| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2186 | இரண்டாம் திருவந்தாதி || பக்தியைத் தீபமாகப் பேசினார் -நகரம் கோயிலாகப் பேசினார் -இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் – அன்றிக்கே-பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாகவுமாம் – நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே – ஸ்ரீ ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன-ஒன்றைச் சொன்னேன் அத்தனை – இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் – பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் – அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறது – ஸ்ரீ ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் – 5 | அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும் அடிமூன் றிரந்தவனி கொண்டாய், – படிநின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை ஆரோத வல்லார் அறிந்து. | படிநின்ற, Padinindra - பூமியிலே அவதரித்து நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே, Neer Otham Meeni Nedumale - கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!, அன்று இ உலகம், Andru I Ulagam - முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை அடிமூன்றில் அளந்தாய் போலும், Adimundril Alandhai Polum - மூவடியாலே அளந்து கொள்பவன் போல அடிமூன்று அவனி, Adimundru Avani - மூவடி நிலத்தை இரந்து கொண்டாய், Irandu Kondaai - (மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்; நின் அடியை, Nin Adiyai - இப்படிப்பட்ட உனது திருவடிகளை அறிந்து, Arinthu - நன்றாகத் தெரிந்து கொண்டு ஓதவல்லார் ஆர், Othavallar Aar - பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை) |