Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நான்முகன் திருவந்தாதி (97 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0நான்முகன் திருவந்தாதி - தனியன் || (நாராயணன் படைத்தான்) 31
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தா னென்னும்சொல்- சீரார்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து
Narayanan, நாராயணன் - ஸ்ரீமந்நாராயணன்
Naanmuganai, நான்முகனை - நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவை
Padaithaan, படைத்தான் - ஸ்ருஷ்டித்தான்
Naanmuganukku, நான்முகனுக்கு - அப்பிரமனுக்கு
Er aar Sivan pirandhaan, ஏர் ஆர் சிவன் பிறந்தான் - ஸாதநாநுஷ்டாநத்தினால் பூர்ணனான சிவன் பிறந்தான்
Ennum sol, என்னும் சொல் - என்னும் இவ்வார்த்தையைச்சொல்லுவதாய்
Seer aar, சீர் ஆர் - பெருமைகள் பொருந்தப்பெற்றதான
Mozhi seppi, மொழி செப்பி - இப் பிரபந்தத்தைச் சொல்லி
Vaazhalam, வாழலாம் - வாழ்ச்சி பெறலாம்
Nenjame, நெஞ்சமே - என் நெஞ்சே!
Moi poo Mazhisai paran adiye, மொய் பூ மழிசை பரன் அடியே - பூக்கள் நிரம்பிய திருமழிசைப்பிரானுடைய திருவடிகளையே
Vaazhthu, வாழ்த்து - மங்களாசாஸனம் செய்வாயாக
2382நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க அதுக்கு களை பிடுங்குகிறார் – ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி – அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் – ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே– தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும் தானே காட்டவும் -ஸ்ரீ மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் – ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும் வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் – சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும் அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான ஸ்ரீ எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்- ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன் இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – 1
நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.
நாராயணன்,Naarayanan - பரமபுருஷனானவன்
நான்முகனை,Naanmughanai - பிரமனை
படைத்தான்,Padaiththaan - ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்,Naanmughanum - அந்தப் பரமனும்
தான்,Thaan - தானே
முகம் ஆய்,Mugam Aay - முக்கியனாயிருந்து
சங்கரனை,Sankaranai - சிவனை
படைத்தான்,Padaiththaan - ஸ்ருஷ்டித்தான்
ஆழ்பொருளை,Aazhporaulai - (ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்,Yaan - அடியேன்
முகம் ஆய்,Mugam Aay - முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு,Andhaadhi Mel Ittu - இத்திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்,Ariviththen - உங்கட்கு அறிவிக்கத்தொடங்குகின்றேன்
நீர்,Neer - நீங்கள்
தேர்ந்து,Therndhu - ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்,Sindhamal Kolmin - (இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.
2383நான்முகன் திருவந்தாதி || ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன் ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் – இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு- ப்ரஹ்மாதி களுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார் தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற ஸ்லோகத்திற் படியே விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்- 2
தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெரு மை, – ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவ தாழியான் பால்.
தேருங்கால்,Therungkaal - “ஆராயுமிடத்து. (- எத்தவம் செய்தார்க்கும் (எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்))
தேவன் ஒருவனே என்று,Devan Oruvanai Endru - பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்,Uraippar - (வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை,Avan Perumai - அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்,Aarum Ariyaar - ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே,Orum Porul Mudivum Ithanaiye - (வேதவேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
முடிவது,Mudivathu - முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்,Azhiyan Pal Arul - எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.
2384நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும் முட்டக் காண வல்லார் இல்லை -நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்- அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் – அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது- 3
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், – ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?
பாலில்,Palil - திருப்பாற்கடலில் (- (எம்பெருமான்))
கிடந்ததுவும்,Kidandathuvum - சயனித்தருளு மழகையும்
அரங்கம்,Arangam - திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்,Meyathuvum - பொருந்தி வாழ்வதையும்
பண்டு,Pandhu - முன்பொருகால்
ஆலில்,Aalil - ஆலந்தளிரில்
துயின்றதுவும்,Thuyindrathuvum - பள்ளிகொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்,Ar Arivaar - யார் அறியவல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை,Naalathu Oru Porulai - இப்பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர்தம் மெய்பொருளை,Vaanavardham Meiporulai - நித்யஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை,Appil Aru Porulai - (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள் கண்வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு,Yaan Arindha Aaru - அடியேன் அறிந்த விதம் என்ன!
2385நான்முகன் திருவந்தாதி || சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் – பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் – என்று –தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் – 4
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, – வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.
ஆறு,Aaru - கங்காநதியை
சடை,Sadai - தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்,Karandhaan - மறையச்செய்து தாங்கிக்கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கொன் தன்னோடும்,Andar Kon Thannodum - தெவாதிதெவனான ஸர்வேச்வானோடு
கூறு உடையன் என்பதுவும்,Koora Udaiyan Enbathuvum - ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே,Kolgaithae - அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை,Veeru Oruvar Illamai Nindraanai - வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறுபெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை,Epporutkum Sollaanai - எந்தப்பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்தவாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை,Emmaanai - எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்,Thoguthu Sonnaen - சுருங்கப் பேசினே னித்தனை.
2386நான்முகன் திருவந்தாதி || நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய- இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் – எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இறே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய- ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே- சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் – அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற -இவ் வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை – தேவரே அறிந்து அருள வேணும் என்கை- 5
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, – உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி.
தொகுத வரத்தன் ஆய்,Thogutha Varaththan Aayi - (தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்,Tholaadhaan - ஒருவரிடத்திலும் தோல்வியடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்,Maarvam - மார்பை
வகிர்த்த,Vagirtta - இருபிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்,Valai Ughir - வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்,Thol - திருக்கைகளை யுடைய
மாலே,Maale - ஸர்வேச்வரனே!,
நீ,Nee - நீ,
உகத்தில்,Ughathil - பிரளயகாலத்தில்
உள் வாங்கி,Ul Vaangi - (உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளேயிட்டு வைத்து
ஒரு நான்று,Oru Naandru - (மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி,Uyarththi - (அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து
நீயே,Neeye - இப்படிப்பட்ட நீயே
நான்கும்,Naankum - (தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்,Aru Aanai - அந்தராத்மாவானாய்
அறி,Ari - இதனை அறிவாயாக.
2387நான்முகன் திருவந்தாதி || வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார் இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –என்றுமாம்- 6
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று.
