| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2227 | இரண்டாம் திருவந்தாதி || இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் – இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது – ஸ்ரீ எம்பெருமானுக்குப் புறம்பு லாபாலாபம் இன்றிக்கே இருக்கிறபடி – இவன் -பரித்யக்தா மயா லங்கா -என்றால் – அவனும் -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்று இவனை எல்லாமாகப் பற்றும் அத்தனை இறே – அவன் பயிற்றி இறே இவனைப் பயிலப் பண்ணுவது – சர்வேஷாம் ஹி ச தர்மாத்மா வர்ணா நாம் குருதே தபாம் சதுர்ணாம் ஹி வயஸ்தானாம் தேன தே தம நுவ்ரதா-அயோத்யா -17-18-என்றபடி – சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி – அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் -இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டாக் இறே – இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் – இவர்களை இப்படி பயிலப் பண்ணுகைக்கு-இவர்கள் பட்டது அன்று-அவன் படுவது – இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத் தன்னைச் செறிந்து அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி பல ஸ்ரீ திருப்பதிகளிலும் அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் – 46 | பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற தணிதிகழும் சோலை யணிநீர் மலையே மணிதிகழும் வண்தடக்கை மால். | மணி திகழும், Mani Tihalum - நீலமணிபோல் விளங்குமவனும் வண் தடகை, Van Tatakai - உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான மால், Maal - எம்பெருமான் பயின்றது, Payinradhu - நித்யவாஸம் செய்தருளுமிடம் அரங்கம் திருக்கோட்டி, Arankam Tirukkotti - திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம் பல் நாள், Pal Nal - அநாதிகாலம் பயின்றதுவும், Payinradhuvum - நித்யவாஸம் செய்யுமிடமும் வேங்கடமே, Venkatame - திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்) அணி திகழும் சோலை, Ani Tihalum Solai - அழகு விளங்குகின்ற சோலைகளையுடைத்தாய் அணி, Ani - இந்நிலவுலகுக்கு அலங்காரமான நீர்மலை, Nirmalai - திருநீர்மலையாம். |