| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2260 | இரண்டாம் திருவந்தாதி || ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது – தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்- திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது – ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க மறுத்துக் காடு ஏறப் போன ஸ்ரீ சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் என்கிறார் 79 | பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள் முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் – சொல் நின்ற தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். | தாய், Thaai - மாதாவான கௌஸல்யை பின் நின்று, Pin Nindru - பின் தொடர்ந்து இரப்ப, Irappa - (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும் கேளான், Kelan - அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும் பெரு பணைதோள், Peru Panaitol - சிறந்த முங்கில் போன் திருத்தோள்களையுடையளாய் சொல் நின்ற, Sol Nindra - தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற தோள் நலத்தான், Thol Nalathaan - புஜபலத்தையுடையனும் நேர் இல்லாதோன்றல், Ner Illaadondral - ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய மொய் மலராள்தான், Moy Malaraalthaan - அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள் முன் நின்று, Mun Nindru - முன்னை நின்று இரப்பாள், Irappaal - (இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும் அத்தனைக்கும், Aththanaiykkum - (காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு அவன் அளந்த நீள் நீலம் தான் நேர், Avan Alandha Neel Neelam Thaan Ner - அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது. |