திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2229 | இரண்டாம் திருவந்தாதி || நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் – கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி – எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் – உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான் ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் – 48 | உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. – மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை. | பதவுரை Show / Hideமாலே, Maale - ஸர்வேச்வரனே! மறை நான்கும், Marai Naanthum - நான்கு வேதங்களையும் உணர்ந்தாய், Unarndhaai - (பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய் நீதி, Neethi - அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும் ஓதினாய், Othinai - (மநுமுதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச்செய்கின்றாய் மலர் மகள், Malar Magal - பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய தோள், Thol - திருத்தோளோடே மணந்தாய், Manandhai - கூடி வாழ்கின்றாய் வேய் இரும் சாரல், Vey Irum Saaral - மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையையுடையதும் இரு ஞாலம் சூழ், Iru Nyaalam Soozh - பரந்த இப்பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான மாயிருஞ் சோலமலைபோய், Maayirunj Cholamalai Poi - திருமாலிருஞ் சோலைமலையிலேவந்து மணந்தாய், Manandhai - திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய் |