Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2261 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2261இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆன படியாலே பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்- திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு-முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம் என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது – இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆனபடியைக் கண்டால் பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் – 80
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், – ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல்?
அடிமை நேர்ந்தேன், Adimai Nerndhen - உனது திருவடிகளில் கைங்கரியம்பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன், Oru Kan Malam Athu Ninaindhen - அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல், Un Che Adimeel - உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன், Anbu Aay Aarnthhen - அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த, Aarnth - பரிபூர்ணமான
அடி கோலம், Adi Kolam - திருவடிகளினழகை
கண்டவர்க்கு, Kandavarkku - ஸேவிக்கப்பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல், Padi Kolam Kanda Munnai Pagal Enkol - திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?