| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2253 | இரண்டாம் திருவந்தாதி || அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க- அது வேண்டா காண்-திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் – ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – ஸ்ரீ திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது- அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து -திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – 72 | போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங் கடவன்பே ராய்ந்து. | வானரங்கள், Vaanarangkal - குரங்குகளானவை போது அறிந்து, Podhu Arindhu - விடியற்கால முணர்ந்து (எழுந்துபோய்) பூ சுனை புக்கு, Poo Sunai Pukku - புஷ்பித்த நீர்நிலைகளிலே புகுந்து (நீராடி) ஏத்தும், Aethum - தோத்திரஞ் செய்யாநின்றன உள்ளம், Ullam - மனமே! போது, Podhu - (நீயும் அப்படிசெய்ய) வா அணி வெங்கடவன், Ani Vengadavan - அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய பேர், Per - திருநாமங்களை ஆங்கு அலர்ந்த, Aangu Alarntha - அப்போதே மலர்ந்த போது, Podhu - புஷ்பங்களை அரிந்து கொண்டு, Arindhu Kondo - பறித்துக்கொண்டு வந்து ஸமர்ப்பித்து ஆய்ந்து, Aayndhu - அநுஸந்தித்துக் கொண்டு வேங்கடன் மலர் அடிக்கே செல்ல, Vengadan Malar Adikke Sella - அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக போதும், Pothum - புஷ்பங்களையும் அணி, Ani - ஸமர்ப்பிக்கக்கடவர் |