திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2266 | இரண்டாம் திருவந்தாதி || அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்- இவருடைய அமிர்தம் அவனைப் பேசும் சொல்லும் – அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் – 85 | அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று. | பதவுரை Show / Hideஅமுது என்றும், Amuthu Endrum - அமிருதம் போன்றவனென்றும் தேன் என்றும், Then Endrum - தேன் போன்றவனென்றும் ஆழியான் என்றும், Azhiyan Endrum - திருவாழியை யுடையவனென்றும் அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும், Andru Amuthu Kondu Uganthaan Endrum - முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும் சொல்லப்பட்ட, Sollappatta - சொல்லப்பட்டிருக்கின்ற நல் மாலை, Nal Maalai - விலக்ஷணனான எம்பெருமானை அமுது அன்ன சொல் மாலை, Amuthu Anna Soll Maalai - அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால் ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன், Aethi Aethi Navinru Thozhuthen - பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன். |