| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2192 | இரண்டாம் திருவந்தாதி || கா என்று கொண்டு வெறுமனே தலையிலே ஏறிடுகிறது ஏன் -தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூ த்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் – தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன -இப்படிச் செய்வார் உண்டோ என்னில் – அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்- தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன இப்படி செய்வார் உண்டோ என்னில்-அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார் நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் – 11 | கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும் இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை ஆரோத வல்லார் அவர். | அமரக் கடை நின்று, Amarak Kadai Nindru - தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று நாளும் கழல் தொழுது, Naalum Kazhal Thozhudhu - நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து இடைநின்ற இன்பத்தர் ஆவர், Idaininra Inbathar Aavar - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்; புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே, Pudaininra Neer Otham Menni Nedumale - (இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!, நின் அடியை, Nin Adiyai - உனது திருவடிகளை ஓதவல்லாரவர் ஆர், Othavallaaravar Aar - அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!) |