| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2383 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன் ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் – இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு- ப்ரஹ்மாதி களுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார் தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற ஸ்லோகத்திற் படியே விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்- 2 | தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர் ஆருமறியார் அவன்பெரு மை, – ஓரும் பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும் அருள்முடிவ தாழியான் பால். | தேருங்கால்,Therungkaal - “ஆராயுமிடத்து. (- எத்தவம் செய்தார்க்கும் (எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்)) தேவன் ஒருவனே என்று,Devan Oruvanai Endru - பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று உரைப்பர்,Uraippar - (வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர், அவன் பெருமை,Avan Perumai - அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை ஆரும் அறியார்,Aarum Ariyaar - ஒருவரும் அறியமாட்டார் ஒரும் பொருள் முடிவும் இத்தனையே,Orum Porul Mudivum Ithanaiye - (வேதவேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம் முடிவது,Mudivathu - முடிவில் பலனையளிப்பது ஆழியான் பால் அருள்,Azhiyan Pal Arul - எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம். |