| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2188 | இரண்டாம் திருவந்தாதி || இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் –என்று அறிந்து நீயும் விடாதே அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் – பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை – அவனை உகந்தார் காண்பரான பின்பு-நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தைப் பார்த்து சொல்லுகிறார் – பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்-நமுசி பட்டது படும் அத்தனை – இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே – நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் – 7 | கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார் அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை ஓராழி நெஞ்சே உகந்து. | ஆழிநெஞ்சே, Aazhinenje - ஆழ்ந்த மனமே! கழல் எடுத்து, Kazhal Eduthu - திருவடிகளை உயரத் தூக்கினவனாயும், மாற்றார், Maatrar - எதிரிட்ட நமுசி முதலானவர்கள் அழல் எடுத்த சிந்தையர் ஆய்அஞ்ச, Azhai Edutha Sindhaiyar Aay Anja - பயாக்னி கொளுந்தின நெஞ்சையுடையவர்களாய் நடுங்கும்படியாக வாய் மடித்து, Vaai Madithu - உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு கண் சுழன்று, Kan Suzhandru - (பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டுவிழும்படி) கண்கள் வட்டமிட தழல்எடுத்த போர் ஆழி, Thazhal Edutha Por Aazhi - நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை ஏந்தினான், Aendinaan - தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய, பொன்மலர் சே அடியே, Ponmalar Se Adiye - அழகிய மலர்போன்ற திருவடிகளையே, உகந்து ஓர், Uganthu Oor - விரும்பி அநுஸந்திப்பாயாக. |