| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2198 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் – நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரய ணீ யன் அவனே அன்றோ என்கிறார் ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ லப்த ச்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று – பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு இங்கு ஆஸ்ரய ணீ யர் இல்லை என்கிறது அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்- இவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் என்னில்-வேறு ஒருவர் இல்லாமை என்கிறது இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் – 17 | மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன், சுற்றும் வணங்கும் தொழிலானை, – ஒற்றைப் பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக் குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. | வானவர் கோன், Vaanavar Koon - தேவர்கட்குத் தலைவனான இந்திரனும் மா மலரோன், Maa Malaron - (எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும் சுற்றும் வணங்கும் தொழிலானை, Sutrum Vanangum Thozhilaanaik - பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான மாலை, Maalai - எம்பெருமானை ஒற்றை பிறை இருந்த செம்சடையான், Otrai Pirai Irundha Semsadayaan - ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன் பின்சென்று, Pinsendru - அநுவர்த்தித்து இரந்து, Irandu - (பல்லைக்காட்டி) யாசித்து குறை, Kurai - தனது குறையை தான் முடித்து கொண்டான், Thaan Mudithu Kondaaan - தான் நிறைவேற்றிக் கொண்டான்; இயல் ஆவார், Iyal Aavaar - ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர் மற்று ஆர், Mattru Aar - அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்? |