| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2257 | இரண்டாம் திருவந்தாதி || கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்- இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது- இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் – 76 | வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும், விரைப் பொலிந்த வெண்மல் லிகையும் – நிரைத்துக்கொண்டு ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே ஓதிப் பணிவ தூறும். | வரை சந்தனம் குழம்பும், Varai Chandhanam Kuzhambum - (மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும் வான் கலனும், Vaan Kalanum - சிறந்த ஆபரணங்களையும் பட்டும், Pattum - பட்டுப் பீதாம்பரங்களையும் விரை பொலிந்த, Virai Polintha - பரிமளம் விஞ்சி யிருக்கப்பெற்ற வெண் மல்லிகையும், Ven Malligaiyum - வெளுத்த மல்லிகை மலர்களையும் நிரைத்துக் கொண்டு, Niraiththuk Kondo - சேரித்துக்கொண்டு ஆதிக்கண் நின்ற அறிவன், Aadhikkan Nindra Arivan - ஸகலஜகத்காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய அடி இணையே, Adi Inaiye - உபய பாதங்களையே ஓதி, Othi - வாயாரத்துதித்து பணிவது, Panivathu - தலையார வணங்குவது உறும், Urum - ஸ்வரூபத்துக்குச் சேரும். |