari Aay - மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து, Onthiralon Maarvathu - மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது, Ukir Vaiththadhu - தனது நகங்களையழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள், Orunhaal - ஒருகாலத்திலே
தான் கடந்த, Thaan Kadandha - தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே, Ezhu Ulagai - எல்லாவுலகங்களையும்
உண்டதுவும், Undadhum - (பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
வான் கடந்தான், Vaan Kadandhaan - ஆகாசத்தையளவிட்டாலும் அளவிடவொண்ணாதபடியுள்ள பெருமையையுடையவனும்
தாமரை கண், Thamarai Kan - செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால், Maal - எம்பெருமான்
செய்த, Seitha - செய்தருளின
வழக்கு, Vazhakku - நியாயமான செயல்களாம்
2200இரண்டாம் திருவந்தாதி || அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் – இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் – நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது – நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்- 19
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, – குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி.
வலி சகடம், Vali Sakadam - வலிதான சகடத்தை
செற்றாய், Settrai - உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய், Vazhakku Andru Kandaai - இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா, Vazhakku Endru Nee Mathikka Venda - இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
குழ கன்று, Kuzha Kandu - (அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த, Thee Vilavin Kaaykku Erindha - தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை, Theemai - இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க, Paar Vilanga - பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய், Pazhi Seithai - தவறு செய்தாய்
2201இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் பஜனத்திலே அடி இட்டாரோடு -தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அறஎல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் – கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து -இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் – ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயிதவர்கள் அன்றோ ஆழ்வார்கள் -என்கிறது – ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியத் தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் – 20
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, – வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்.
பழி, Pazhi - அபகீர்த்தியையும்
பாவம், Paavam - பாவங்களையும்
கை அகற்றி, Kai Akattri - நீக்கி
பல்காலும், Palkalum - எப்போதும்
நின்னை, Ninnai - உன்னை
வழிவாழ்வார், Vazhivazhvaar - வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன், Naaranan Than - நாராயணனான வுன்னுடைய
நாமங்கள், Naamangal - திருநாமங்களை
நன்கு உணர்ந்து, Nangu Unarnthu - நன்றாக அறிந்து
வழு இன்றி, Vazhu Indri - இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம், Nangu Aeththum Kaaranangal Udaiyaar Thaam - அழகாகத்துதிப்பதற்கேற்ற உபகரணங்களையுடையவர்களும்
வாழ்னராம், Vazhnaaram - மகிழ்ந்து வாழப்பெறுவர்கள்.
2202இரண்டாம் திருவந்தாதி || இவர்களுடைய பரிகர சம்பத்தி இருந்தபடி -கண்டோமுக்கு நேர் கொடு நேர் நரகத்தில் புக வழி அற்று இருந்தது இங்கனே இருக்கும் இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி என் என்று விஸ்மயப் படுகிறார் – நன்கு ஏத்தும் போது தாம் தாம் உண்டாக வேணுமே -என்னில்- இப்படி உபகரணங்கள் குறை வற்று இருக்கச் செய்தே-நரகத்துக்கு நேர் வழி கிடையாது- ஸ்ரீ எம்பெருமானை பஜிக்கைக்கு ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மாயப் படுகிறார் – 21
தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, – வாமன்
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே
அருநரகம் சேர்வ தரிது.
தாம் உளரே, Tham Ulare - (எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரணகளேபரங்களை யுடைய) சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே, Tham Ullum Ululadhe - (எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியேபோய்த் தேட வேண்டாதபடி) தமக்குள்ளேயிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே, Thamaraiyin Pu Uladhe - (எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும்பொழுது உண்டே, Ethumpozhuthu Unde - அவனை வாய்விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன், Vaman - (தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவுதாள், Thiru Maruvudhal - அழகிய திருவடிகளை
மருவு, Maruvu - பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே, Chenniyare - தலையையுடையவர்களாக இருக்கின்றார்களே;
செவ்வே, Chevve - நேராக
அருநரகம், Arunaragam - கொடிய நரகத்தை
சேர்வது, Chervadhu - அடைவதானது
அரிது, Aridhu - ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.
2203இரண்டாம் திருவந்தாதி || இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது- இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே – எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் – சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் – சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில் எளிதாம் வழி சொல்லுகிறார் – சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால் எல்லாம் ஸூலபம் இறே என்கிறது- சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு-சமாஸ்ரயணீயனைப் பெற்றால்-எல்லாம் சுலபம் இறே என்கிறது – தங்களுக்கு ஒரு பரிகர சம்பாத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார் 22
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.
பெருக முயல்வாரை, Peruga Muyalvarai - மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால், Perral - கிடைக்கப்பெற்றால்
அரியது, Ariyadhu - செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும், Elidhu Agum - லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண்கோடு, Venkotu - வெண்ணிறமான தந்தங்களையுடைய
மால், Maal - பெரிய
கரியது ஓர் யானை, Kariyadhu Or Yanai - கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண், Than - குளிர்ந்த
கோடு, Kodu - பொய்கைக் கரையிலே
மா, Maa - சிறந்த
மலரால், Malaral - தாமரைப்பூக்களைக் கொண்டு
தாழ்ந்து, Thazhndu - வணங்கியடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே, Vendru Muthithanre - விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால், Aattralal - தன்னுடைய சக்தியினால்
மாற்றி, Maatri - சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி
2204இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூலபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் – ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் – கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் – ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்- தன்னை ஆஸ்ரயிப்பாருக்கு–பிரதிபந்தகதையும் போக்கி-தானும் சுலபனாம் என்கிறது தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத் தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் – 23
தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், – தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.
தாழ்ந்த, Thazhndha - (பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா, Vila - விளாமரத்தினுடைய
கனிக்கு, Kanikku - பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று, Kandru - கன்றை (எறிகோலாகக் கொண்டு) வீசியெறிந்தவனாயும்
வேறு உரு ஆய், Veeru Uru Aay - (திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம், Njaalam - பூமியை
அளந்து, Alanthu - அளந்து
கொண்ட, Konda - அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன், Avan - அந்த எம்பெருமான்
தாழ்ந்து, Thazhndu - தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு, Varam Kondo - (எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால், Thakka Vagaigalal - (தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து, Vaazhndhu - ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத்ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை, Kazhivaarai - மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ளவேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும், Vazhvikum - வாழ்விப்பான்.
2205இரண்டாம் திருவந்தாதி || இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ – அடியே துடங்கி இவன் சத்தியை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்- சம்சார ப்ரவர்தகனும் அவனே என்கிறது–அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன் இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ – அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் – 24
அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று.
நல்நெஞ்சே, Nalnenje - நல்ல மனமே!
ஆர் அருளும், Ar Arulum - பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும்
கேடும், Kedum - நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும்
அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன், Aimpulan - பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் ;, Kaatru Thee Neer Vaan Mann Aay Nindraan Aavan Kandai - பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானேயாவன்;
கருவரை, Karuvurai - கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்), Avan Kandai - அவனேயாம்;
சென்று, Sendru - (இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும், Kaar Otham Seetrum Thee Aavaanum - கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நியாகுமவனும்
அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானேயாம்.
2206இரண்டாம் திருவந்தாதி || அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் – இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது – உத்பத்தி யாதிகளேயோ -உதபன்னங்கள் ஆனால் பிரதிபந்தங்களைப் போக்குவானும் அவன் என்கிறது – இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் – அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் – 25
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
கொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து.
விண்ணவர் தம்வாய், Vinnavar Thamvaai - தேவர்களின் வாயினால்
ஓங்குதொல் புகழான், Onguthol Pugazhaan - உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழையுடைய எம்பெருமான்
செவ்வே, Chevve - நேராக
சென்றது, Sendradhu - சீறிச்சென்றது
இலங்கை மேல், Ilankai Mael - லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால், Than Seetrathaal - தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது, Kondradhu - ஸம்ஹரித்தது
இராவணனை, Iravanai - ராவணனையாம்;
கூறுங்கால், Kooraingkal - சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும், Vandhu Nindrathuvum - (சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே, Vey Ongu Than Saaral Vengadame - மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.
2207இரண்டாம் திருவந்தாதி || கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று – ஸ்ரீ திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் – ஸ்ரீ திருமலை பிரஸ்துதம் ஆகையாலே-பின்னையும் ஸ்ரீ திருமலைக்கு உள்ளே ப்ரஸ்துதம் சொல்லுகிறது கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே திரு உள்ளம் சென்று ஸ்ரீ திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் – 26
வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், – உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி.
படி அமரர், Padi Amarar - நிலத்தேவரான பிராமணர்கள்
வாழும், Vazhum - நித்யவாஸம் பண்ணுகிற
பதி, Pathi - திருப்பதியாகிய திருமலையென்பது,
வழிநின்ற, Vazhininra - (எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும், Aimpoodham Aindhum - பஞ்சபூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி, Agathu Adakki - வெளியிற்போகவொண்ணாதபடி நியமித்து
அவனை, Avanai - அவ்வெம்பெருமானை
வந்தித்து, Vandithu - வணங்கி
ஆர்வம் செய், Aarvam Sei - பக்தியுடையவர்களாய்
உந்தி, Undhi - ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மேல்விழுந்து
படி, Padi - வந்து படிகின்ற
அமரர், Amarar - தேவர்களுக்காக
வேலையான், Velaiyaan - திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த, Pandhu Amararukku Eentha - முன்னைத் தேவர்களான நிர்யஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.
2208இரண்டாம் திருவந்தாதி || அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது – கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே – நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் – கீழ் ஸ்ரீ திருமலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த பரிமாற்றம் கிடையாமையாலே- நினைத்த படி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்தில் இருக்கிறஸ்ரீ சர்வேஸ்வரனை தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் – இப்படி ஸ்ரீ திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்திலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் – 27
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம்.
பதி, Pathi - திருமலைத் திருப்பதியிலே
அமைந்து, Amaindhu - வேரூன்றி நின்று
நாடி, Naadi - எங்கேயென்று தேடிக்கொண்டு
பருத்து எழுந்த சிந்தை, Paruthu Ezhuntha Sindhai - மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய்
மதி உரிஞ்சி, Madhi Urinji - சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு
வான்முகடு நோக்கி, Vaanmugadu Nookki - (அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்துவிட்டு
மால்தேடி, Maalthedi - பரமபதநாதனைத் தேடிக்கொண்டு
கதிமிகுத்து ஓடும், Kathimiguthu Oodum - விரைவுமிகுந்து செல்லுகின்ற
மனம், Manam - என்னெஞ்சமானது
அம்கோல் தேடி ஓடும், Amkol Thedi Oodum - அழகிய கொள் கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது, Kozhunthu Adhu Ponthadhu - கொடியை ஒத்திரா நின்றது.
