திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2185 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2185இரண்டாம் திருவந்தாதி || கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் – அன்றிக்கே -இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்- இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்- அன்பே தகளியா -என்று ஒரு விளக்கு ரூபித்தால் போலே ஒரு புஷ்பமாக ரூபித்து-அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்- அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு – தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார் 4
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே திகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள், அங்கம்வலம் கொண்டான் அடி.
பதவுரை Show / Hide
நகர் இழைத்து, Nagar Izhaithu - என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு, Nithilathu Naal Malar Kondu - (அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து, Thigalum Mani Vairam Serkku - ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா, Nigar Illa - ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி, Paing Kamalam Aendhi - பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான், Pani Malaral Angam Valam Konda - குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி, Adi - திருவடிகளை
பணிந்தேன், Panindhen - வணங்கினேன்.