சமணர்,Samanar - ஜைநர்கள்
அறியார்,Ariyar - உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர,Pavuththara - பௌத்தர்கள்
அயர்த்தார்,Ayarththaar - பிரமித்தார்கள்
சிவப்பட்டார்,Sivappattaar - சைவமதஸ்தர்கள்
சிறியார்,Siriyaar - மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்,Cheppil - இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய,Veri Aaya - பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை,Maayavanai - ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை,Maal Avanai - (அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை,Maadhavanai - திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
எத்தாதார்,Eththaathaar - (இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்,Aadhalal - ஆகையினாலே
இன்று,Indru - இப்போது
ஈனவரே,Eenavare - (இவர்கள்) நீசர்களே யாவர்.
2388நான்முகன் திருவந்தாதி || அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க- நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் – பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை – உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது – 7
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.
நாரணனே,Naaranane - நாராயணனே!,
இன்று ஆக,Indru Aaga - இனறைக்காகவுமாம்
நாளையே ஆக,Naalaiye Aaga - நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக,Ini Siridhu Nindru Aaga - இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்,Nin Arul - உன்னுடைய கிருபை
என் பாலதே,En Palathe - என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக,Nandru Aaga - நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்,Naan Unnai Andri Ileen Kandaai - நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ,Nee - நீயும்
என்னை அன்றி இலை,Ennai Andri Ilai - என்னையொழிய வேறொரு நகஷ்யனை உடையை யல்லைகாண்.
2389நான்முகன் திருவந்தாதி || நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் – உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்– வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் – 8
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை.
என் நெஞ்சை,En Nenjai - எனது மனமே!
ஈசனை வென்ற,Eesanai Vendra - ருத்ரனை ஜயித்த
சிலைகொண்ட,Silaikonda - வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்,Sem Kan Maal - புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா,Sera - பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்,Kulai Konda Eirain Thalaiyaan - கொத்துப்போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை,Ilankaiyai - லங்காபுரியை
ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடுத்த
கூர் அம்பன் அல்லால்,Koora Amban Allaal - கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து
குறை,Kurai - விரும்பத்தகுந்த
மற்ற துணை,Mattra Thunai - வேறொரு துணைவன்
இலை,Ilai - நமக்கு இல்லை.
2390நான்முகன் திருவந்தாதி || அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –ஸ்ரீ எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் – நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் – வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் – 9
குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, – கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு.
குறை கொண்டு,Kurai Konda - நைச்யா நுஸந்தானம் செய்துகொண்டு (- (பிரமதேவன்))
குண்டிகை நீர்,Kundikai Neer - கமண்டல தீர்த்தத்தை
பெய்து,Peidhu - வார்த்து
மறைகொண்ட,Maraikonda - வேதங்களிலுள்ள
மந்திரத்தால்,Mandirathal - புருஷஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி,Vazhthi - மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு,Aangu - (எம்பெருமான் உலகளந்தருளின) அக்காலத்தில்
அண்டத்தான்சே அடியை,Andaththaanse Adiyai - அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற,Karai Konda Kandaththaan Chennim Mel Eera - விஷகண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்,Kaluvinaan - விளக்கினான்.
2391நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம் ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்- திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்- ஜடை தரையிலே தாழும் படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும் ஸ்வ சக்தியில் குறைய நினையாத-ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே- 10
ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, – யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து.
ஆங்கு,Aangu - பரமபதத்திலே (- (அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து) (நாம் ஸமர்த்தரேயாவோம்))
ஆரவாரம் அது கேட்டு,Aaravaram Athu Kettu - (நித்ய முக்தர்களுடைய) ஸாமகான கோஷத்தைக் கேட்டு
அழல் உமிழும்,Azhala Umizhume - விஷாக்நியைக் கக்குகின்ற
காண,Kaan - ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே,Vallam Allame - ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
மா மலரான்,Maa Malaraan - சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்,Pookaar Aravu Anaiyaan - அழகிய சீற்றத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி,Pon Meeni - அழகிய திருமேனியை
யாம்,Yaam - அநந்யபக்தரான நாம்
வார் சடையான்,Vaar Sadayaan - நீண்ட ஜடையை யுடையருத்ரனும்
வாழ்த்து,Vazhthu - (எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே,Vallar Allare - அஸமர்த்தர்களே.
2392நான்முகன் திருவந்தாதி || ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது – சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-ஆதிராஜ்ய சூசகமான முடியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்- 11
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், – சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து.
சூழ்ந்த,Sozhndha - நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்,Thuzhai - திருத்துழாய்மாலை
மன்னு,Mannu - பொருந்தியிருக்கப் பெற்ற
நீள் முடி,Neel Mudi - நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லைமால் தன்னை,En Thollaimaal Thannai - என்னிடத்தில் நெடுநாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா,Vazha - ஒரு நொடிப்பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து,Van Kai Koopi Mathithu - அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி,Makkutam Thazhdthi - தலையை வணக்கி
தண் மலரால்,Than Malaraal - குளிர்ந்த புஷ்பங்களைக்கொண்டு
வணங்கு மின்கள்,Vanangu Mingkal - ஆச்ரயியுங்கள்,
வாய்,Vaai - (உங்களுடைய) வாய்
வாழ்த்துக,Vaazhththuka - (அவனைத்) துதிக்கட்டும்,
கண்,Kan - கண்கள்
காண்க,Kaannga - (அவனையே) ஸேவிக்கட்டும்
செவி,Sevi - காதுகள்
கேட்க,Kedhka - (அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.
2393நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் – வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் – 12
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித் தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.
மதியார்,Mathiyaar - உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்,Naankil - நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ,Poi Poi Veezha - சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்,Mathiththai - ஸங்கல்பித்தாய்,
மதி,Mathi - சந்திரனுடைய
கோள்,Kol - துன்பத்தை
விடுத்தாய்,Viduththai - போக்கியருளினாய்
மடு,Madu - ஒரு மடுவிலே
கிடந்த,Kidandha - (சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை,Maa Muthalai - பெரிய முதலையினாலுண்டான
கோள்,Kol - (கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்,Viduppaan - நீக்குவதற்காக
ஆழி,Aazhi - திருவாழியை
விடற்கு,Vidarku - (அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்,Mathiththai - நினைத்தருளினாய்
இரண்டும்,Irandum - முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்,Poi - ஒன்றையொன்று விட்டுப்போய்
இரண்டின்,Irandin - அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு,Veedu - சாபமோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்,Mathiththai - ஸங்கல்பித்தாய்.
2394நான்முகன் திருவந்தாதி || மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள் ஸ்ரீ எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் – 13
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், – வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்.
வீடு ஆக்கும் பெற்றி அறியாது,Veedu Aakkum Pettri Ariyadhu - மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்,Mei - சரீரத்தை
வருத்தி,Varuththi - (உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி,Koodu Aakki - எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று,Ninru - இப்படி நெடுங்காலம் தவம்புரிந்தும்
உண்டு கொண்டு,Undu Kondu - (தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்,Uzhalveer - திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்,Veedu Aakkum - மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்,Mei Porulthaan - மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள்தான்,Vedham Muthal Porulthaan - வேதங்களினால் முழு முதற்கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு,Vinnavarkku - நித்யஸூரிகளுக்கு
நல் பொருள்தான்,Nal Porulthaan - போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்,Naarayanan - ஸ்ரீமந்நாராயணனே யாவன்.
