Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2216 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2216இரண்டாம் திருவந்தாதி || அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும் ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் – இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்- இவ்விஷயம் கிடக்க-சப்தாதி விஷயங்கள் இனிது என்று இருப்பதே என்று வெறுக்கிறார் – இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும் உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் – 35
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று
காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது.
எந்தாய், Endhaai - என் ஸ்வாமி யானவனே!
காமம், Kaamam - ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர், Inidhu Enbar - போக்யமாகக் கொள்பர்;
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர், Thanneer Adhanilum Aatravum Inidhu Enbar - அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர், Kaamam Neer - (கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது, Inidhu Endru Velaadhu - போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல், Nin Perumai Siridhu Vedpar Ael - உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும், Semaam Neer Aagum - (எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையையுடையதாகும்