| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2254 | இரண்டாம் திருவந்தாதி || அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் – அவன் பிரதிபந்தகம் போக்க-நான் அடிமை செய்தேன் என்கிறார் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம் நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யாவசித்த படியை அருளிச் செய்கிறார் – 73 | ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய், வாய்ந்த மலர்தூவி வைகலும், – ஏய்ந்த பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான் இறைக்காட் படத்துணிந்த யான். | பிறை ஏய்ந்த கோடு, Pirai Eyndha Kodu - சந்திரகலை போன்ற தந்தரத்தையும் செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுமுடைய கரி, Kari - கஜேந்திராழ்வானை விடுத்த, Vidutha - முதலைவாயில் நினறு விடுவித்தருளின பெம்மான், Pemmaan - ஸர்வேச்வரனான இறைக்கு, Iraikku - ஸ்ரீமந் நாராயணனுக்கு ஆள்பட, Aalpad - அடிமை செய்ய துணிந்தயான், Thunindhyaan - உறுதிகொண்டயேன் ஆதி நடு அந்திவாய் கைகலும், Aadhi Nadu Andhivai Kaikalam - காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும் வாய்ந்த மலர், Vaindha Malar - கிடைத்த புஷ்பங்களை ஆயிரம் பேர், Aayiram Per - அமிரத் திரநாராணகளையும் உய்ந்து உரைப்பான், Uyndhu Uraippaan - ஆராய்ந்து |