2395நான்முகன் திருவந்தாதி || இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் – பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார் 14
நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன் – பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர்.
நாராயணன்,Naarayanan - நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி,Ennai Aali - (விசேஷித்து) அடியேனை ஆட்கொள்பவனும்
நாகத்து சேராமல் காக்கும்,Nagathu Seramal Kaakkum - (அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்,Thirumaal Than - திருமாலினது
பேர் ஆன,Per Aan - திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத,Pesa Peradha - ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்,Pinam - ஜீவச்சவ மென்னலாம்படியுள்ள பாஹ்யகுத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச,Pesa - (அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு,Kettu - அவற்றைக்கேட்டு
பலர்,Palaar - பலபேர்கள்
ஆசைப்பட்டு,Aasai Pattu - தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்,Aalvaar - அகோகதியை யடைந்தொழிவர்
2396நான்முகன் திருவந்தாதி || இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில் ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் – 15
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த – வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை.
பல தேவர்,Pala Thevar - பல தேவர்கள்
எந்த,Endha - துதிக்கும்படியாக
பழ,Pazha - பூமியை
கடந்தான்,Kadandhaan - அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்,Paatham - திருவடிகளிலே
மலர்,Malar - புஷ்பங்களை
ஏற இட்டு,Eera Ittu - ஸமர்ப்பித்து
இறைஞ்சி,Irainji - வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்,Vazhththa Valar Aagil - மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீற்கண்டன் கண்ட நிலை,Neerkandan Kanda Nilai - நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மாற்கண்டன் கண்ட வகையே,Maarkandan Kanda Vagaiye - மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்,Varum Kandeer - ஸித்திக்குங்கிடீர்
2397நான்முகன் திருவந்தாதி || உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன – நான் ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷ பாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்- ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை நயாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப் பாட்டால் சொல்லுகிறது- 16
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, – பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால்.
அந்நான்று,Annantru - பாரதயுத்தம் நடந்த அக்காலத்து (- (மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே))
தேவர் தலை மன்னர் தாமே,Thevar Thalai Mannar Thaame - தேவாதிதேவனான தானே
மாற்று ஆக,Maatru Aaga - எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்,Pala Mannar - பல அரசர்கள்
போர்,Por - யுத்தக்களத்தில்
மாள,Mala - மடிந்து
வெம் கதிரோன்,Vem Kadhiron - ஸூர்யன்
மாய,Maya - (அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய,Pozhil Maraiya - பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்,Ther Azhiyal - சக்கராயுதத்தினால்
என் நெஞ்சம்,En Nenjam - எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்,Nilai Mannum - சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.
2398நான்முகன் திருவந்தாதி || நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது- ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும்படியை -என்கிறார்- 17
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
மெய் தவத்தோன்,Mei Thavaththon - மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன், (- (உரைத்தான் உபதேசித்தான்.))
ஞாலம் அளந்தானை,Njaalam Alandhaanai - உலகளந்தவனும்
ஆழி அளந்தானை,Aazhi Alandhaanai - க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை,Aal Mel Valarnthaanai - ஆலிலே மேல் வளர்ந்தவனுமான பெரானை
தான் வணங்கும் ஆறு,Thaan Vanangum Aaru - தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை,Aram Neriyai - நல்வழியை
மேலை யுகத்து,Melai Yugaththu - முன்யுகத்திலே
ஆல நிழல்கீழ்,Aal Nizhalkeezh - ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு,Naalvarkku - நான்கு மஹர்ஷிகளுக்கு
2399நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்திலும் ஸ்ரீ பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்- குறி கொண்டு ஸ்ரீ பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரீயது என்கிறார் – 18
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை, – வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம்.
மாறு ஆய,Maaru Aaya - எதிரிட்டு நின்ற (- (பெருமிடுக்கனான நரசிங்க மூர்த்தியை))
தானவனை,Thaanavanai - ஹிரண்யாஸுரனுடைய
மார்வு,Maarvu - மார்வை
வள் உகிரால்,Val Ukiraal - கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய,Irandu Koordu Aaga Seeriyah - இருபிளவாகப் பிளந்த
கோள்,Kol - அரியை
வேறு ஆக,Veeru Aaga - விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை,Aethi Iruppaarai - துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே,Mattru Avarai Saathi Iruppaar Thavam Vellume - அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.
2400நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்- ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் – ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷ பாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்- பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார் 19
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
தவம் செய்து,Thavam Seidhu - தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்,Naanmuganaal - பிரமனிடத்து
பெற்ற,Petra - (ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை,Varaththai - வரங்களை
அவம் செய்த,Avam Seidha - பழுதாக்கின
ஆழியாய்,Aazhiyaai - திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை,Emmai - அடியோங்களை
உவந்து,Uvandu - திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே,Kaappai Nee Andrae - காத்தருள்பவன் நீயேயன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே,Kaappadhanai Aavaai Nee Andrae - காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீயன்றோ,
எவ் உயிர்க்கும்,Ev Uyirkkum - (உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தை
ஈப்பாயும்,Eippaayum - அளிப்பவனும்
நீ அன்றே,Nee Andrae - நீயன்றோ.
2401நான்முகன் திருவந்தாதி || இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் – நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் – பிரித்து சொல்லுகிறது என்- அக்நியும்-குல பர்வதங்களும்-எட்டுத் திக்கும்-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான- இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்- 20
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை,
உலகு எல்லாம் நீயே,Ulaku Ellam Neeye - உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்,Nirpanavum - உலகங்கள் ஸத்தைபெற்று நிற்பதும்
நின் அருளே,Nin Arule - உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே,Thavam Ther Devanum Neeye - தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்,Eri Sudarum - ஜவுலிக்கின்ற அக்நியும்
மால்வரையும்,Maalvaraiyum - பெரியகுலபர்வதங்களும்
எண் திசையும்,En Thisaiyum - எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து,Andaththu - ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்,Iru Sudarum - சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை,Aaya Ivai - ஆகிய இவையெல்லாம்
நீயே,Neeye - நீயேகாண்.
2402நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின ஸ்ரீ எம்பெருமானுடைய சீற்றத்தையும்- அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் – இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது – ஸ்ரீ நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் – 21
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் – இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு.
திறந்து,Thirandhu - விரிந்து
எரி கான்ற,Eri Kaandru - நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்,Pilaam Vaai - பாழி போன்ற பெரியவாய்
இவையா,Ivaiyaa - இதுவோ!
