திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2191 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2191இரண்டாம் திருவந்தாதி || ஆக -இருந்தபடி இதுவாகையால் இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது – அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் – உன்னுடையேனாய் இருந்து வைத்து நான் முன்பு தேவதாந்தரங்களை அனுவர்த்தித்துப் பட்ட பொல்லாங்கு இனி படாதபடி காத்தருள வேணும் அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் -ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே – அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் – 10
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் காவடியேன் பட்ட கடை.
பதவுரை Show / Hide
காவலனே, Kaavalaney - ஸர்வரக்ஷகனே!,
பிள்ளைஆய், Pillaiyaai - சிறு குழந்தையாயிருந்து
மா சகடம், Maa Sakadam - (அஸுராவேசமுள்ள) பெரிய வொருவண்டியை
பர்த்தனை, Parthanai - கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண், Man - பூமியை
இரந்து, Irandu - (மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
பல் உயிரும், Pal Uyirum - எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை, Kaaththanai - ரக்ஷித்தருளினாய்;
நின், Nin - (இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால், Ulli Nindramaiyal - (ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன், Eythiya Naa Udaiyen - உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன், Poo Udaiyen - (அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
அடியேன், Adiyen - உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட, Patta - வெகுகாலமாக அடைந்துள்ள
கடை, Kadai - தாழ்வுகளை
கா, Kaa - போக்கியருள வேணும்.