| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2232 | இரண்டாம் திருவந்தாதி || இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் – பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நிறத்தை அனுசந்தி- இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் -நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப்போல் கலங்கி தளராதே அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்- 51 | மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம், மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை, – மதிக்கண்டாய் பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த நீராழி வண்ணன் நிறம். | நெஞ்சே, Nenchae - மனமே! மணி வண்ணன் பாதம், Mani Vannan Paatham - நீலமணிவண்ணனான எம்பெருமானது திருவடிகளே மதி கண்டாய், Madi Kandaai - அநுஸந்திக்கக்கடவாய் பேர் ஆழி நின்று பெயர்ந்து, Per Aazhi Nindru Peyarnthu - பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து கடல் கடைந்த, Kadal Kadaindha - தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக்கடலைக் கடைந்த மதிகண்டாய், Madhikandai - சிந்திக்கக்கடவாய் மற்று, Mattru - இன்னமும் அவன் பேர் தன்னை, Avan Per Thannai - அப்பெருமானது திருநாமங்களை நீராழி வண்ணன் நிறம், Neeraazhi Vannan Niram - கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை மதி கண்டாய், Madi Kandaai - நினைக்கக்கடவாய் |