| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2251 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி இருக்கிறவர்கள் தன்னை அனுகூலித்த அன்று அவர்களுடைய ஹ்ருதயங்களுக்கும் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் ஒரு வாசி வைத்து பரிமாறான் அவன் என்கிறார் – அன்றிக்கே -தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது – ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது ஆக -அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும் ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் – தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது- தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது – இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து – அருளின ஸ்ரீ திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் – 70 | தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், தமருள்ளும் தண்பொருப்பு வேலை, – தமருள்ளும் மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே, ஏவல்ல எந்தைக் கிடம். | தமர் உள்ளம், Thamar Ullam - பக்தர்களுடைய ஹ்ருதயம் தஞ்சை, Thanjai - தஞ்சைமாமணிக்கோயில் தலை அரங்கம், Thalai Arangam - சிறந்ததான திருவரங்கம் தண் கால், Than Kaal - திருத்தண்கால் தமர் உள்ளும், Thamar Ullum - பக்தர்கள் தியானிக்கிற தண் பொருப்பு, Than Poruppu - அழகிய திருமலை வேலை, Vela - திருப்பாற்கடல் தமர் உள்ளம், Thamar Ullam - பக்தர்கள் சிந்திக்கிற மா மல்லை, Maa Mallai - திருக்கடன்மல்லை கோவல், Koval - திருக்கோவலூர் மதிள் குடந்தை, Mathil Kudandhai - திருமதில்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்) ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர், Eyvalla Endhaikku Idam Enbar - எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர். |