2209இரண்டாம் திருவந்தாதி || இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்தவாறே -பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது – இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது – இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது- இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பப்புக்கவாறே-அவன் இவருடைய மனசையே விரும்பா நின்றான் என்கிறது தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் – 28
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், – எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.
எனை பலரும், Enai Palarum - கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான், Devaadhi Devan Enappaduvaan - தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மாகடலான், Maakadalaan - பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள், Mun Oru Naal - முன்பொருகாலத்தில்
மா வாய் பிளந்த, Maa Vaai Pilantha - குதிரையுருக்கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன், Mahan - சிறுபிள்ளை யானவனும்
மற்றும், Mattrum - பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான், Ninaippu Ariya Neel Arangathu Ullaan - நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
மனத்து உள்ளாள், Manaththu Ullaal - என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.
2210இரண்டாம் திருவந்தாதி || மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே – அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் – ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே-அதிலே சுழி யாறு படுகிறார்- மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் – 29
மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, – மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ.
தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரி
நீறு ஆக, Neeru Aaga - நீறாகியொழியும்படி
எய்து, Eydhu - அம்புகளைச் செலுத்தி
அழித்தாய், Azhiththaa - முடித்தவனே!
மகன் ஆக கொண்டு எடுத்தாள், Mahan Aaga Kondu Eduththaal - உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை, Maanbu Aaya Kongai - அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு, Akan Aara Unpan Endru Undu - வயிறார உண்ணக்கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை, Mahanai - புத்ரனான உன் விஷயத்திலே
தாய், Thaai - உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம், Theeradha Vannam - நம்பிக்கையற்றிருக்கும்படி
திருத்தினாய், Thiruththinai - செய்துவிட்டாய்.
2211இரண்டாம் திருவந்தாதி || கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் – அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்- எல்லார் தலையிலும் ஒக்க திருவடிகளை–வைத்த அவதாரத்தை சொல்லுகிறது இப்படி ஸ்ரீ கிருஷ்ண விஷயமும் ஸ்ரீ ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் – 30
நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால், – நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான்.
பேர் ஓதம் மேனி பிரான், Peer Otham Meeni Piraan - பெரிய கடல் போன்ற திருமேனியையுடைய பெருமானே!
நீண்ட திருமாலே, Neenda Thirumaale - எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ, Nee - இப்படிப்பட்ட நீ
அன்று, Andru - முன்பொருகால்
உலகு, Ulaku - உலகங்களை
அளந்தாய், Alandhai - (திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ, Nee - நீ
அன்று, Andru - மற்றுமொரு காலத்தில்
உலகு, Ulaku - பூமியை
இடந்தாய், Idandhai - (மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
கார் ஓதம் முன் கடைந்து, Kaar Otham Mun Kadaindhu - கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை, Maa Kadalai - (அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின், Pin - பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய், Adaiththai - அணைகட்டித் தூர்த்தாயென்றும்
என்பர், Enbar - (மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.
2212இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்- இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – 31
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, – வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.
பிரான் என்றும், Piraan Endrum - ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும், Peru Pulari Endrum - ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு)
நாளும், Naalum - நாள்தோறும்
நல்குரா, Nalkura - நல்ல மணம்மிக்க
செழு, Sezhu - அழகிய
போது கொண்டு, Podhu Kondu - புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம், Varagathu Ani Uruvan Paatham - அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர், Paniyumavar Kandeer - வணங்குபவர்களே
மணி உருவம், Mani Uruvam - (அப்பெருமானுடைய) திவ்யமங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர், Magizhndhu Kaanbar - ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.
2213இரண்டாம் திருவந்தாதி || இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்- இவ்விஷயத்தில் நீர் செய்தது என் என்னில்-மநோ வாக் காயங்கள் அங்கே பிரவணம் ஆயிற்று என்கிறார் இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 32
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.
திருமாலே!, Thirumaale - லக்ஷ்மீபதியே!
சிந்தை, Sindhai - என் நெஞ்சமானது
மகிழ்ந்தது, Magizhndhadhu - (உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும், Mattrum - நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி, Un Paadame Potri - உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது, Magizhndhadhu - ஆநந்திக்கப்பெற்றது;
ஆகம், Aagam - என்னுடைய தேஹமானது
அழல், Azhala - எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி, Aazhi - திருவாழியையும்
சங்கம், Sangam - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை, Avai - மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும், Paadi Aadum - கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற
தொழில், Thozhil - வியாபாரத்திலே
சூழ்ந்து, Sozhndhu - பொருந்தி
துணிந்து, Thunindhu - இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது, Magizhndhadhu - களிக்கப்பெற்றது.
2214இரண்டாம் திருவந்தாதி || கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் – மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது – இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது – மகிழ்ந்த மாத்ரமேயோ–வேறொரு இடத்துக்கு ஆகாத படி யாயிற்று -என்கிறார் கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று – இதில் அவனை அனுபவிக்கையாலே மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் – 33
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை.
சிந்தை, Sindhai - என்மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர், Thuzhai Alangal Anindhavan Per - திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால், Palkal - பலமுறை
உள்ளத்து, Ullaththu - நினைப்பதில்
துணிந்தது, Thunindhadhu - த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்), Angamum Palkal - எனது உடலும் எப்போதும்
பணிந்தது, Panindhadhu - வணங்குவதாயிரா நின்றது;
வாயும், Vayum - என் வாக்கும்
வேய் பிறங்குசாரல், Veiy Pirangusaaral - மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விறல் வேங்கடவனை, Virhal Vengadavanai - திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே, Thirangaley - தன்மைகளையே
(பல்கால்), Palkal - எப்போதும்
சொல்லும் வகை, Sollum Vagai - சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது), Thunindhadhu - துணிவு கொண்டதாயிற்று.
2215இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் – உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது ஏவம் விதமான இப்பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் – 34
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, – மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி.
முன்னே, Munnay - முற்காலத்திலே
வகையால், Vagaiyaal - உபாயத்தினால்
அவனி, Avani - பூமியை
இரத்து, Iraththu - (மாவலிபக்கல்) யாசித்து
அளந்தாய், Alandhai - அளந்து கொண்டவுன்னுடைய
பாதம் புகையால், Paatham Pugaiyaal - திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால், Narumalaraal - நல்ல பரிமளமுள்ளபுஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி, Miga Vayndha Anbu Aakki - மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
எத்தி, Eththi - துதித்து
இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால், En Paakkiyathaal - நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன், Unakku Adimai Pattan - உனக்குத் தொண்டனாய் விட்டேன்.
2216இரண்டாம் திருவந்தாதி || அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும் ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் – இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்- இவ்விஷயம் கிடக்க-சப்தாதி விஷயங்கள் இனிது என்று இருப்பதே என்று வெறுக்கிறார் – இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும் உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் – 35
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று
காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது.
எந்தாய், Endhaai - என் ஸ்வாமி யானவனே!
காமம், Kaamam - ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர், Inidhu Enbar - போக்யமாகக் கொள்பர்;
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர், Thanneer Adhanilum Aatravum Inidhu Enbar - அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர், Kaamam Neer - (கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது, Inidhu Endru Velaadhu - போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல், Nin Perumai Siridhu Vedpar Ael - உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும், Semaam Neer Aagum - (எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையையுடையதாகும்
2217இரண்டாம் திருவந்தாதி || நாட்டார் செய்கிறபடி செய்கிறார்கள் -நெஞ்சே நீ முன்னம் அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்துக் கொண்டு ஸூகமே இருக்கப் பார் -என்கிறார் பூமிப்பார் பூமிக்கிறார்கள்-நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு – பிரமிப்பார் பிரமிக்கிறார் -விஷயங்களிலும் தேவதாந்தரங்களிலும் நீ இவ்வர்த்தத்தை புத்தி பண்ணி இரு -என்கிறார் நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே -நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்திக் கொண்டு ஸூ கமே இருக்கப் பார்–என்கிறார் – 36
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், – அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு.
சிறியார், Siriyar - (இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை, Perumai - (நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும், Siridhin Kan Eydhum - (தமக்குப்பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும், Ariyaarum - அவிவேகிகளும்
தாம் அறியார் ஆவர், Thaam Ariyaar Aavar - (நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே, En Nenchae - என் மனமே!.
அறியாமை, Ariyamaai - பிறர் அறியாதபடி
மண்கொண்டு, Mankondru - (மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு, Man Undu - இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த, Man Umizhndha - (பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று, Maayan Endru - ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண்கொண்டு, Enkondhu - இடைவிடாது கருதி
இரு, Iru - (அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.
2218இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் – சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் – நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் -என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்- சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார் இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் – 37
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு.
இரு, Iru - பெரிய
தண், Than - குளிர்ந்த
கமலத்து, Kamalaththu - திருநாபிக்கமலத்தின்
இரு மலரின் உள்ளே, Iru Malarin Ullae - பெருமை பொருந்திய பூவில்
திருந்து, Thirundhu - ஸமர்த்தனான
திசைமுகனை, Thisaimughanai - நான்முகக் கடவுளை
தந்தாய், Thandhaai - படைத்தருளின பெருமானே!
பொருந்திய, Porundhiya - ஸர்வலோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தியிருக்கிற
நின், Nin - உன்னுடைய
பாதங்கள், Paathangal - திருவடிகளை
ஏத்தி, Aethi - வாயாரத் துதித்து
பணியா ஏல், Paniya Ael - வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு, Emakku - எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம், Pal Pirappum Ellam - பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள், Aethangal - பயனற்றவையே யாம்
2219இரண்டாம் திருவந்தாதி || இனி எந்த ஜன்ம பலமாகி யாகிறது -எங்கனே செய்தால் என்னில் பிறர்க்கு ஆனவற்றைத் தனக்காக அபிமானித்து இருக்கை அன்றிக்கே ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும் நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார் அர்த்தத்தை புருஷார்த்தம் என்று புத்தி பண்ணி இராதே ஸ்ரீ யபதியை அனுபவிக்குமதுவே எல்லார்க்கும் செய்யப் படுவது -என்கிறார்- எமக்கு என்று அர்த்தத்தை புருஷார்த்தமாக புத்தி பண்ணி இராதே ஸ்ரீயபதியை ஆஸ்ரயித்து இரு என்கிறார்- அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது – ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் – 38
எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து , – நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து.
