| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2237 | இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பேறு அவனாலே என்று கொண்டு நிச்சயித்தாராகில் -அவன் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை போக்கி நெடும் காலம் சம்சரித்துப் போந்த நீர் அருள் என்று வடிம்பிடக் கடவதோ என்ன – அப்படியே அது செய்யலாவது -ஸ்வரூப ஞானம் யுடையாருக்கு அன்றோ – முன்னடி தோற்றாதபடியான ப்ரேமம் அடியாக வந்த இருட்சி யுடையாருக்கும் பற்றாசும் அங்கே யுண்டாகையாலே அத்தனை கார்யப் பாடு பார்த்துத் தானே தன்னைத் தருகிறான் என்று ஆறி இருக்க வேணுமோ என்கிறார் – நீர் சேஷ பூதர் ஆனாலும் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாக இருக்க வேண்டாவோ – சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் – அது வைதமான படி இறே -ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் – நீர் சேஷபூதர் ஆனால் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாய் இருக்க வேண்டாவோ – சேஷியை இப்படி நியமிக்கக் கடவதோ -என்னில்- அது விதேயமான போது இறே-ஆசை மிக்கால் செய்யல் ஆவது உண்டோ என்கிறார் – இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் என்று கொண்டு வடிம்பிட்டு நிர்பந்திக்கக் கடவதோ என்ன ப்ரேமம் அடியாக வந்த இருட்சி உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் – 56 | காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால், நாணப் படுமென்றால் நாணுமே? – பேணிக் கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும், திருமாலை நாங்கள் திரு. | திருமாலை காண கழி காதல், Thirumalai Kaan Kazhi Kaadhal - எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம் கைமிக்கு காட்டினால் நாணப்பம என்றால், Kaimikku Kaattinaal Naanaappam Endraal - மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்கவேணுமென்றால் அடங்கியிருக்க முடியுமோ? கருமாலை, Karumalai - கரிய திருமாலாகிய அப்பெருமானை பொன் மேனி காட்டா முன், Pon Meni Kaattaa Mun - அவனது அழகிய திருமேனி தானே காட்டிக்கொடுப்பதற்கு முன்னே நாங்கள் திரு, Naangal Thiru - நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி பேணி, Peni - விரும்பி காட்டும், Kaatum - காட்டிக்கொடுப்பன் |