Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2217 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2217இரண்டாம் திருவந்தாதி || நாட்டார் செய்கிறபடி செய்கிறார்கள் -நெஞ்சே நீ முன்னம் அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்துக் கொண்டு ஸூகமே இருக்கப் பார் -என்கிறார் பூமிப்பார் பூமிக்கிறார்கள்-நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு – பிரமிப்பார் பிரமிக்கிறார் -விஷயங்களிலும் தேவதாந்தரங்களிலும் நீ இவ்வர்த்தத்தை புத்தி பண்ணி இரு -என்கிறார் நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே -நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்திக் கொண்டு ஸூ கமே இருக்கப் பார்–என்கிறார் – 36
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், – அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு.
சிறியார், Siriyar - (இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை, Perumai - (நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும், Siridhin Kan Eydhum - (தமக்குப்பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும், Ariyaarum - அவிவேகிகளும்
தாம் அறியார் ஆவர், Thaam Ariyaar Aavar - (நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே, En Nenchae - என் மனமே!.
அறியாமை, Ariyamaai - பிறர் அறியாதபடி
மண்கொண்டு, Mankondru - (மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு, Man Undu - இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த, Man Umizhndha - (பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று, Maayan Endru - ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண்கொண்டு, Enkondhu - இடைவிடாது கருதி
இரு, Iru - (அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.