| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2244 | இரண்டாம் திருவந்தாதி || அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது ஆபத்து ஒரு தலையானால் -ஸ்ரீ பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசியறத் தானே போக்கும் என்கிறார் – இத்தால் ஸ்ரீ எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் – அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் -தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது- அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் – 63 | ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து ஏறேறிப் பட்ட இடுசாபம் – பாறேறி உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி, கண்டபொருள் சொல்லின் கதை. | ஏறு ஏழும், Eru Ezhum - ரிஷபங்களேழையும் வென்று, Vendru - ஜயித்து அடர்த்த, Adarttha - தொலைந்த எந்தை, Endhai - ஸ்வாமியான கண்ணபிரான் எரி உருவத்து ஏறு ஏறிபட்ட, Eri Uruvaththu Eru Eri Patt - நெருப்புப்போன்ற உருவத்தையுடையவனும் வருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த வீடு சாபம், Veedu Saapam - எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக) பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய, Paaru Eri Unda Thalaivai Niraiya - பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக கோடு, Kodu - குவிந்த அம் கை, Am Kai - அழகிய திருக்கையாலே ஒண் குருதி, On Kuruthi - அழகிய ரத்தத்தாலே கண்ட பொருள், Kanda Porul - அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை சொல்லில், Sollil - சொல்லத்தொடங்கினால் கதை, Kathai - பெரியதொரு பாரதகதையாக முடியும். |