இரு நிதியம், Iru Nidhiyam - (இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று, Emakku Endru - தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே, Aemaandhu Iraadhe - மனச்செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து, Thamakku Endrum Saarvam Arindhu - தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தையறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து, Namakku Endrum Maadhavane Ennum Manam Padaiththu - ‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று துணிந்திருக்கும் நெஞ்சையுடையராய்
மற்று, Mattru - அதற்குப்பின்பு
அவன் பேர், Avan Per - அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே, Othuvathe - ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து, Naavinal Oththu - நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.
2220இரண்டாம் திருவந்தாதி || நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் -சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது – அது மாட்டாதவர்கள் அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம் ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே – ஆனபின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் – இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயாராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே -நீரும் ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று சொல்லுகிற படி எங்கனே என்னில் உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்- தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார் – இந்த்ராதிகளையும் ஆஸ்ரய ணீ யாராகச் சொல்லா நிற்கச் செய்தே-நீரும் பிரமாணிகராய் இருந்து- ஸ்ரீ லஷ்மி பதியே சமாஸ்ரயணீயன் என்று சொல்லுகிறபடி-எங்கனே என்னில் உங்களுக்கு அபிதான வ்ருத்தியேயாய்-தாத்பர்ய ஞானம் இல்லாமையாலே சொல்லுகிறிகோள்- தாத்பர்ய ஞானம் உண்டாகில்-அவர்களைச் சொல்லுகிறது விபூதித்வேந – விபூதிமானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்-லஷ்மி பதியே என்று இருங்கோள் என்கிறார்- நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும் அது மாட்டாதார் -ஸ்ரீ த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும் இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-அதிகார அநு குணம் விதிக்கிறார் – 39
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,
உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.
ஏழைகாள், Ezhaikal - ‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை, Oththu Adhanai - வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல், Vallir Ael - ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று, Nandru - அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல், Adhanai Maattir Ael - அது செய்ய சக்தியற்றவர்களாகில்
மாதவன் பேர், Maadhavan Per - திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே, Solluvathe - உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு, Othin Surukku - ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே, Othin Porul Mudivum Ithanaiye - வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன், Uththaman - புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம், Aeththum Thiram - (அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின், Arimin - தெரிந்து கொள்ளுங்கள்.
2221இரண்டாம் திருவந்தாதி || கீழே வேதாந்தத்தால் நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே – இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் – அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது -ஆனபின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது – அதுதானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள் -என்கிறார்- நீங்கள் நிற்கிற நிலை பொல்லாது-கடுக ஸ்ரீயபதியினுடைய திருவடிகளை நினையுங்கோள்- இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச் சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 40
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள்.
ஐயார், Aiyaar - கோழையானது
சுருக்காக வாங்கி, Surukkaka Vaangi - சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று, Sulaavi Nindru - உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன், Nerukkaamun - (உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம், Thiru Polintha Aagaththaan Paatham - பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின், Neer Ninaimin - நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும், Arindum - பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத, Ariyadha - அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால், Pogaththal - சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை, Porul Illai - ஒரு ப்ரயோஜனமுமில்லை.
2222இரண்டாம் திருவந்தாதி || திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே – அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்- தன் கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன் திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே -தம் வைஸ்யத்துக்கு உடலாய்த் தம் திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் – 41
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, – அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே நினை.
அமருலகம், Amarulagam - சுவர்க்கலோகத்தை
பொருளால், Porulal - ‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்குஇயலல் ஆகாது, Pukkuyiyalal Aagathu - போய்ச்சேர முயல்வது தகாது;
அருளான், Arulaan - பரமதயாளுவான எம் பெருமான்
அறம், Aram - புண்யத்தின் பயனான சுவர்க்கலோகத்தை
அருளும் அன்றே, Arulum Andrae - தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே, Arulale - கிருபையினாலே
மா மறை யோர்க்கு, Maa Marai Yorkku - மஹர்ஷிகளுக்கு
ஈந்த, Eentha - முக்தியளித்த
மணிவண்ணன் பாதமே, Manivannan Paathame - நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல், Nenjey Nee Maraveyl - நெஞ்சே! நீ மறவாதே
நினை, Ninai - தியானித்துக் கொண்டிரு.
2223இரண்டாம் திருவந்தாதி || புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் – அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்- சம்சார சுகத்தை துறந்தவர்கள்-அத் தோளைத் தொழப் பெறுவார்கள்- இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் – 42
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், – மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள்.
திருமாலை, Thirumalai - லக்ஷ்மீநாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான், Neenda Thol Kaana Ninaippaan - (அவனது) சிறந்த திருத்தோள் களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார், Ninaippaar - இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார், Ondru Pirappum Neeraar - ஒருவகை யோனிப் பிறப்பையும் அடையமாட்டார்கள்
அத்தோள், Atthol - அந்தத் திருத்தோள்களை
தொழுதார், Thozhudhar - தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார், Manaippaal Pirandhaar Pirandhu Eydhum Peer Inbam Ellama Thurandhaar - ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால் அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.
2224இரண்டாம் திருவந்தாதி || நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் – எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவாரைத் தொழ அமையும் – அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் – தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும் இத்தனை என்கிறார் – எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் – அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் – 43
தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், – தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே, என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு?
தோள் இரண்டு எட்டு எழும் மூன்றும், Thol Irandu Ettu Ezhum Moondrum - இருபது தோள்களும்
வீழ, Veela - முடியும்படி
சரம் துரந்தான், Saram Thurandhaan - அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும், Thaal Irandum - இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர், Thozhuvaar Aar - தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும், Mudi Anaithum - (பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும், Thaal Irandum - இரண்டு கால்களும்
பாதம் அவை, Paatham Avai - திருவடிகளை
தொழுவது அன்றே, Thozhuvathu Andrae - ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழுதோள் செய்யும் சிறப்பு, En Seer Kezhuthol Seyyum Sirappu - எனது அழகியதோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.
2225இரண்டாம் திருவந்தாதி || இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் – ஸ்ரீ பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே ஸ்ரீ பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் – இதில் ஸ்ரீ எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் – திருநாமத்தை சொன்னவர்களுக்கு-பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் – இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் – 44
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.
சிறந்தார்க்கு, Sirandhaarkku - ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம், Ezhuthunai Aam - உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம், Naamam - திருநாமத்தை
மறந்தாரை, Marandhaarai - மறப்பவர்களை
மானிடம் ஆ, Maanidam Aa - மநுஷ்ய்யோனியிற் பிறந்தவர்களாக
வையோன், Vaiyon - என்னெஞ்சில் கொள்ளமாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து, Aram Thaangum Maadhavane Ennum Manam Padaiththu - “தர்மஸ்தாபநம் பண்ணவல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால், Sem Kanmaal - செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று, Mattru - மேலும்
அவன் பேர், Avan Per - அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே, Naavinal Othuvadhe - நாவினால் சொல்லுவதையே
உள்ளு, Ullu - (ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)
2226இரண்டாம் திருவந்தாதி || இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும் சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் – நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்- நித்ய சூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயமானவனுடைய-திருவடிகளை பயிலுமவர்கள் அர்த்ததினுடைய லாப அலாபங்களுக்கு ஈடுபடார் இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும் ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் – 45
உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார், – அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று.
அளவு அரிய வேதத்தான், Alavu Ariya Vedaththan - அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான், Venkatat Than - திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று, Payinru - பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார், Uladu Enru Irumavan - தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று, Undu Illai Enru - (செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடிதோயும் பாதத்தான், Vinnor Mutithoyum Pathaththan - நித்யஸூரிகளின் முடிகள் பணியப்பெற்ற திருவடிகளையுடையனுமான எம்பெருமானுடைய
பாதம், Patham - திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார், Thalartal Atan Arugum Sarar - தளர்ச்சியடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.
2227இரண்டாம் திருவந்தாதி || இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் – இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது – ஸ்ரீ எம்பெருமானுக்குப் புறம்பு லாபாலாபம் இன்றிக்கே இருக்கிறபடி – இவன் -பரித்யக்தா மயா லங்கா -என்றால் – அவனும் -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்று இவனை எல்லாமாகப் பற்றும் அத்தனை இறே – அவன் பயிற்றி இறே இவனைப் பயிலப் பண்ணுவது – சர்வேஷாம் ஹி ச தர்மாத்மா வர்ணா நாம் குருதே தபாம் சதுர்ணாம் ஹி வயஸ்தானாம் தேன தே தம நுவ்ரதா-அயோத்யா -17-18-என்றபடி – சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி – அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் -இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டாக் இறே – இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் – இவர்களை இப்படி பயிலப் பண்ணுகைக்கு-இவர்கள் பட்டது அன்று-அவன் படுவது – இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத் தன்னைச் செறிந்து அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி பல ஸ்ரீ திருப்பதிகளிலும் அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் – 46
பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.
மணி திகழும், Mani Tihalum - நீலமணிபோல் விளங்குமவனும்
வண் தடகை, Van Tatakai - உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால், Maal - எம்பெருமான்
பயின்றது, Payinradhu - நித்யவாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி, Arankam Tirukkotti - திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள், Pal Nal - அநாதிகாலம்
பயின்றதுவும், Payinradhuvum - நித்யவாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே, Venkatame - திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை, Ani Tihalum Solai - அழகு விளங்குகின்ற சோலைகளையுடைத்தாய்
அணி, Ani - இந்நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை, Nirmalai - திருநீர்மலையாம்.
2228இரண்டாம் திருவந்தாதி || அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் – அவன் ஸ்வ பாவம் இப்படி யானபின்பு-எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறது – அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல ஸ்ரீ திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும் ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 47
மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி, – ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து.
