| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2220 | இரண்டாம் திருவந்தாதி || நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் -சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது – அது மாட்டாதவர்கள் அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம் ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே – ஆனபின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் – இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயாராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே -நீரும் ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று சொல்லுகிற படி எங்கனே என்னில் உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்- தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார் – இந்த்ராதிகளையும் ஆஸ்ரய ணீ யாராகச் சொல்லா நிற்கச் செய்தே-நீரும் பிரமாணிகராய் இருந்து- ஸ்ரீ லஷ்மி பதியே சமாஸ்ரயணீயன் என்று சொல்லுகிறபடி-எங்கனே என்னில் உங்களுக்கு அபிதான வ்ருத்தியேயாய்-தாத்பர்ய ஞானம் இல்லாமையாலே சொல்லுகிறிகோள்- தாத்பர்ய ஞானம் உண்டாகில்-அவர்களைச் சொல்லுகிறது விபூதித்வேந – விபூதிமானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்-லஷ்மி பதியே என்று இருங்கோள் என்கிறார்- நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும் அது மாட்டாதார் -ஸ்ரீ த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும் இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-அதிகார அநு குணம் விதிக்கிறார் – 39 | ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. | ஏழைகாள், Ezhaikal - ‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!, ஓத்து அதனை, Oththu Adhanai - வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய) வல்லீர் ஏல், Vallir Ael - ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில் நன்று, Nandru - அப்படியே வேதமோதுவது நல்லது; அதனை மாட்டீர் ஏல், Adhanai Maattir Ael - அது செய்ய சக்தியற்றவர்களாகில் மாதவன் பேர், Maadhavan Per - திருமாலின் திருநாமங்களை சொல்லுவதே, Solluvathe - உச்சரிப்பதே ஓத்தின் சுருக்கு, Othin Surukku - ஸகல வேதங்களின் ஸாரமாகும்; ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே, Othin Porul Mudivum Ithanaiye - வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே) உத்தமன், Uththaman - புருஷோத்தமனான எம்பெருமானுடைய பேர், Per - திருநாமங்களைக் கொண்டு ஏத்தும் திறம், Aeththum Thiram - (அவனைத்) துதிக்கும் வகையை அறிமின், Arimin - தெரிந்து கொள்ளுங்கள். |