எரி வட்டம்,Eri Vattam - கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்,Kangkal - திருக்கண்கள்
இவையா,Ivaiyaa - இவையோ!
எரி,Eri - அக்நிபோலே
பொங்கி,Pongi - கிளர்ந்து
காட்டும்,Kaattum - தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்,Imaiyor Perumaan - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன்
அரி,Ari - நரசிங்கமூர்த்தியாய்
பொங்கி,Pongi - கிளர்ந்து
காட்டும்,Kaattum - காட்டின
அழகு,Azhagu - அழகு
இவையா,Ivaiyaa - என்ன விஷயம்!
2403நான்முகன் திருவந்தாதி || ஆன பின்பு சர்வ காரணமான ஸ்ரீ நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் – ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது – 22
அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து.
தான் ஏழ் உலகுக்கும் வித்து,Thaan Ezh Ulakukkum Viththu - தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்,Thanmaiyavan - ஆச்ரயபூதனாய்
குழவி ஆய்,Kuzhavi Aay - (பிரளய காலத்தில்) சிறுகுழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்,Meen Aay - (பின்பொருகால்) மத்ஸ்யரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்,Uyir Alikkum - ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே,Thaane - எம்பெருமான் தானே
தன்மைக்கும்,Thanmaikkum - (ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்,Ari Uruvan - நரசிங்கவுருக் கொண்டவன்
தானே அழகியான்,Thaane Azhagiyan - அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்,Pazhagiyan - புராயபுருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே,Thale - திருவடிகளையே
பணிமின்,Panimin - ஆச்ரயியுங்கோள்
2404நான்முகன் திருவந்தாதி || அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில் அவை எல்லாவற்றையும் ஸ்ரீ எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்– அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ – சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்- இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் – 23
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
விடை அடர்த்த,Vidai Adartha - (நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும் (- (நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்) (போலிகண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.))
பத்தி உழவன்,Pathi Uzhuvan - (தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து,Pazham Punathu - (ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ,Viththum Ida Vendum Kolo - (ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
மொய்த்து எழுந்த,Moydhu Ezhuntha - திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன,Kaar Megam Anna - காளமேகம் போன்ற
கரு மால்,Karum Maal - கரிய திருமாலினது
திரு மேனி,Thiru Meeni - திருமேனியை
நீர் வானம்,Neer Vaanam - நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து,Nigazhndhu - எதிரேநின்று
காட்டும்,Kaattum - காண்பிக்கும்
2405நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் – நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து- அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்- 24
நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் – புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை.
பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்,Paal Pon Pasuppu Kaar Naanthu Vannamum - வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு
நிகழ்ந்தாய்,Nigazhndhai - (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்
இருவரையும்,Irivaraikum - மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்
வீய,Veeya - தொலையும்படி
இகழ்ந்தாய்,Ikazhndhai - வெறுத்தாய்
சேனாபதி ஆய்,Senapathi Aay - அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
மனம்,Manam - த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே
போர்,Por - பாரதயுத்தம்
முடிக்கும் வகை,Mudikkum Vagai - தலைக்கட்டும்படி
சினம் போர் சுவேதனை,Sinam Por Suvedhanai - சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை
புகழ்ந்தாய்,Pugazhndhai - கொண்டாடினாய்
2406நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் – ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார் 25
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று.
மதியாது,Madhiyadhu - உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்,Vagaiyal - நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்,Man Kondaai - (மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய்
மற்றும்,Mattrum - அதற்குமேலும்,
வயிரம்,Vayiram - வயிரமாகிற ரத்னத்தை
வகையால்,Vagaiyal - ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து,Kuzhaithu - இளகச்செய்து
உண்ணும்,Unnum - உண்பவனும்
தான் என்னும்,Thaan Ennum - தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி,Mavali - மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு,Vayiram Vazhakku - சத்ருத்வமுறையை
ஒழித்தாய்,Ozhiththai - போக்கினாய்
வகையால்,Vagaiyal - இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே,Varuvadhu Ondru Unde - உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.
2407நான்முகன் திருவந்தாதி || இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று அவன் படியை வெளியிடுகிறார்- ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் – 26
மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்கு மாறு.
கடன் வண்ணா,Kadan Vannaa - கடல்போன்ற திருநிறமுடைய பெருமானை!
யானை தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை,Yaanai Thozhuvaar Mattru Oruvaraiyum Inmai - அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்,Kattrai Sadaiyaan - சேர்த்துக்கட்டின ஜடையையுடையனான ருத்ரன்
கரி கண்டாய்,Kari Kandaai - ஸாக்ஷிகாண்
யான்,Yaan - இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை,Unnai - உன்னை
எற்றைக்கும்,Ettraikkum - எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு,Kandu Kolgirkkum Aaru - ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டுகொள்,Kandukol - கடாக்ஷித்தருள வேணும்.
2408நான்முகன் திருவந்தாதி || எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்- பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் 27
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள் – நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது.
பேதைகான்,Pethaikaan - மூடர்களை!,
மால்,Maal - எம்பெருமான்
தான் புகுந்த,Thaan Pugundha - தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்,Mada Nenjam - (எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்,Mattrathuvum - வேறொன்றை
பேறு ஆக,Peru Aaga - புருஷார்த்தமாக
கொள்வனோ,Kolvano - நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்,Neeradi Thaan - நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத,Kaan Maattadha - ஸேவிக்க முடியாததும்
தார்,Thaar - புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்,Agalam - போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை,Sae Adiyai - திருவடியை
யான் காண வல்லேற்கு,Yaan Kaan Valleerku - ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது,Idhu - இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.
2409நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பிராட்டி யோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்- அவன் லீலை-வாலியைக் கொன்ற ஜயமும்-ராவண வதமும் புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் – ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-நெஞ்சு அழியும்படி யாய் இறே இருப்பது இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்- 28
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை
தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு.
இலங்கை,Ilankai - லங்காபுரியானது
ஈடு அழிய,Eedu Azhiya - சீர்குலையும் படியாக
கட்டிய,Kattiya - (வானர சேனையைத் துணைகொண்டு) கட்டின
சேது,Sethu - திருவணை
இது,Idhu - இதுகாண்மின்,
விலங்கு,Vilangku - திர்யக்யோநியிற் பிறந்தவனான
வாலியை,Vaaliyai - வாலியை
வீழ்த்தது,Veelththathu - முடித்தது
எய்தான்,Eydhaan - அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது,Idhu - இப்போது நடந்த செயல்காண்மின்,
இலங்கை தான்,Ilankai Thaan - லங்காபுரியானது
ஒடுங்க,Odunga - அழியும்படியாகவும்
வில் நுடங்க,Vil Nudanga - சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க,Than Thaar Iraavanai Oon Odunga - (அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு,Ugappu - விலையான வியாபாரம்
இது,Idhu - இது காண்மின்
2410நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே- தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார் ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் – மதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை – 29
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்.
