| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2208 | இரண்டாம் திருவந்தாதி || அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது – கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே – நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் – கீழ் ஸ்ரீ திருமலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த பரிமாற்றம் கிடையாமையாலே- நினைத்த படி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்தில் இருக்கிறஸ்ரீ சர்வேஸ்வரனை தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் – இப்படி ஸ்ரீ திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்திலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் – 27 | பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை, மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங் கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே, மால்தேடி யோடும் மனம். | பதி, Pathi - திருமலைத் திருப்பதியிலே அமைந்து, Amaindhu - வேரூன்றி நின்று நாடி, Naadi - எங்கேயென்று தேடிக்கொண்டு பருத்து எழுந்த சிந்தை, Paruthu Ezhuntha Sindhai - மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய் மதி உரிஞ்சி, Madhi Urinji - சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு வான்முகடு நோக்கி, Vaanmugadu Nookki - (அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்துவிட்டு மால்தேடி, Maalthedi - பரமபதநாதனைத் தேடிக்கொண்டு கதிமிகுத்து ஓடும், Kathimiguthu Oodum - விரைவுமிகுந்து செல்லுகின்ற மனம், Manam - என்னெஞ்சமானது அம்கோல் தேடி ஓடும், Amkol Thedi Oodum - அழகிய கொள் கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்லுகின்ற கொழுந்து அது போன்றது, Kozhunthu Adhu Ponthadhu - கொடியை ஒத்திரா நின்றது. |