Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2197 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2197இரண்டாம் திருவந்தாதி || அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ – இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால் இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் – அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ -ஆனபின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ- ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை ஒழிய ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று – அன்றிக்கே ஏரியாம் வண்ணம் இயற்றுமது-மற்று வர்ஷிப்பிக்குமது இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம் ருசி உத்பாதகனும் தானே-பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம் இப்படி நம்மை பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க – சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார்- 16
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, – வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று.
தனக்கு, Thanakku - சேதநனாகிய தனக்கு
அடிமை, Adimai - சேஷத்வமென்பது
பட்டது, Pattadhu - அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும், Thaan Ariyaan Aelum - தான்தெரிந்துகொள்ள அசக்தனாயிருதாலும்
மனத்து, Manaththu - மனத்திலே
அடைய, Adaiya - வந்து சேர்ந்த வளவில்
மாலை, Maalai - அப்பெருமானை
வைப்பது, Vaippadhu - இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
வனம் திடரை, Vanam Thidharai - காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால், Aeri Aam Vannam Iyattrum Ithu Allaal - (பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி) ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று, Mattru - பின்னும்
மாரி, Maari - மழையை
பெய்கிற்பார், Peygirpaar - பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார், Yaar - யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)