| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2194 | இரண்டாம் திருவந்தாதி || ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ – அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்-அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை – எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே உள்ளது ஓன்று அன்றோ – அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி-அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார் ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று – இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது- விலஷண அதிகாரம் ஆகில் கிடையாதோ என்னில்-ஓர் ஆனைக்கன்றோ எளிதாய் தோன்றுகிறது – இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும் கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் – 13 | தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப் படரெடுத்த பைங்கமலம் ¦ கொண்டு,அன் – றிடரடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன் பாழிதா னெய்திற்றுப் பண்டு. | தொடர் எடுத்த மால் யானை, Thodar Edutha Maal Yaanai - காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது சூழ் கயம் புக்கு, Sool Kayam Pukku - (கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து படர் எடுதுத பை கமலம் கொண்டு, Padhar Eduthudhu Pai Kamalam Kondu - மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு அன்று இடர் அடுக்க, Andru Idar Adukka - அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக அஞ்சி, Anji - (செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி, ஆழியான் பாதம், Azhiyan Paatham - (முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ தான், Thaan - அந்த கஜேந்திரம் பண்டு, Pandhu - முற்காலத்தில் வானவர் கோன்பாழி, Vaanavar Konpazhi - தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை எய்திற்று, Eydhithru - அடைந்தது. |