மிக,Miga - மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்,Puruvam Ondruk Konru Osanaiyaan - ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ,Veel - ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு,Andrik Kondo - சீறிக்கொண்டு
ஒரு கணையால்,Oru Kanaiyaal - ஒரு பாணத்தினால்
எய்தானவன்,Eydhaanavan - அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்,Mathikkil - சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே,Ugappu Uruvan Thaane - மநோஹரமான திருமேனியையுடையவன் அவனே
ஒளி உருவன் தானே,Oli Uruvan Thaane - தேஜோமயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே,Makappu Uruvan Thaane - மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.
2411நான்முகன் திருவந்தாதி || அப்பேர் அழகோடு -ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன் – என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் -அவ்வளவு அன்றிக்கே நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான் இனி ஸ்ரீ திருப் பாற் கடலில் ஸ்ரீ திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்- என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று- என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு ஸ்ரீ திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ – 30
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.
என்னை ஆளி,Ennai Aali - என்னை ஆட்கொண்டருள்பவனான (- (ஆன பின்பு இனி) (பொருந்தமாட்டான்.))
அரங்கத்து அவன்,Arangathu Avan - ஸ்ரீரங்கநாதன்
என்னை,Ennai - என்னை
அரங்கில்,Arangil - ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்,Eydhamal - பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்,Kaappaan - காத்தருள்வன்,
அவன்,Avan - அப்பெருமான்
என்னது,Ennathu - என்னுடைய
உள்ளத்து,Ullathu - நெஞ்சிலே
நின்றான் இருந்தான்,Nindraan Irundhaan - நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
அவன்,Avan - அப்பெருமான்
வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலில்
அரவு,Aravu - அப்பெருமான்
வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்,Aravu Anaiyin Mel - சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே,Kidakkume - பொருந்துவனோ?
2412நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் ஸ்ரீ எம்பெருமானேயான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் – நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்- அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் – 31
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.
மேல்,Mel - முன்பொருகால் (- (வாழ்த்தமாட்டாத))
நான்முகன்,Naanmugan - பிரமன்
அரணை,Aranai - ருத்ரனைக்குறித்து
இட்ட,Itta - கொடுத்த
விடுசாபம்,Vidusaapam - சாபத்தை
தாரகையுள்,Thaarakaiyul - இந்நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன்தான்,Naarayananthaan - எம்பெருமானே
ஒழித்தான்,Ozhiththaan - போக்கிருயளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை,Vaanor Perumaanai - நித்யஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத,Aeththaadha - வாய்கொண்டு
பேய்காள்,Peykaal - அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு,Pirakkum Karu - பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய)
மாயம்,Maayam - ஆச்சரியமான துக்கங்களை
பேசில்,Pesil - சொல்லப்புகுந்தால்
கதை,Kathai - ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும்.
2413நான்முகன் திருவந்தாதி || அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் – ஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் – ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன – ஒரு நொடி மாதரம் போது போக்கு இன்றி-ஆச்சர்ய குணத்தில் அகப்படாதது பரஹிம்சை ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்– 32
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, – வதைப்
பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி.
கதை பொருள்தான்,Kathai Porulthaan - (உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும் (- (அப்படிப்பட்ட எம்பெருமானுடைய))
உதைப்பு அளவு போது போக்கு இன்றி,Uthaippu Alavu Podhu Pookku Inri - ஒரு நிமிஷகாலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள,Thiru Vayittrin Ulla - ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
வாய்ந்த குணத்து,Vaayndha Gunaththu - திருக்கல்யாண குணங்களில்
படாதது,Padaadhadhu - ஈடுபடாத வஸ்து
வதை பொருள்தான்,Vadhai Porulthaan - அபதார்த்தமே யாகும்,
ஆய்ந்த குணத்தான்,Aayndha Gunaththaan - சிறந்த திருக்குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி,Adi - திருவடிகளை
அடைமின்,Adaimin - ஆச்ரயியுங்கோள்
2414நான்முகன் திருவந்தாதி || தாம் ஸ்ரீ கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் – அசாதாரணையான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் – 33
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு – வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு.
குறிப்பு,Kurippu - (அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால் (- (எம்பெருமான்))
அடி,Adi - திருவடியாலே
சகடம்,Sakadam - சகடாஸுரனை
சாடி,Saadi - ஒழித்தும்
அரவு,Aravu - காளியநாகத்தை
ஆட்டி,Aatti - வாலைப்பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை,Yaanai - குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து,Pidiththu - பற்றிக்கொண்டு
பின்னைக்கா,Pinnaikka - நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு,Val Eru - கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து,Eruththu - முசுப்பை
ஒசித்து,Osiththu - கொம்பை முறித்தொழித்தும்
பேய்,Pei - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை,Mulai - முலையில் தடவியிருந்த
நஞ்சு,Nanju - விஷத்தை
உண்டு,Undu - அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி,Vadi Pavalam Vaai Tholi - அழகிய பவளம் போன்றவாயையும் தோளையும்டையளான
இறுத்து,Iruththu - முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்,Pinnum Ko Aanaan - தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.
2415நான்முகன் திருவந்தாதி || என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் – உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் – 34
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.
கோட்டியூர் மேயானை,Kottiyoor Meyaanai - திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை,Vengadathu Meyaanai - திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த,Aetha - துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு ஆசை
நன்மை பயக்க,Nanmai Payakka - (எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு குதூஹலம்,
மெய் வினை,Mei Vinai - சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்,Noi - வியாதிகளும்
எய்தாமல்,Eydhamal - வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான,Thaan Kadaththum Thanmaiyana - தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தான்,Thaan - திருவடிகளை
வெறுப்பனோ,Veruppano - மறந்திருப்பனோ.
2416நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது ஸ்ரீ திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் – லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்- 35
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
நீன் ஓதம்,Neen Otham - பெரிய அலைகள் (- (இப்படியிருப்பதற்குக் காரணம்))
வந்து அலைக்கும்,Vandhu Alaikkum - கரையிலேவந்து வீசப்பெற்ற
மா மயிலை,Maa Mayilai - மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்,Maa Vallik Keniyaan - திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிறஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை,Ai Thalai Vaai Naagaththu Anai - ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா,Vaalai - வெறுமனே
கிடந்தருளும்,Kidandharulum - சயனித்திரா நின்றான்
வாய் திறவான்,Vaai Thiravaan - வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை
தாளால்,Thaalal - திருவடியாலே
உலகம் அளந்த அசவேகொல்,Ulagam Alandha Asavekol - உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?