ஞாலம், Njaalam - பூமி முழுவதையும்
அளந்து, Alanthu - ஒரு கால் அளந்தும்
இடந்து, Idanthu - மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு, Undu - (பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்தியும் இப்படியெல்லாம் (ரக்ஷணத்தொழில்) செய்த
அண்ணலை, Annalai - ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால், Mattru Allaal - கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல், Ulam Kidantha Aatral - (அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலேகிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து, Unarndhu - அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை, Maalai - மாலைப்பொழுதிலே
அரி உருவன், Ari Uruvan - நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம், Patham - திருவடிகளை
மலர், Malar - புஷ்பங்களாலே
அணிந்து, Anindhu - அலங்கரித்து
காலை, Kaala - சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது, Kaikoli Thozhudhu - கைகூப்பிவணங்கி
எழுமின், Ezhumin - உஜ்ஜீவியுங்கள்
2229இரண்டாம் திருவந்தாதி || நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் – கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி – எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் – உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான் ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் – 48
உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. – மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை.
மாலே, Maale - ஸர்வேச்வரனே!
மறை நான்கும், Marai Naanthum - நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய், Unarndhaai - (பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி, Neethi - அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய், Othinai - (மநுமுதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச்செய்கின்றாய்
மலர் மகள், Malar Magal - பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள், Thol - திருத்தோளோடே
மணந்தாய், Manandhai - கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல், Vey Irum Saaral - மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையையுடையதும்
இரு ஞாலம் சூழ், Iru Nyaalam Soozh - பரந்த இப்பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோலமலைபோய், Maayirunj Cholamalai Poi - திருமாலிருஞ் சோலைமலையிலேவந்து
மணந்தாய், Manandhai - திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்
2230இரண்டாம் திருவந்தாதி || நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா – ஆனபின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் – ஸ்ரீ திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார் நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே சந்நிஹிதன் ஆனபின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் – 49
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், – முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே அழை.
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
மலை ஏழும், Malai Ezhum - ஸப்த குலபர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும், Maa Nilangal Ezhum - ஸப்தத்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும், Kulai Soozh Kurai Kadalgal Ezhum - கரையாலே சூழப்பட்டு ஒலிசெய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர, Adhira - அதிரும்படியாக
நாவன் என்று, Naavan Endru - திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை, Mulai Soozhntha Nanju Urathu Pennai - “முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையையுடைய (பூதனையென்னும்) பேய்மகனை
நவின்று, Navinru - (முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக்கொண்டே
உணட, Unada - உண்டுமுடித்த
அஞசாது, Anjasadhu - கூசாமல்
அழை, Azhai - வாய்விட்டுக்கூப்பிடு
2231இரண்டாம் திருவந்தாதி || திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்- திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத் தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்- திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை அனுசந்திக்கப் புக்கால் பிழைக்க அரிதாய் அத்தாலே அரை ஷணம் விடப் போகாத திரு நாமங்களைச் சொல்லி ஸ்ரீ ய பதியை அழைப்பன்- இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லி – உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீயபதியான அந்த ஸ்ரீ சர்வேஸ்வரனை -அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் – 50
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, – இழைப்பரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து.
இழைப்பு அரிய, Izhaiyppu Ariya - ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும், Aayavaney Endrum - கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும், Maayavaney Endrum - (குணசேஷ்டிதங்களினால்) ஆச்சரியபூதனே என்றும்!
மதித்து, Mathithu - அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன, Aangu Avargal Sonna - அத்திருவாய்ப்பாடியிலுள்ளவர்கள் சொல்லியழைத்த யதுகுலத்தில்
யாதவனே என்றும், Yaadhavane Endrum - (வஸுதேவர்மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி, Pizhaippu Ilperu Peyare Paesi - குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும், Yaar Mukappum - எல்லாரெதிலும்
திருமாலை அவனை, Thirumalai Avanai - திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன், Alaippan - கூப்பிடாநின்றேன்.
2232இரண்டாம் திருவந்தாதி || இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் – பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நிறத்தை அனுசந்தி- இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் -நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப்போல் கலங்கி தளராதே அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்- 51
மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை, – மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்.
நெஞ்சே, Nenchae - மனமே!
மணி வண்ணன் பாதம், Mani Vannan Paatham - நீலமணிவண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய், Madi Kandaai - அநுஸந்திக்கக்கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து, Per Aazhi Nindru Peyarnthu - பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த, Kadal Kadaindha - தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக்கடலைக் கடைந்த
மதிகண்டாய், Madhikandai - சிந்திக்கக்கடவாய்
மற்று, Mattru - இன்னமும்
அவன் பேர் தன்னை, Avan Per Thannai - அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம், Neeraazhi Vannan Niram - கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதி கண்டாய், Madi Kandaai - நினைக்கக்கடவாய்
2233இரண்டாம் திருவந்தாதி || திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும் ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்- ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் நீல மேகத்திலே மின்னற் போலே ஸ்ரீ பிராட்டியை திரு மார்பிலே உடையானாய் அவளோட்டை கலவியாலே ஆந்ரு சம்சய பிரதானனான் ஆனபடியை யார் அறிவார் திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய வடிவு அழகையும் ஸ்ரீ பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து – இது ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் 52
நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,
அறம்பெரிய னார தறிவார்? – மறம்புரிந்த
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து ,
நீளிருக்கைக் குய்த்தான் நெறி.
நிறம் கரியன், Niram Kariyaan - (காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன், Seyya Nedu Malaraal Maarvan - சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன், Aram Periyan - அருளில் பெருத்தவன்
மறம் புரிந்தவாள், Maram Purindhavaal - பகைபாராட்டின
அரக்கன் போல்வானை, Arakkan Polvaanai - வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை (இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து, Vaanavar Kon Thaanththu - தேவேந்திரனுடைய லோகமானஸ்வர்க்கம்போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள இருக்கைக்கு, Neela Irukkaikku - நீண்டகாலம் வாழும்படியாக
உய்த்தான், Uyithaan - செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது, Neri Adhu - அவ்வருள் வகையை
ஆர் அறிவார், Ar Arivaar - யார் தெரிந்து கொள்ளவல்லர்?
2234இரண்டாம் திருவந்தாதி || இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் – ஸ்ரீ திருவேங்கடமே நாம் ஆசைப்படும் ஸ்ரீ திருமலை -ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் – இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் – 53
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
அறியா திளங்கிரியென் றெண்ணி, – பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு.
நெறியார், Neriyaar - திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது, Soozhal Kattrai Mun Nindru Pin Thaazhnthu Ariyaadhu - கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்யவ்யக்தியென்று தெரிநிது கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி, Ila Giri Endru Enni - இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக்கொண்டு
பூங்கொடிகள், Poongodigal - பூங்கொடிகளானவை
பிரியாது, Priyaadhu - அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும், Vaikum - நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும், Poru Punal Kuntru Ennum - அலை யெறிகின்ற ஜலஸம்ருத்தியை யுடைத்தான திருமலையென்று ப்ரஸித்தமான
வேங்கடமே, Venkatame - திருவேங்கடமே
யாம் விரும்பும், Yaam Virumbum - நாம் ஆசைப்படவுரிய
வெற்பு, Verppu - திருமலையாகும்.
2235இரண்டாம் திருவந்தாதி || இவனுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருமலை அளவும் அவர் விரும்பினவாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே பண்ணினானாய் இருக்கிறது – இவன் ஸ்ரீ திருமலையை விரும்பிப் புக்கவாறே-அவன் இவருடைய ஹிருதயத்தை விரும்ப பிரானே -அவற்றை கை விடாத ஒண்ணாதே என்கிறார் இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு ஸ்ரீ திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத் தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் – 54
வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று.
வெற்பு என்ற, Verppu Endra - (தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை, Iruncholai - திருமாலிருஞ் சோலையென்ன
வேங்கடம், Vengadam - திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும், Enna Iv Irandum - ஆகிய இத்திருமலை களிரண்டும்
நிற்பு என்று, Nirppu Endru - நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல், Nee Mathikkum Neermai Pol - நீ திருவுள்ளம்பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில், Ulam Koyil - (என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று, Nirppu Endru - நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து, Ullam Vaitthu - பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில், Vellathu Ila Kovil - திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று, Kaivideel Endru - கைவிட வேண்டா என்ற
உள்ளினேன், Ullinena - பிரார்த்திக்கின்றேன்.
2236இரண்டாம் திருவந்தாதி || இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் – அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் – இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்- உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் – இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன் தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் – 55
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், – வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண்.
வென்றி, Vendri - ஜய சீலமாய்
அடல், Adal - திக்ஷணமான
ஆழி, Aazhi - சக்கரத்தை
அறிவனே, Arivane - ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் விறப்பும், Ezhu Virappum - இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால், Ninru Ninaippu Ozhia Neermiyal - ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன், Endrum Marandariyen - உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி, Inbam Kadal Aazhi - ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக்காண், Arulikkaan - எனக்கு அருள வேணும்.
2237இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பேறு அவனாலே என்று கொண்டு நிச்சயித்தாராகில் -அவன் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை போக்கி நெடும் காலம் சம்சரித்துப் போந்த நீர் அருள் என்று வடிம்பிடக் கடவதோ என்ன – அப்படியே அது செய்யலாவது -ஸ்வரூப ஞானம் யுடையாருக்கு அன்றோ – முன்னடி தோற்றாதபடியான ப்ரேமம் அடியாக வந்த இருட்சி யுடையாருக்கும் பற்றாசும் அங்கே யுண்டாகையாலே அத்தனை கார்யப் பாடு பார்த்துத் தானே தன்னைத் தருகிறான் என்று ஆறி இருக்க வேணுமோ என்கிறார் – நீர் சேஷ பூதர் ஆனாலும் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாக இருக்க வேண்டாவோ – சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் – அது வைதமான படி இறே -ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் – நீர் சேஷபூதர் ஆனால் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாய் இருக்க வேண்டாவோ – சேஷியை இப்படி நியமிக்கக் கடவதோ -என்னில்- அது விதேயமான போது இறே-ஆசை மிக்கால் செய்யல் ஆவது உண்டோ என்கிறார் – இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் என்று கொண்டு வடிம்பிட்டு நிர்பந்திக்கக் கடவதோ என்ன ப்ரேமம் அடியாக வந்த இருட்சி உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் – 56
காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
நாணப் படுமென்றால் நாணுமே? – பேணிக்
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
திருமாலை நாங்கள் திரு.
