| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2231 | இரண்டாம் திருவந்தாதி || திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்- திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத் தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்- திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை அனுசந்திக்கப் புக்கால் பிழைக்க அரிதாய் அத்தாலே அரை ஷணம் விடப் போகாத திரு நாமங்களைச் சொல்லி ஸ்ரீ ய பதியை அழைப்பன்- இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லி – உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீயபதியான அந்த ஸ்ரீ சர்வேஸ்வரனை -அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் – 50 | அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன, பிழைப்பில் பெரும்பெயரே பேசி, – இழைப்பரிய ஆயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும், மாயவனே என்று மதித்து. | இழைப்பு அரிய, Izhaiyppu Ariya - ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய ஆயவனே என்றும், Aayavaney Endrum - கோபால க்ருஷ்ணனே!என்றும் மாயவனே என்றும், Maayavaney Endrum - (குணசேஷ்டிதங்களினால்) ஆச்சரியபூதனே என்றும்! மதித்து, Mathithu - அநுஸந்தித்துக் கொண்டு ஆங்கு அவர்கள் சொன்ன, Aangu Avargal Sonna - அத்திருவாய்ப்பாடியிலுள்ளவர்கள் சொல்லியழைத்த யதுகுலத்தில் யாதவனே என்றும், Yaadhavane Endrum - (வஸுதேவர்மகனாய்த்) தோன்றினவனே என்றும்! பிழைப்பு இல்பெரு பெயரே பேசி, Pizhaippu Ilperu Peyare Paesi - குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி யார் முகப்பும், Yaar Mukappum - எல்லாரெதிலும் திருமாலை அவனை, Thirumalai Avanai - திருமாலாகிய அப்பெருமானை அழைப்பன், Alaippan - கூப்பிடாநின்றேன். |