| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2240 | இரண்டாம் திருவந்தாதி || இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்- ஆராய்ந்து பார்த்து பரதந்த்ரமாய் இருக்கையாலே என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன் அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம் இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் – 59 | அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து, பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, – இருள்திரிந்து நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம், ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து. | அருள் புரிந்த சிந்தை, Arul Purindha Chinthai - அருளோடு கூடின திருவுள்ளத்தை அடியார் மேல் வைத்து, Adiyaar Mael Vaiththu - அடியவராகிய எங்கள் மேலே வைத்து பொருள் தெரிந்து, Porul Therinthu - அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி காண்குற்ற அப்போது, Kaankutra Appodhu - கடாக்ஷித்தருளுகிற காலத்திலே இருள் இரிந்து, Irul Irinthu - அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று நோக்கினேன், Nookkinen - ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன் நோக்கி, Nookki - அப்படி ஆராய்ந்து ஒன் கமலம் அது, On Kamalam Adhu - அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை நினைந்தேன், Ninaindhen - (ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன் ஓர்ந்து, Oorndhu - (இத்திருவடிகள் தவிர நமக்கு வேறுபுகலில்லையென்று நிரூபித்து என்னையும், Ennaiyum - ஆத்மாவையும் அங்கு, Angu - அத்திருவடிகளிலே ஒக்கினேன், Okkinen - ஸமர்ப்பித்தேன். |