திருமாலை காண கழி காதல், Thirumalai Kaan Kazhi Kaadhal - எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கைமிக்கு காட்டினால் நாணப்பம என்றால், Kaimikku Kaattinaal Naanaappam Endraal - மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்கவேணுமென்றால் அடங்கியிருக்க முடியுமோ?
கருமாலை, Karumalai - கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன், Pon Meni Kaattaa Mun - அவனது அழகிய திருமேனி தானே காட்டிக்கொடுப்பதற்கு முன்னே
நாங்கள் திரு, Naangal Thiru - நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி, Peni - விரும்பி
காட்டும், Kaatum - காட்டிக்கொடுப்பன்
2238இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்- நாங்கள் அவனுடைய பேரையும் திருவடிகளையும் சேஷபூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம் இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாச்ரயணீயன் -என்கிறது – 57
திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், – உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்?
திரு மங்கை, Thiru Mangai - பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம், Ninrarulum Deivam - நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம், Naa Vaazhthum Karumam - நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம், Patham - திருவடிகளையும்
பேர், Per - திருநாமங்களையும்
உரிமையால், Urimaiyaal - ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம், Aethinome - போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர், Kadaippidi Min Kandheer - உறுதியாகப் பற்றுங்கள்
நாம், Naam - நாமோவென்றால்
இது தடைகை எத்தை, Idhu Thadaikai Eththai - மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும், Naal Thisaiyum - நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே, Kaettire - கேட்டீர்களோ?
2239இரண்டாம் திருவந்தாதி || நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்- நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–ஸ்ரீ சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து என்னை ஓதி வைத்தது என்கிறார் – நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் – 58
நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, – வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,
அருள்நீர்மை தந்த அருள்.
வேம்பு பொருளின் நீர்மை ஆயினும், Vembu Porulin Neermai Aayinum - (எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும் வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகந்தோன்றினாலும்
பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தியழகை)
பாடு என்று, Paadu Endru - பாடக்கடவாய் என்று
நா மங்கை, Naa Mangai - ஸ்ரஸவதியானவள்
நெஞ்சத்து, Nenchatthu - (நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து, Ombi Irundhu - ஆதரித்து இருந்து
எம்மை, Emmai - நீர்மைக்கொண்டு
ஓது வித்து, Othu Viththu - பகவத்விஷயத்தைப் பாடச்செய்ததனால்
நாம் பெற்று நன்மையும், Naam Pettru Nanmaiyum - தாம் அடைந்த ஸுக்குதமு (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள், Arul Neermai Thanda Arul - அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.
2240இரண்டாம் திருவந்தாதி || இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்- ஆராய்ந்து பார்த்து பரதந்த்ரமாய் இருக்கையாலே என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன் அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம் இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் – 59
அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, – இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.
அருள் புரிந்த சிந்தை, Arul Purindha Chinthai - அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து, Adiyaar Mael Vaiththu - அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து, Porul Therinthu - அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது, Kaankutra Appodhu - கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து, Irul Irinthu - அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன், Nookkinen - ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி, Nookki - அப்படி ஆராய்ந்து
ஒன் கமலம் அது, On Kamalam Adhu - அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை
நினைந்தேன், Ninaindhen - (ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து, Oorndhu - (இத்திருவடிகள் தவிர நமக்கு வேறுபுகலில்லையென்று நிரூபித்து
என்னையும், Ennaiyum - ஆத்மாவையும்
அங்கு, Angu - அத்திருவடிகளிலே
ஒக்கினேன், Okkinen - ஸமர்ப்பித்தேன்.
2241இரண்டாம் திருவந்தாதி || இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர்யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் – தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூமியை முறை குலையாமல் காப்பார் -தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே- இப்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே – நிரங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம் என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் – 60
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று.
ஓர் உருவம் அல்லை, Oor Uruvam Allai - (எம்பெருமானே) பரத்வமேவடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம், Oli Uruvam - ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம், Nin Uruvam - உனது வடியாம் (இப்படி ஆச்ரிதபாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர், Iru Nilaththoor - இப்பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர், Eer Uruvan Enbar - பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம், Oor Uruvam - ஆச்ரிதபாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம், Aadhi Aam Vannam - எல்லார்க்கும் உஜ்ஜீவநஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர், Arindhaaravar Kandeer - தெரிந்துகொள்ளுமவர்களே
நீதியால், Neethiyaal - நியாயப்படி
நின்று, Ninru - நிலைத்து நின்று
மண் காப்பார், Man Kappaar - உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.
2242இரண்டாம் திருவந்தாதி || கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் – வடிவே அன்று – அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது – நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் – 61
நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், – அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு.
அன்று கருமாணி ஆய், Anru Karumaanai Aay - முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த, Iranda - (மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த
கள்வனே, Kalvaney - க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம், Ninradhu Oor Paatham - (பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம், Nilam - பூமண்டலத்தை
புதைப்ப, Puthaippa - ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள், Neenda Thol - விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று, Thisai Ellam Sendru - திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர், Alandhadhu Enbar - (மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு, Unnai Piramaanikkaar Petra Peru - உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்
2243இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி – என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது- ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே- நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது – இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும் தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் – 62
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.
பெண் நசையின் பின் போய், Pen Nasaiyin Pin Poi - நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின், Erin - விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம், Perutha Erutham - பெருத்த முசுப்புகளும்
கோடு, Kodu - கொம்புகளும்
ஓசிய, Oosiya - முறியும்படியாக
எருத்து, Eruthu - (அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த, Irutha - முறித்த
நல் ஆயர் ஏறு, Nal Aayar Eru - விலக்ஷணனான கோபாலகிருஷ்ணன்
மாறு, Maaru - (நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி, Endru Solli - என்றெண்ணி
வணங்கினேன், Vananginena - அவனை ஆச்ரயித்தேன்
முன், Mun - இதற்குமுன்பு
பேறு ஒன்றும் அறியேன், Peru Ondrum Ariyena - இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால், Pedaimaiyala - அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன், Petru Ariyena - அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.
2244இரண்டாம் திருவந்தாதி || அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது ஆபத்து ஒரு தலையானால் -ஸ்ரீ பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசியறத் தானே போக்கும் என்கிறார் – இத்தால் ஸ்ரீ எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் – அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் -தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது- அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் – 63
ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் – பாறேறி உண்டதலை
வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.
ஏறு ஏழும், Eru Ezhum - ரிஷபங்களேழையும்
வென்று, Vendru - ஜயித்து
அடர்த்த, Adarttha - தொலைந்த
எந்தை, Endhai - ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட, Eri Uruvaththu Eru Eri Patt - நெருப்புப்போன்ற உருவத்தையுடையவனும் வருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
வீடு சாபம், Veedu Saapam - எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய, Paaru Eri Unda Thalaivai Niraiya - பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு, Kodu - குவிந்த
அம் கை, Am Kai - அழகிய திருக்கையாலே
ஒண் குருதி, On Kuruthi - அழகிய ரத்தத்தாலே
கண்ட பொருள், Kanda Porul - அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில், Sollil - சொல்லத்தொடங்கினால்
கதை, Kathai - பெரியதொரு பாரதகதையாக முடியும்.
2245இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் – இதிகாச புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில் நிர்ணீதமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களை சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் – 64
கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில், – கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
பருமொழியால் காணப் பணி.
கண்ணா, Kannaa - கண்ணபிரானே!
கதையும், Kathaiyum - இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும், Peru Porulum - அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம், Idhayam - அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே, Irundha Vaiye - உள்ளது உள்ளபடியே
ஏலத்தில், Elathil - அறிந்து துதித்தால்
நின் பேரே, Nin Pere - (அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே, Kathaiyin Thirumozhi Aayinindra Thirumaale - இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை, Unnai - உன்னை
பருமொழியால் காண, Parumozhiyal Kaan - பரிபூர்ண சப்தங்களாலேகண்டு அது பவிக்கும்படி
பணி, Pani - திருவுள்ளம் பற்றிவேணும்
2246இரண்டாம் திருவந்தாதி || இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன – அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன்பக்கல் ருசி -என்கிறார் – ஸ்ரீ பெருமாள் புக்கு அருளினால் பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன் இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் – 65
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், – துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.
திருமெனி, Thirumeniy - உனது திருமேனியை
பணிந்தேன், Panindhen - ஸேவித்தேன்
உன் சே அடி மேல், Un Che Adi Mel - உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம், Pai Kamalam - அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய், Anbu Aay - அன்புகொண்டு
கையால் அணிந்தேன், Kaiyal Anindhen - கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை, Unnai - உன்னை
புரிந்து ஏத்தி, Purindhu Aethi - விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து, Pugal Idam Paarthu - பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி
ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன், Aange Irundhu Aethivaazhum Ithu Thunindhen - அவ்விடத்திலேயே இருந்துகொண்டு மங்களாசாஸநம் பண்ணி வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.
2247இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் – ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று- பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை- ஏத்துகையில் துணிகை அன்று – 66
இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, – இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
இப்பிறவி ஆவது இது கண்டாய், Ippiravi Aavathu Ithu Kandaai - இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப்பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய், Naam Utrathu Ellam Ithu Kandaai - (இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதி, Othi - ஸங்கீர்த்தனம் பண்ணி
நாகத்து, Naagathu - ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு, Arugu - ஸமீபத்திலும்
அணையா காரணமும், Anaiyaa Kaaranamm - நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய், Idhu Kandaai - இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்;
வல்லை ஏல், Vallai Eel - நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண், Kaan - எல்லாம் தெரிந்து கொள்.
2248இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானுடைய அழகிய திரு மேனியைக் காணப் பெற்றேன் – ஸ்ரீ ஆழ்வார்கள் பஷத்தால் குணாதிகள் ஆநுஷங்கிதம்-தன்னடையே வருவது- அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி பின்பு வாசனையும் போக்குமவனுடைய மிடுக்கைக் கண்டேன் வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்- இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் – 67
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, – கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
யான், Yaan - அடியேன்
கனவில், Kanavil - ஸவப்நம்போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி, Thirumeeni - திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன்
ஆங்கு, Aangu - அப்போது
அவன் கை, Avan Kai - அவனது திருக்கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன், Kanalum Sudar Aazhi Kandeen - ஜ்வலிக்கிற சுடர்மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும், Uru Nooi Vinai Irandum - மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து, Ottuviththu - தொலைத்திட்டு
பின்னும், Pinnum - பின்னையும்
மறு நோய் செறுவான், Maru Nooi Seruvaan - மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி, Vali - மிடுக்கையும்
கண்டேன், Kandeen - காணப்பெற்றேன்.
