| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2211 | இரண்டாம் திருவந்தாதி || கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் – அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்- எல்லார் தலையிலும் ஒக்க திருவடிகளை–வைத்த அவதாரத்தை சொல்லுகிறது இப்படி ஸ்ரீ கிருஷ்ண விஷயமும் ஸ்ரீ ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் – 30 | நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே, நீயன் றுலகிடந்தா யென்பரால், – நீயன்று காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை, பேரோத மேனிப் பிரான். | பேர் ஓதம் மேனி பிரான், Peer Otham Meeni Piraan - பெரிய கடல் போன்ற திருமேனியையுடைய பெருமானே! நீண்ட திருமாலே, Neenda Thirumaale - எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே நீ, Nee - இப்படிப்பட்ட நீ அன்று, Andru - முன்பொருகால் உலகு, Ulaku - உலகங்களை அளந்தாய், Alandhai - (திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்) நீ, Nee - நீ அன்று, Andru - மற்றுமொரு காலத்தில் உலகு, Ulaku - பூமியை இடந்தாய், Idandhai - (மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்) கார் ஓதம் முன் கடைந்து, Kaar Otham Mun Kadaindhu - கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும் மா கடலை, Maa Kadalai - (அந்தப் பெரிய கடல் தன்னையே) பின், Pin - பிறகு (ராமவதாரத்திலே) அடைத்தாய், Adaiththai - அணைகட்டித் தூர்த்தாயென்றும் என்பர், Enbar - (மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர். |