2417நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே – அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்து ஸ்ரீ திருக் குடந்தை தொடக்கமான- ஸ்ரீ திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் – பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் – 36
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.
நாகத்து அணை,Naagaththu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே (- (எதுக்காக வென்னில்))
குடந்தை,Kudandhai - திருக்குடந்தையிலும்
வெஃகா,Veghaa - திருவெஃகாவிலும்
திரு எவ்வுள்,Thiru Evvul - திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை,Naagaththu Anai - சேஷசயனத்தின் மீது
பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலும்
ஆதி நெடுமால்,Aadhi Nedumaal - ஜகத்காரணபூனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை,Naagaththu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல்
அரங்கம்,Arangam - திருவரங்கத்திலும்
பேர்,Per - திருப்பேர் நகரிலும்
அன்பில்,Anbil - அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்,Kitakkum - பள்ளி கொண்டிருக்கின்றான்
அணைப்பார் கருத்தன் ஆவான்,Anaippar Karuttan Avan - அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.
2418நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் – ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்- ஆதி நெடுமாலை விவரிக்கிறது – 37
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், – மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு.
வான்,Van - ஆகாசமும்
தீ,Ti - அக்நியும்
உலவு வளி,Ulavvu Vali - உலாவுகின்ற வாயுவும்
மா கடல்,Ma Katal - பெரிய கடலும்
மா பொருப்பு,Ma Poruppu - பெரிய குலபர்வதங்களும்
உலவு,Ulavvu - திரிகின்ற
வெம் கதிர்தானும்,Vem Katirthanum - உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும்,Tanmathiyum - குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு,Mel Nilavu - மேலே நிலாவுகின்ற
கொண்டல்,Kontal - மேகங்களும்
பெயரும்,Peyarum - சேதநவர்க்கமும்
திசை எட்டும்,Tisai Ettum - எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்,Sulcciyum - ஆவரணங்களும்
அண்டம்,Antam - ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்,Tirumal - ஸர்வேச்வரனுடைய
அகைப்பு,Akaippu - ஸங்கல்பத்தினாலாயது.
2419நான்முகன் திருவந்தாதி || மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் – அதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் – ஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே பண்ணும் அபிமானமும் அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும் அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் – 38
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன்,உகைக்கு மேல்,
எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,
அப்போது ஒழியும் – அழைப்பு.
அகைப்பு இல் மணிசரை,Akaiyppu Il Manisarai - உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்,Aaru Samayam - (நீ சங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்,Pugaitthan - புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்,Poru Kadal Neer Vannan - அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்
உகைக்கும் ஏல்,Ugaiykkum Ael - உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது,Appodhu - அப்போதே
எத் தேவர் வாலாட்டும்,Eth Thevar Vaalattum - எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்,Evvaru Seigaiyum - எவ்விதமான (பஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு,Azhaiyppu - (தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்,Ozhiyum - ஒழிந்து போய்விடும்
2420நான்முகன் திருவந்தாதி || லோக வ்ருத்தாந்தம் ஆன படியாகிறது என்று கை வாங்கி-தமக்கு ஸ்ரீ திருமலையையும் அங்கு நின்று அருளுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்- மலையிலே பெரிய அருவிகள் ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும் பயப்பட்டு ஒதுங்கும் திருமலை– அன்றிக்கே நெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் – இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம் 39
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.
திருவேங்கடத்தானை,Thiruveengadathaanai - திருவேங்கடமுடையானை
காண,Kaan - கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்,Azhaiyppan - வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரன்றி வந்து இழிய,Varanri Vandu Izhaiya - திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை,Yaanai - யானைகளானவை
வெருவி,Veruvi - பயப்பட்டு நிற்கவும்
அரவு,Aravu - மலைப் பாம்புகளானவை
மழை,Mazhai - மழைபோல் சொரிகின்ற
பேர் அருவி,Per Aruvi - பெரிய அருவிகளானவை
மணி,Mani - அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்,Odundum - (அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு,Verppu - திருமலையை
கூட,Kooda - சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்,Thirukoodal Izhaippan - கூடலிழைக்கின்றேன்
2421நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் – நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் – ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன் 40
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
வெற்பு என்று,Verpu Endru - பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே (- (காண் – முன்னிலையசை))
வேங்கடம் பாடினேன்,Vengadam Paadinen - திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
விடு ஆக்கி நிற்கின்றேன்,Vidu Aakki Nirkindren - ‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்,Ninru Ninaikkindren - ‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற,Karkindra - ஓதப்படுகிற
நூல்,Nool - வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த,Valaiyil Pattirundha - வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்,Noolaatti Kelvanar - லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்,Kaal Valaiyil Pattirundhen - திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்துநிற்கின்றேன்.
2422நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்- நான் ஸ்ரீ திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்- 41
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர – பேணி
வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று.
கல் அருவி,Kal Aruvi - ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர,Muthu Udhira - முத்துக்கள் உதிரப்பெற்றதாய்,
ஒணம் விழவில்,Onam Vizhavil - திருவோணத்திருநாளில்
ஒலி அதிர,Oli Athira - (திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு,Peni Varu - (பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா,Vengadava - திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்,En Ullam Pugundhai - நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்,Thiruvengadam Adhanai Sendru Kaanal Urugindren - நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.
2423நான்முகன் திருவந்தாதி || நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக ஸ்ரீ திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் – ஸ்ரீ திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் – 42
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு.
சேண் உயர் வேங்கடத்தை,Seen Uyar Vengadathai - மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்,Sendru Vanangumin - சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
நீர்மையால்,Neermiyal - தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினைகெடுக்கும்,Ninru Vinaiyketukkum - பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு,Angu - அத்திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்,Kadi Kamalam Nanmuganum - பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்,Kan Moondrathaanum - முக்கண்ணனான சிவபிரானும்
என்றும்,Endrum - எக்காலத்தும்
அடி,Adi - (எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்,Kamalam - தாமரைப் புஷ்பங்களை
இட்டு,Ittu - ஸமர்ப்பித்து
எத்தும்,Ettum - துதித்துக்கொண்டிருப்பார்கள்.
2424நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் – 43
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.
மங்குல் தோய் சென்னி,Mangul Thoy Senni - மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை,Vadaveeng Kadaththaanai - வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்,Kaappu Anivaan - திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்,Thingal Sadai Aera Vaiththaanum - சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்,Thamarai Melaanum - தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்,Thaam - ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு,Kudai Aera Kuviththuk Kondo - திருமுத்துக்குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்,Gangul - ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்,Pugundhaargal - திருமலைக்குச் செல்லுவர்கள்
2425நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் – குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்- அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே- படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 44
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து.