2249இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜ நாந்தர பரரே யாகிலும் தன் பகலிலே வந்து அர்த்தித்தால் பொறுக்க மாட்டாமை -ஆளிட்டு அந்தி தொழாதே உடம்பு நோவத் தான் ஆயாசித்தே யாகிலும் அவர்களுக்கு கார்யம் செய்து கொடுக்குமவன் -என்கிறார் – இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச்சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது – இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது – தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை – இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே உப்புச் சாறு கொள்ளுமவர்களை சொல்லுகிறது- பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் -அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் – 68
வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, – வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ.
வலிமிக்க, Valimikka - மஹாபலசாலிகளாய்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற கோரப்பற்களையுடையராய்
வாள், Vaal - வாட்படையையுடையரான
அவுணர், Avaunar - ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள, Maal - முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள்வரை மத்து ஆக, Vali Mikka Vaalvarai Mattu Aaga - மிக்க வலிவுள்ளதாய் ஒளியையுடைத்தான மந்தர மலையை மத்தாகக்கொண்ட
வலி மிக்க வாள் நாகம், Vali Mikka Vaal Naagam - அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி, Suttri - கடைகயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான், Kadal Maruga Kadaindhaan - கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம், Kool Naagam - மிடுக்கையுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது
கொம்பு, Kombu - கொம்புகளை
ஒசித்த, Osiththa - முறித்தொழித்த
கோ, Ko - ஸ்வாமியாவன்
2250இரண்டாம் திருவந்தாதி || அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ- நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்- ராஜாக்களும் அழகிய தாமரைப் பூவை திரு நாபியில் உடையவனானவனுடைய திருவடிகளிலே குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த தமர்கள் இறே ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தாங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில் ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் – 69
கோவாகி மாநிலம்காத்து,நங்கண்முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் – பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
தண்கமல மேய்ந்தார் தமர்.
கோ ஆகி, Ko Aagi - ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து, Maa Nilam Kaathu - பரந்த பூமண்டலத்தை அரசாட்சிபுரிந்து
நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற, Maa Aegi Selkindra - குதிரையேறித்திரிகின்ற
மன்னவரும், Mannavarum - அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும், Sem Kamalappoo Mevum - செந்தாமரை மலர் பொருந்தியிருக்கப் பெற்ற
நாபியான், Naabiyan - திருநாபியையுடைய பெருமானுடைய
சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும், Ezha Pirappum - பலபல ஜன்மங்களிலே
தண் கமலம், Than Kamalam - அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார், Eyndhaar - ஸமர்ப்பித்தவர்களான
தமர், Thamar - பக்தர்களாவர்
2251இரண்டாம் திருவந்தாதி || இப்படி இருக்கிறவர்கள் தன்னை அனுகூலித்த அன்று அவர்களுடைய ஹ்ருதயங்களுக்கும் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் ஒரு வாசி வைத்து பரிமாறான் அவன் என்கிறார் – அன்றிக்கே -தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது – ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது ஆக -அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும் ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் – தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது- தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது – இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து – அருளின ஸ்ரீ திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் – 70
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, – தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம்.
தமர் உள்ளம், Thamar Ullam - பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை, Thanjai - தஞ்சைமாமணிக்கோயில்
தலை அரங்கம், Thalai Arangam - சிறந்ததான திருவரங்கம்
தண் கால், Than Kaal - திருத்தண்கால்
தமர் உள்ளும், Thamar Ullum - பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு, Than Poruppu - அழகிய திருமலை
வேலை, Vela - திருப்பாற்கடல்
தமர் உள்ளம், Thamar Ullam - பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை, Maa Mallai - திருக்கடன்மல்லை
கோவல், Koval - திருக்கோவலூர்
மதிள் குடந்தை, Mathil Kudandhai - திருமதில்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர், Eyvalla Endhaikku Idam Enbar - எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.
2252இரண்டாம் திருவந்தாதி || சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து நித்ய சூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது – ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் – அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் – கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது – அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் – சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ் சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்- கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் – 71
இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி, – விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
பூவா ரடிநிமிர்ந்த போது.
விடம் காலும், Vidam Kaalum - விஷத்தைக்கக்குகின்
தீ வாய், Thee Vaai - பயங்கரமான வாயையுடைய
அரவு, Aravu - திருவனத்தாழ்வானாகிய
அணை மேல், Anai Mel - சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல், Thonral - ஸர்வேச்வரன்
வலம்புரி, Valampuri - சங்கானது
இடங்கை, Idangai - இடத்திருக்கையில்
நின்று, Ninru - இருந்து டிகாண்டு
ஆர்ப்ப, Aarppa - முழங்க
ஆழி, Aazhi - திருவாழியானது
திசை, Thisai - எல்லாவிட“களையும்
அளப்பான், Alappaan - அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி, Poo Aar Adi - பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது, Nimirtta Podhu - உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று, Eri Kaandru - நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார், Adangaar - எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து, Odunguviddhu - வாய்மாளப் பண்ணிற்று
2253இரண்டாம் திருவந்தாதி || அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க- அது வேண்டா காண்-திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் – ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – ஸ்ரீ திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது- அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து -திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – 72
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங் கடவன்பே ராய்ந்து.
வானரங்கள், Vaanarangkal - குரங்குகளானவை
போது அறிந்து, Podhu Arindhu - விடியற்கால முணர்ந்து (எழுந்துபோய்)
பூ சுனை புக்கு, Poo Sunai Pukku - புஷ்பித்த நீர்நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும், Aethum - தோத்திரஞ் செய்யாநின்றன
உள்ளம், Ullam - மனமே!
போது, Podhu - (நீயும் அப்படிசெய்ய) வா
அணி வெங்கடவன், Ani Vengadavan - அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த, Aangu Alarntha - அப்போதே மலர்ந்த
போது, Podhu - புஷ்பங்களை
அரிந்து கொண்டு, Arindhu Kondo - பறித்துக்கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து, Aayndhu - அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல, Vengadan Malar Adikke Sella - அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும், Pothum - புஷ்பங்களையும்
அணி, Ani - ஸமர்ப்பிக்கக்கடவர்
2254இரண்டாம் திருவந்தாதி || அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் – அவன் பிரதிபந்தகம் போக்க-நான் அடிமை செய்தேன் என்கிறார் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம் நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யாவசித்த படியை அருளிச் செய்கிறார் – 73
ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், – ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான்.
பிறை ஏய்ந்த கோடு, Pirai Eyndha Kodu - சந்திரகலை போன்ற தந்தரத்தையும்
செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுமுடைய
கரி, Kari - கஜேந்திராழ்வானை
விடுத்த, Vidutha - முதலைவாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான், Pemmaan - ஸர்வேச்வரனான
இறைக்கு, Iraikku - ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட, Aalpad - அடிமை செய்ய
துணிந்தயான், Thunindhyaan - உறுதிகொண்டயேன்
ஆதி நடு அந்திவாய் கைகலும், Aadhi Nadu Andhivai Kaikalam - காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர், Vaindha Malar - கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர், Aayiram Per - அமிரத் திரநாராணகளையும்
உய்ந்து உரைப்பான், Uyndhu Uraippaan - ஆராய்ந்து
2255இரண்டாம் திருவந்தாதி || இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார் நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9- என்றாப் போலே யாய்த்து இவர்க்கும் இது – விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் – ஆகையால் –பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்- இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி படும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் – 74
யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
எம்பெருமான், Emperumaan - ஸர்வஸவாமிந்!
ஏழ் பிறப்பும், Ezha Pirappum - எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன், Thavam Seithen - தவம் புரிந்தவன்
யானே, Yaaney - நானே
தவம் உடையேன்யானே, Thavam Udayenyaney - அந்தத் தபஸ்ஸின் பலனைப்பெற்றவனும் யானே
இரு தமிழ் நல்மாலை, Iru Tamil Nalmalaik - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை
இணை அடிக்கே, Inai Adikke - (உனது) உபயபாதங்களிலே
சொன்னேன், Sonnene - விஜ்ஞாபித்தவனாய்
பெரு தமிழன், Peru Tamizan - பெரிய தமிழ்க்கலையில் வல்லவனாய்
பெரிது, Peridhu - மிகவும்
நல்லேன், Nalleen - உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே, Yaaney - அடியேனே
2256இரண்டாம் திருவந்தாதி || நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி – ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து – இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக ஸ்ரீ திருமலை யிடையாட்டம் நேர் பட்டபடி- பெரிய தமிழன் மிகவும் நல்லேன் என்று சொன்னீர்-ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார் பெருகு நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம் ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் – 75
பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று ,
இருக ணிளமூங்கில் வாங்கி, – அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை.
பெருகும், Perugum - பெருகுகின்ற
மதம், Matham - மதநீரையுடைத்தான்
வேழம், Vezham - யானையானது
மா பிடிக்கு முன் நின்று, Maa Pidikku Mun Nindru - (தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இளமூங்கில் வாங்கி, Iru Kan Ilamoonkil Vaangi - இரண்டு கணுக்களையுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
அருகு இருநீத தேன் கலந்து, Arugu Iruneetha Then Kalandu - (அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும், Neettum - (பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர், Thiruveengadam Kandeer - திருமலையன்றோ
வான் கலந்த வண்ணன் வரை, Vaan Kalandha Vannaan Varai - மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம்.
2257இரண்டாம் திருவந்தாதி || கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்- இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது- இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் – 76
வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,
விரைப் பொலிந்த வெண்மல் லிகையும் – நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதிப் பணிவ தூறும்.
வரை சந்தனம் குழம்பும், Varai Chandhanam Kuzhambum - (மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும், Vaan Kalanum - சிறந்த ஆபரணங்களையும்
பட்டும், Pattum - பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த, Virai Polintha - பரிமளம் விஞ்சி யிருக்கப்பெற்ற
வெண் மல்லிகையும், Ven Malligaiyum - வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிரைத்துக் கொண்டு, Niraiththuk Kondo - சேரித்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன், Aadhikkan Nindra Arivan - ஸகலஜகத்காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே, Adi Inaiye - உபய பாதங்களையே
ஓதி, Othi - வாயாரத்துதித்து
பணிவது, Panivathu - தலையார வணங்குவது
உறும், Urum - ஸ்வரூபத்துக்குச் சேரும்.
