| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2249 | இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜ நாந்தர பரரே யாகிலும் தன் பகலிலே வந்து அர்த்தித்தால் பொறுக்க மாட்டாமை -ஆளிட்டு அந்தி தொழாதே உடம்பு நோவத் தான் ஆயாசித்தே யாகிலும் அவர்களுக்கு கார்யம் செய்து கொடுக்குமவன் -என்கிறார் – இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச்சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது – இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது – தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை – இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே உப்புச் சாறு கொள்ளுமவர்களை சொல்லுகிறது- பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் -அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் – 68 | வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள வலிமிக்க வாள்வரைமத் தாக, – வலிமிக்க வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான், கோணாகம் கொம்பொசித்த கோ. | வலிமிக்க, Valimikka - மஹாபலசாலிகளாய் வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற கோரப்பற்களையுடையராய் வாள், Vaal - வாட்படையையுடையரான அவுணர், Avaunar - ஆஸுர ப்ரக்ருதிகள் மாள, Maal - முடிந்து போவதற்காக வலி மிக்க வாள்வரை மத்து ஆக, Vali Mikka Vaalvarai Mattu Aaga - மிக்க வலிவுள்ளதாய் ஒளியையுடைத்தான மந்தர மலையை மத்தாகக்கொண்ட வலி மிக்க வாள் நாகம், Vali Mikka Vaal Naagam - அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை சுற்றி, Suttri - கடைகயிறாகச் சுற்றி கடல் மறுக கடைந்தான், Kadal Maruga Kadaindhaan - கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்) கோள் நாகம், Kool Naagam - மிடுக்கையுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது கொம்பு, Kombu - கொம்புகளை ஒசித்த, Osiththa - முறித்தொழித்த கோ, Ko - ஸ்வாமியாவன் |