குமரர் உள்ளீர்,Kumarar Ullae - கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு,Pandhu - முன்பொருகால்
குடங்கால் மேல்,Kudankaal Mel - மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்,Kondum Vaiththa Kuzhavi Aay - எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்,Poom - அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்,Kumaran - நித்யயுவாவான எம்பெருமான்
நிற்கும்,Nirkkum - நிற்றுமிடமான
தண்டம் அரக்கண்,Thandam Arakkan - தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை,Thalai - பத்துத் தலைகளையும்
தாளால்,Thaalal - திருவடியாலே
எண்ணி,Enni - கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே,Pozhil Vengadam Malaikke - சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்,Purindupoom - ஆசைகொண்டு செல்லுங்கோள்
2426நான்முகன் திருவந்தாதி || அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் ஸ்ரீ திருமலை -என்கிறார் – வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் – 45
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப – தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
புண்டரீகம் பாதம்,Pundareegam Paatham - திருவடித் தாமரைகளில்
புரிந்து,Purinthu - அன்புபூண்டு
மலர் இட்டு,Malar Ittu - புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து,Parinthu - மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப,Padukaadu Nirpa - வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்,Engum - ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து,Therinthu - விளங்கி
தான் ஓங்கி நின்கின்றான்,Thaan Ongi Ninkindraan - குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும்பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே,Than Aruvi Vengadame - குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்,Vaanorkkum - நித்யஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்,Mannorkkum - நிலத்தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு,Vaippu - நிதியாயிருக்கும்.
2427நான்முகன் திருவந்தாதி || திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற ஸ்ரீ திருமலையை எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்- அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று- 46
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று.
மா மதியை,Maa Mathiyai - ‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ,Mani Vilakku Aa - மங்கள தீபமாக
வைப்பன் என்று,Vaippan Endru - (திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்,Kai Neettum - உயரத்தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை,Yaanaiyai - ஒருயானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்,Eppaadum - நாற்புறமும்
வேடு வளைக்க,Veedu Valaikka - வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்,Kuravar - (அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்,Vil Edukkum - (அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான
வேங்கடமே,Vengadame - திருமலையையே
நாடு,Naadu - நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து,Valaiththu - விரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்,Aaduthum Ael - (மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம்பண்ணப் பெற்றால்
நன்று,Nandru - நல்லது
2428நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது – 47
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் ,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.
ஆளியும்,Aaliyum - யாளிகளும்
கோள் அரியும்,Kool Ariyum - வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்,Pon - பொன்களும்
மணியும்,Maniyum - மாணிக்கங்களும்
முத்தமும்,Muthamum - முத்துக்களும்
பூ மரமும்,Poo Maramum - பூத்தமரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்,Pala Mani Neerodu Poruthu Urulum Kaanamum - பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்,Vaanaramum - குரங்குகளும்
வேடும்,Vedum - வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை,Uday - உடையதான
வேங்கடம்,Vengadam - திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்,Nal Mani Vannan Oor - நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்
2429நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்- ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து பரம ப்ராப்யமான ஸ்ரீ திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்- 48
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், – வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை.
விண்ணோர்,Vinnor - நித்யஸூரிகளால்
மெய்ம்மையால்,Meimmaiyaal - உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்,Thozhuvadhuvum - ஆச்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே,Vengadame - திருமலையே
வினை,Vinai - பாவங்களையும்
மெய் நோய்,Mei Noi - உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்,Theerppadhuvum - போக்கடிக்கவல்லதும்
வேங்கடமே,Vengadame - திருமலையே
தானவர் வீழ,Thaanavar Veezha - அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு,Than Aazhipadai Thottu - தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை,Vaanavarai - தேவர்களை
காப்பான்,Kaappaan - காத்தருளுமெம் பெருமானுடைய
மலை,Malai - திருமலை
வேங்கடமே,Vengadame - திருவேங்கடமேயாயம்
2430நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது- 49
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, – அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று.
மலை,Malai - மந்தரபர்வதத்தை
ஆமை மேல் வைத்து,Aamai Mel Vaiththu - கூர்மரூபியான தன் மேல்வைத்து
வாசுகியை,Vasugiyai - வாஸுகிநாகத்தை
சுற்றி,Suttri - (கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்,Alaiyamal - நீர் வெளியில் புரளாமல்
பீற,Peera - (அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த,Kadaindha - (கடலைக்) கடைந்தருளின
பெருமான்,Perumaan - எம்பெருமானுடைய
ஆமை,Aamai - கூர்மரூபியாகத் திருவ்வதரித்த தானே
ஒரு கை பற்றி,Oru Kai Patri - (மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்,Thirunamam - திருநாமங்களை
கூறுவதே,Kooruvaadhe - வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்,Yaavarkkum - அனைவர்க்கும்
கூற்று,Kootru - வாய்ப்பேச்சாகக் கடவது
2431நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் – எப்போதும் ஸ்ரீ எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்- அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு அதாவது -தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே- 50
கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், – ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு.
கடல்,Kadal - திருப்பாற் கடலிலே
கிடக்கும்,Kitakkum - (பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண்வளர்ந்தருள்கிற
மாயன்,Maayan - ஆச்சரியபூதனாய்
ஆறு கரை,Aaru Karai - திருக்காவேரிக்கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்,Kitakkum - திருக்கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
உரை,Urai - ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு,Enakku - என்னுடைய
உள்ளத்து,Ullathu - நெஞ்சிலே
கிடக்கும்,Kitakkum - பதிந்திருக்கின்றது (ஆனபின்பு)
கூற்றமும் சாரா,Kootramum Saaraa - மிருத்யுபயம் அணுகாமலும்
கொடு வினையும்சாரா,Kodu Vinaiyum Saaraa - கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை,Thee Maatramum Saaraa Vagai - கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்,Arindhen - அறிந்தவனானேன்.
2432நான்முகன் திருவந்தாதி || அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் ஸ்ரீ பரம பதத்திலும் இல்லை -என்கிறார் – ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்- ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று – 51
எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால – புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை.
புனம்,Punam - தன்னிலத்திலே வளர்கிற
காயா,Kaayaa - காயாம்பூவினுடைய
வண்ணனே,Vannane - நிறம்போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு,Enakku - (உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப்பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே,Aavaar Aar Oruvarae - ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்,Emperumaan - ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்,Thaanae Thanakku Aavaan Allaal - தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனேயன்றி
மற்று,Mattru - எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்,Unnai Pirar Ariyaar - நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு,En Mathikku - (உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம்விலை உண்டோ,Vin Ellamvilai Undo - மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?
2433நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்- இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்- 52
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் – முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர்.