2258இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரயணத்தை அடைவுபட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்- ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும் ஆஸ்ரயணயம் தானே உறும் இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார் 77
உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், – உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம்.
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
உத்தமன், Uththaman - புருஷோத்தமனுடைய
நல் பாதம், Nal Paatham - சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய், Urum Kandaai - நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால், Oon Kamalam Thannal - அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய், Urum Kandaai - நமக்கு உரியது காண்
சாத்தி, Saathi - (அத்தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி, Aethi - துதித்து
பணிந்து, Panindhu - நமஸ்கரித்து
அவன் பேர், Avan Per - அவனது ஸஹஸ்ர
ஈர் ஐந்நூறு, Eer Ainnuru - நாமங்களையும்
எப்பொழுதும், Eppozhudum - அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம், Thavam - தபஸ்ஸானது
உறுமு கண்டாய், Urum Kandaai - உரியது காண்.
2259இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட தபஸ் சை அனுசந்தித்து ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான் சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்- ஆஸ்ரய ணீயவஸ்து கை புகுந்த பின்பு-ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது – இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் – 78
தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி
நிவர்ந்தளப்ப நீட்டியபொற் பாதம், – சிவந்ததன்
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.
தரணி, Tharani - பூமியை
அளப்ப நிவர்ந்து, Alappa Nivarndhu - தாவியளப்பதாகத் தொடங்கின தரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய, Neetthiya - பாப்பின்
பொன் பாதம், Pon Paatham - அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து, Gangai Neer Peydhu - கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப்பணிமாறி
அனைத்து பேர் மொழிந்து, Anaiththu Per Mozhindhu - (பரமனுடைய) எல்லாத் திருநாமங்களையும் வாயாரச்சொல்லி
பின், Pin - பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர, Than Sivantha Kai Anaiththum Aara - தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான், Kazhuvinan - திருவடி விளக்கியவனான
நான் முகனே, Naan Mugane - பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான், Thavam Seidhu Petraan - தவப்பயன் பெற்றவனாயிலை.
2260இரண்டாம் திருவந்தாதி || ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது – தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்- திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது – ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க மறுத்துக் காடு ஏறப் போன ஸ்ரீ சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் என்கிறார் 79
பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் – சொல் நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.
தாய், Thaai - மாதாவான கௌஸல்யை
பின் நின்று, Pin Nindru - பின் தொடர்ந்து
இரப்ப, Irappa - (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான், Kelan - அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணைதோள், Peru Panaitol - சிறந்த முங்கில் போன் திருத்தோள்களையுடையளாய்
சொல் நின்ற, Sol Nindra - தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான், Thol Nalathaan - புஜபலத்தையுடையனும்
நேர் இல்லாதோன்றல், Ner Illaadondral - ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள்தான், Moy Malaraalthaan - அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று, Mun Nindru - முன்னை நின்று
இரப்பாள், Irappaal - (இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும், Aththanaiykkum - (காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர், Avan Alandha Neel Neelam Thaan Ner - அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.
2261இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆன படியாலே பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்- திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு-முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம் என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது – இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆனபடியைக் கண்டால் பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் – 80
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், – ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல்?
அடிமை நேர்ந்தேன், Adimai Nerndhen - உனது திருவடிகளில் கைங்கரியம்பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன், Oru Kan Malam Athu Ninaindhen - அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல், Un Che Adimeel - உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன், Anbu Aay Aarnthhen - அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த, Aarnth - பரிபூர்ணமான
அடி கோலம், Adi Kolam - திருவடிகளினழகை
கண்டவர்க்கு, Kandavarkku - ஸேவிக்கப்பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல், Padi Kolam Kanda Munnai Pagal Enkol - திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
2262இரண்டாம் திருவந்தாதி || முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே – அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் – கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் – அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் – நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார் பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று பழங்கிணறு வாருகிறது என் – இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் – 81
பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே – மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வான்திகழும் சோதி வடிவு.
பகல் கண்டேன், Pagal Kandein - இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல்விடிவைக் கண்டேன். (அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன், Naaranai Kandein - ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக்கண்டேன்,
மீண்டு, Meendu - இன்னமும்,
கணவில், Kanavil - மாநஸஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே, Miga Meyye - மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி, Oon Thigazhum Nemi - திருமேனியில் விளங்குகின்ற திருவாழியையுடையவனும்
ஒளி திகழும் சே அடியான், Oli Thigazhum Se Adiyan - பிரகாசம் மிக்கதிருவடிகளையுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும், Vaan Thigazhum - பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு, Sothi Vadivu - சோதிமயமான வடிவத்தை
மிக கண்டேன், Miga Kandein - (இங்கே) நன்று ஸேவிக்கப்பெற்றேன்.
2263இரண்டாம் திருவந்தாதி || அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான ஸ்ரீ நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் – கீழ் -ஸ்ரீ நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் – வெறும் ஸ்ரீ நாராயணனை அல்ல -ஸ்ரீ திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் – கீழே ஸ்ரீ நாரணனைக் கண்டேன் என்றார்–இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் – வெறும் ஸ்ரீ நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் – 82
வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை.
வடிகோலம், Vadikoolam - வடிக்கட்டின அழகையுடையவளும்
வாளநெடுங்கண், Vaalanedu Kaan - ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள், Mamalaraal - சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம், Selvi Padikoolam - சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள், Pal Naal Akalaal - க்ஷணகாலமும் விட்டுப்பிரியாமல் எப்போதும் கூடியேயிருக்கின்றாள்
பின்னும், Pinnum - எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவத்தும்
ஞாலத்தாள், Naalathaal - பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி, Adikoli - பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ, Nalam Purindhadhu En Koloo - அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக்கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை, Koolathaal Kurai Illai - (எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.
2264இரண்டாம் திருவந்தாதி || கீழே -74- பெரும் தமிழன் நல்லேன் பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் – இங்கே ஸ்ரீ நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி – நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது -என்ன சாஹசிகனோ -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் – அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் – இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ சநாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு விசத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் – பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6- நல்லேன் பெரிது -என்றார் ஐஸ்வர் யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் – பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து – முன்பு சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன் பெரிய நல்லேன் என்று சொன்னார் – இப்போது அவ்வஸ்து தன்னை ஸ்ரீ லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார் பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே முன்பு செருக்கி வார்த்தை சொன்னவர் – இப்போது ஸ்ரீ நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி – நாம் இவ்விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் – 83
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை, – இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம்.
மறை, Marai - வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை, Aangu Ena Uraitha Maalai - ப்ரத்யக்ஷித்துச்சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வாரம, Maayan Kan Senra Vaarama - அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும், Irayeenum - ஸ்வஸ்பமான பலனையாகிலும்
குறை ஆக, Kurai Aaga - குறையுண்டாம்படி
வெம் சொற்கள், Vem Sorkkal - செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன், Koorainean - பேசினேன்
கூறி, Koora - அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல்என்றே, Eeyum Kolendree - (நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப்பகலும், Ennaipagalum - வெகுகாலமாக
இருந்தேன், Irundhen - இருக்கின்றேன்.
2265இரண்டாம் திருவந்தாதி || மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் – அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி – ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் – முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய் அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத அமிர்தம் விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் – 84
வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது.
வரம் கருதி, Varam Karuthi - (தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத, Thannai Vanangadha - (ஸர்வேச்வரனான) தன்னை வண“காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி, Vanmai Uram Karuthi - (தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை, Moorka Thavanai - மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட, Naram Kalanda Singam Aaykeenda - நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன், Thiruvan - அழகனுடைய
அடி இணையே, Adi Inaiye - உபயபாதமே
அம் கண் மா ஞாலத்து, Am Kan Maa Nyaalathu - அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது, Amuthu - (போக்யமான) அம்ருதமாகும்.
2266இரண்டாம் திருவந்தாதி || அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்- இவருடைய அமிர்தம் அவனைப் பேசும் சொல்லும் – அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் – 85
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.
அமுது என்றும், Amuthu Endrum - அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும், Then Endrum - தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும், Azhiyan Endrum - திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும், Andru Amuthu Kondu Uganthaan Endrum - முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட, Sollappatta - சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை, Nal Maalai - விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை, Amuthu Anna Soll Maalai - அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன், Aethi Aethi Navinru Thozhuthen - பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.
2267இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் – சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ – பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து- அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் – அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ -சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் – 86
நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?
நவின்று உரைத்த, Navinru Uraitha - (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள், Navalargal - கவிகள்
நாள் மலர் கொண்டு, Naal Malar Kondu - அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று, Aange Payinru - அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல், Adhanal Petra Payan Ensol - அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
பயின்றார் தம், Payinra Tham - நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால், Mei Thavaththal - சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய, Kaanbu Ariya - காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை, Megam Mani Vannana - மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான், Yaan - அடியேன்
இன்று, Indru - இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன், Eth Thavaththal Kol Kaanban - எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்? (அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)
2268இரண்டாம் திருவந்தாதி || உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் – இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்- சாதன அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார் உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் – 87
இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை, – அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
திருக்கோட்டி எந்தை திறம்.
அன்று கரு கோட்டியுன் கிடந்து, Andru Karu Kottiyun Kidandhu - முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம், Thirukkoatti Endhai Thiram - திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன், Kandeen - கண்டு அநுபவிக்கப்பெற்றேன்
கை தொழுதேன், Kai Thozhuthen - கைதொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை, Iru Nilathai - விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை, Aangu Sendru Alanda Thiru Adiyai - அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன், Indru Aa Arikindren Alleen - இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)
2269இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது- அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் – 88
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு.
