திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2263 | இரண்டாம் திருவந்தாதி || அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான ஸ்ரீ நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் – கீழ் -ஸ்ரீ நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் – வெறும் ஸ்ரீ நாராயணனை அல்ல -ஸ்ரீ திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் – கீழே ஸ்ரீ நாரணனைக் கண்டேன் என்றார்–இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் – வெறும் ஸ்ரீ நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் – 82 | வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை. | பதவுரை Show / Hideவடிகோலம், Vadikoolam - வடிக்கட்டின அழகையுடையவளும் வாளநெடுங்கண், Vaalanedu Kaan - ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும் மாமலராள், Mamalaraal - சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார் செல்வி படிகோலம், Selvi Padikoolam - சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து பல் நாள் அகலாள், Pal Naal Akalaal - க்ஷணகாலமும் விட்டுப்பிரியாமல் எப்போதும் கூடியேயிருக்கின்றாள் பின்னும், Pinnum - எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவத்தும் ஞாலத்தாள், Naalathaal - பூமிப்பிராட்டியானவள் அடிக்கோலி, Adikoli - பாரித்துக்கொண்டு நலம் புரிந்தது என் கொலோ, Nalam Purindhadhu En Koloo - அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக்கொண்டிருப்பது என்னோ கோலத்தால் குறை இல்லை, Koolathaal Kurai Illai - (எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ. |