| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2270 | இரண்டாம் திருவந்தாதி || நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் – இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் – பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் — ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற மாணியாய் அன்றோ கொண்டது- நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மை பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன – விரோதியைப் போக்கியும் விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் – 89 | கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து, அதவிப்போர் யானை ஒசித்து, – பதவியாய்ப் பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை, மாணியாய்க் கொண்டிலையே மண். | முன், Mun - முற்காலத்தில் கதம் சிறந்த, Kathai Sirandha - கோபம் மிகுந்த கஞ்சனை, Kanjanai - கம்ஸனை கதவி காய்ந்து, Kathavi Kaayndhu - கோபித்து முடித்து போர் யானை, Por Yaanai - போர் செய்வதாக எதிர்த்துவந்த குவலயாபீடமென்னும் யானையை ஒசித்து, Osiththu - கொம்பு முறித்து அதவி, Adhavi - கொன்று, பண்டு ஒரு கால், Pandhu Oru Kaal - முன்னொரு காலத்தில் பதவியாய், Pathaviyai - நீர்மையை யுடையனாயக்கொண்டு மாணி ஆய், Maani Aay - பிரமசாரியாகி மாவலியை, Mavaliyai - மஹாபலியினிடத்திலே பாணியால், Paaniyaal - கையினாலே நீர் ஏற்று, Neer Aetru - தானம் வாங்கி மண் கொண்டிலையே, Man Kondilaye - பூமியைப்பெற்றாயல்லையோ? |