தென் அரங்கத்து எந்தை, Then Arangathu Endhai - தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி, Thirampaa Vazhi - பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால், Sendraarkku Allaal - நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம், Thaam - தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி, Thirampaa Sedi Narakai Neekki - அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக்கொண்டு
செல்வதன் முன், Selvadhan Mun - போவதற்குள்ளே
வானோர், Vaanor - நித்யஸூரிகளுடையதும்
கடி, Kadi - அரணையுடையதானதுமான
நகரம், Nagaram - வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு, Vaasal Kathavu - வாசற் கதவானது
திறம் பிற்று, Thiram Pithru - மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன், Ini Arindhen - (இதை) இப்போது அறிந்து கொண்டேன்
2270இரண்டாம் திருவந்தாதி || நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் – இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் – பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் — ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற மாணியாய் அன்றோ கொண்டது- நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மை பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன – விரோதியைப் போக்கியும் விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் – 89
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து, – பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண்.
முன், Mun - முற்காலத்தில்
கதம் சிறந்த, Kathai Sirandha - கோபம் மிகுந்த
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை
கதவி காய்ந்து, Kathavi Kaayndhu - கோபித்து முடித்து
போர் யானை, Por Yaanai - போர் செய்வதாக எதிர்த்துவந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து, Osiththu - கொம்பு முறித்து
அதவி, Adhavi - கொன்று,
பண்டு ஒரு கால், Pandhu Oru Kaal - முன்னொரு காலத்தில்
பதவியாய், Pathaviyai - நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய், Maani Aay - பிரமசாரியாகி
மாவலியை, Mavaliyai - மஹாபலியினிடத்திலே
பாணியால், Paaniyaal - கையினாலே
நீர் ஏற்று, Neer Aetru - தானம் வாங்கி
மண் கொண்டிலையே, Man Kondilaye - பூமியைப்பெற்றாயல்லையோ?
2271இரண்டாம் திருவந்தாதி || கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ – உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன – எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் – கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம் என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ – உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் – நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் – உமக்குப்பெற வேண்டுவது சொல்லீர் என்ன – உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார் 90
மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்.
திருமாலை, Thirumalai - பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை, Engal Perumanai - எம்பெருமானை
நண்ணி, Nanni - கிட்டி
கை தொழுத பின், Kai Thozhuda Pin - அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே, Man Ulagam Aalelae - இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய், Vaanavarkkum Vaanavan Aay - தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து, Vin Ulagam Than Agathu - நித்யவிபூதியிலே
மேவேனே, Mevenae - நித்யாநந்த மநுபவிக்கமாட்டேனோ?
2272இரண்டாம் திருவந்தாதி || பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது- ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் – திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் – அர்த்தஸ் சமய ப்ராப்தா -என்கிறபடியே-ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் – பிரகிருதி வச்யரான பின்பு நரகம் ஒருவனைத் தப்பாது -அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கோள்- பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது – ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்- 91
பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,
முன்னால் வணங்க முயல்மினோ, – பன்னூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்
அளந்தா னவஞ்சே வடி.
பின்னால், Pinnaal - சரீரம் விழுந்தபின்பு
அரு நகரம், Aru Nagaram - கடினமான நரகத்தை
சேராமல், Seramal - அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர், Paethuruveer - மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல், Pal Nool - பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை, Alandhanai - நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன், Kaar Kadalsuzh Nyalathai Ellam Alandhanavan - கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி, Sae Adi - செவ்விய திருவடிகளை
முன்னால், Munnal - இப்போதே
வணங்க, Vananga - வணங்குமாறு
முயல்மின், Muyalmin - முயற்சிசெய்யுங்கள்.
2273இரண்டாம் திருவந்தாதி || அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் – ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை-ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களை ஏத்துங்கோள் – அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்- 92
அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்
படியான் கொடிமேல்புள் கொண்டான், – நெடியான்றன்
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும்
காமமே காட்டும் கடிது.
முன், Mun - முன்னே
அடியால், Adiyal - திருவடியினால்
கஞசனே, Kanjanai - கம்ஸனை
செற்று, Settru - உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான், Amarar Aethum Padiyan - தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான், Kodimel Pul Kondaaan - த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன், Nedhiyan Than - ஸர்வேச்வரனுடைய
நாமமே, Naamame - திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள், Aethuminngal - ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால், Aethinaal - அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம், Thaam Vendum Kaamam - தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது, Kadithu - விரைவாக
காட்டும், Kaatum - (அத்திருநாமம்) பெறுவிக்கும்
2274இரண்டாம் திருவந்தாதி || கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்- பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் – ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது- குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே -நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் – 93
கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
கொடிதென் றதுகூடா முன்னம், – வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை,
கொங்கைநஞ் சுண்டானை ஏத்துமினோ உற்று.
கொடுநரகம், Kodunaragam - க்ரூரமான நரகமானது
கடிது, Kadithu - கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும், Pirkkalum - அதற்குமேலும்
செய்கை, Seigai - (அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது, Kodithu - பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று, Endru - என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம், Athu Kooda Munnam - அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை, Vadi Sangam Kondaana - கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை, Koondhal Vaai Keendaana - கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை, Kongai Nanju Undaana - (பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று, Utru - பொருந்தி
ஏத்துமின், Aethumin - ஸ்தோத்திரம் பண்ணுங்கள்
2275இரண்டாம் திருவந்தாதி || என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்துகிறபடி -அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் – ஜகத் ரஷண ஸ்வபாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே -சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே- என்னுடைய நெஞ்சு ஏத்துகிறாற் போலே-நீங்களும் ஏத்துங்கோள் என்கிறார் – தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாரைப் போலே என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய் நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் 94
உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், – பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு.
உலகு எழும் முற்றும் விழுங்கும், Ulaku Ezhum Mutrum Vizhungum - உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன், Mugil Vannan - மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான், Porundha Thaan - (ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு, Maarbu - மார்வை
பற்றி, Patri - பிடித்து
இடந்து, Idanthu - கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை, Poo Paadakathul Irundhaana - அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு, En Nenju - என் மனமானது
ஏத்தும், Aethum - துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின், Utru Vanangi Thozhumin - பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள்.
2276இரண்டாம் திருவந்தாதி || ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் ஸ்ரீ திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் – அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி- காலோ பலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கினவன் – எல்லாரும் ஏத்தும்படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் – ஸ்ரீ திரு அத்தியூரில் வசிக்கிறவன் – ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி – என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் – 95
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், – முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
தானவனை, Thaanavanai - இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம், Val Nenjam - வலிய மார்வை
கீண்ட, Keenda - கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன், Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான், Munnam Sei Oozhiyan - நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான், Oozhi Peyartthan - காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான், Ulaku Aeththum Azhiyaan - உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான், Aththiyooran - ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான், En Nenjam Meyaan - என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான், En Chennian - என்னுடைய தலையிலே உள்ளான்.
2277இரண்டாம் திருவந்தாதி || உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது — இரண்டாலும் -ஸ்ரீ கருட வாகனத்வம் -ஸ்ரீ சேஷ சாயித்வம் -ஸ்ரீ சர்வேஸ்வரன் என்றபடி – உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர் என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் – 96
அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
புள்ளை ஊர்வான், Pullai Oorvaan - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான், Ani Maniyin Thuththiseer Naagaththin Mel Thuyilvaan - அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய் படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான், Mutthi Aavaan - மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான், Marai Aavaan - வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான், Maa Kadal Nanju Undaan Thanakkum Irai Aavaan - பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான், Engal Piraan - எம்பெருமான்
அத்தியூரான், Aththiyooran - ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.
2278இரண்டாம் திருவந்தாதி || என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் – ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்-ஸ்ரீ திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு ஸ்ரீ பாம்பணை மேல் சேர்ந்தாய் என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் – 97
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
செம் கண் நெடுமால், Sem Kan Nedumaal - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ, Imaiyor Thalai Magan Nee - நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான், Engal Perumaan - எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல், Kudamookka Il - கும்பகோக் க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு, Koyil Aa Konda - கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின், Pongu Padam Mookkin - விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு, Paambu - ஆதிசேஷனாகிற
அணை மேல், Anai Mel - படுக்கையின் மீது
சேர்ந்தாய், Serndhaai - பள்ளி கொண்டருளினாய்.
2279இரண்டாம் திருவந்தாதி || தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் – தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி -அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார் ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் – இடையனாய் ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இரங்கப் பண்ணி என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஸ்ரீ ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க- தம்மை விஷயீ கரித்த ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் – 98
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
உண்ட துலகேழு முள்ளொடுங்க, – கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை.
கோவலன் ஆய், Kovalana Aay - இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி, Kudam Kondu Aadi - குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி, En Nenjam Mevi - என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை, Idam Aaga Konda Irai - (எனது நெஞ்சையெ) நித்யவாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க, Kondhu Valarkka - சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய், Kuzhavi Aay - சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது, Thaan Valarnthathu - தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும், Ulaku Ezhum - ஸப்தலோகங்களும்
உள் ஓடுங்க, Ul Oadunga - தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!, Undhadhu - உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)
2280இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியைச் சொல்லுகிறார் – ஆஸ்ரித அர்த்தமாக சுருக்கின வடிவை உடையவனாய் மகாபலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன்- பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் – 99
இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, – அறைகழல
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.
இமையோர், Imaiyor - (பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான், Emperumaan - ‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை, Irai - கொஞ்சம்
அருள் என்று, Arul Endru - கிருபைபண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று, Murai Nindru - அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள், Moyi Malargal - அழகிய புஷ்பங்களை
தூவ, Thuva - பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான், Arai Kazhala Se Adiyaan - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனும்
நெடியான், Nediyan - எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால், Maal - திருமால்
குறள் உரு ஆய், Kurall Uru Aay - (மாவலிபக்கல்) வாமநரூபியான் வந்து தோன்றி
மா வடிவின், Maa Vadivin - பெரிய வடிவினாலே
மண் கொண்டான், Man Kondaaan - பூமியை அளந்து கொண்டான்.
2281இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்- என் ஆஸ்ரயத்தின் அளவன்று உன் பக்கல் ச்நேஹம்-இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும் பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன – கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் – 100
மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, – மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு .
மாலே, Maale - (அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே, Nediyone - ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா, Vinnavarkku Meela - நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே, Viyan Thuzhai Kanniyaane - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால், Melaal - முன்னொரு காலத்தில்
விளவின்காய், Vilavinkai - விளங்காயை
கன்றினால், Kanrinhaal - ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே, Veelthavane - உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை, Yaan Udai - (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு, Anbu - அன்பானது
என்தன் அளவு அன்று, Enthan Alavu Andru - என்னளவில்அடங்கி நிற்பதன்று.