தக்கோர்,Thakkor - அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்,Vilakku Aalpaduvar - ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்,Vichaadhi Aetru Unbar - (மிகுத்யுதானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்,Thalaikku Aalpali Thirivar - ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்டவேந்தனையே,Mulaikkaalvidam Unda Vendaanaiye - (பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்,Veerumaa Ettaadhaar - விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்,Kallaadhavar - அறிவுகெட்டவர்களாய்க்கொண்டு
கடம் உண்டார்,Kadham Undaar - பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.
2434நான்முகன் திருவந்தாதி || ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்- நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை- 53
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு.
கல்லாதவர் இலங்கை,Kallaadhavar Ilangai - அறிவுகெட்ட ராக்ஷஸருடையதான இலங்காபுரியை
கட்டு அழித்த,Kattu Azhitha - அரணழித்த
காகுத்தன் அல்லால்,Kaakuththan Allaal - இராமபிரானையல்லது
ஒரு தெய்வம்,Oru Deivam - வேறொரு தெய்வத்தை
யான் இலேன்,Yaan Ileen - நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை,Polladha Devarai - கண்கொண்டு காணக்கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை,Devar Allaarai - (உண்மையில்) தெய்வத் தன்மையற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை,Thiru Illaa Devarai - பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும்ள்ள சிலரை
தேவு,Devu - தெய்வங்களாக
தேறேல்மின்,Theerelmin - நீங்கள் நினைக்க வேண்டா.
2435நான்முகன் திருவந்தாதி || சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்- சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு – 54
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், – யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.
தேவர் ஆய் நிற்கும் அத்தேவம்,Devar Aay Nirkum Atthavam - (அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்,Muthu Punarpum - அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்,Yaavar Aay Nirkindrathu Ellam - மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்,Ath Devaril - அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்,Moovar Aay Nirkum - த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்,Nedumaal Endru Ooraathaar - ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந்துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை,Karkindrathu Ellam Kada - பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.
2436நான்முகன் திருவந்தாதி || இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து -ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் – உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்- ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் – 55
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்.
அமரர் கடை நின்று,Amarar Kada Nindru - (இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றிநின்று
நாளும்,Naalum - நெடுங்காலம்வரையில்
கழல் தொழுது,Kazhal Thozhudhu - (அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெறமாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்,Idai Nindra Inbathar Aavar - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே,Kudai Nindra Neer Ootham Meeni Nedumaale - (இவ்வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல்போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!
நின் அடியை,Nin Adiyai - உனது திருவடிகளை
ஓத வல்லாரவர்ஆர்,Oda Vallaravar Aar - அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)
2437நான்முகன் திருவந்தாதி || இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் – அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும் தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி- அவன் தானே சாஷியாகத் தோற்றான் – 56
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், – உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு.
அவர் இவர் என்று இல்லை,Avar Ivar Endru Illai - பெரியார் சிறியார் என்று ஒருவாசியில்லை
அனங்கவேள் தாதைக்கு,Anangavel Thathaikku - காமனுக்குத் தந்தையான் கண்ணபிரானுக்கு
எவரும்,Evarum - ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்,Edhir Illai Kandeer - எதிர் நிற்கவல்லாரில்லை காண்மின்
உவரிக்கடல் நஞ்சம் உண்டான்,Uvarikadal Nanjam Undaan - கடலில் தோன்றின விஷத்தை உட்கொண்டவனான சிவன்
வாணற்கு,Vaanarkku - பாணாஸுரனுக்கு
கடன் என்று,Kadan Endru - ‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று,Udan Nindru - அவனோடு கூடவேயிருந்து
ஒருங்கு தோற்றான்,Orungu Thotran - குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.
2438நான்முகன் திருவந்தாதி || அவனுடைய ஸ்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று – அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன- அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ஸ்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்- ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே – 57
ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், – மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்.
பேசில்,Pesil - உண்மைபேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே,Peru Kuruntham Saaythavane - பெரிய குருந்தமரத்தை வேர் பறியத்தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்,Orungu Irundha Nal Niyaiyum Thee Vinaiyum Aavaan - உடன்நிற்கும் புண்யபாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த,Marungu Irundha - ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர்தாம்,Vaanavardham - தேவர்களும்
தானவர்தாம்,Thaanavardham - அசுரர்களும்
தாரகைதான்,Thaaragaithaan - இப்பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர்தாம்,En Nenjam Aanavardham - என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்,Allaatthu En - அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது.
2439நான்முகன் திருவந்தாதி || அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே- தமக்குப் பிறந்த ஸ்நேஹத்தை அருளிச் செய்கிறார்- என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்- ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து -பின்னையும் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி அத்தாலே தான் உளனான வனுக்கு-ஸ்நேஹத்தை உண்டாக்கினேன்- 58
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், – என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு.
என் நெஞசம் மேயான்,En Nenjam Meyaan - என்னுடைய நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்,Irul Neekki Empran - (நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்,Mun Orunaal - முன்பொருகாலத்தில்
மன் அஞ்ச,Man Anja - மஹாபலிச்க்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்,Man Alandhaan - பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை,En Nenjam Meyaanai - (அந்த திருக்கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா,Illaa - நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்,Vidai Aetraan - ரிஷபவாஹநனான ருத்ரனுடைய
வெம்வினை,Vemvinai - மஹாபாதகத்தை
தீர்த்து,Theerthu - தொலைத்து
ஆயானுக்கு,Aayaanukku - (அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்,Anbu Aakkinen - என் அன்பைச் செலுத்தினேன்.
2440நான்முகன் திருவந்தாதி || தம்மளவில் இல்லாதபடி ஸ்ரீ எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்- சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று- அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று – முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு- 59
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
அன்பு ஆவாய்,Anbu Aavaai - (என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்,Aar Amudham Aavaai - பரமபோக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்,Adiyenukku Inbu Aavaai - (உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே,En Kesavane - எம்பெருமானே!
கேடு இன்றி,Kedu Inri - ஒருகுறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு,Aalvaaykku - ரக்ஷிக்கவல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்,Ellamum Nee Aavaai - மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயேயா யிருப்பவனே!
பொன் பாவை கேள்வா,Pon Paavai Kelvvaa - திருமகள் நாதனே!
கிளர் ஒளி,Kilar Oli - (அத்திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்,Naan Adiyen - நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்,Aal - (அடியேனைக் காத்தருள்)
2441நான்முகன் திருவந்தாதி || இவர் தன்னை விடில் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமான் அதி சங்கிக்க விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்- என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது – விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் – 60
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய – கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்.
கேட்பார்க்கு,Ketpaarkku - ஸ்வயத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே,Aru Porul Aay Nindri Aranganey - அறியவொண்ணாத பரம்பொருளான அரங்கநாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்,Aal Paarthu Uzitharuvai - நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழிதருவேன்,Nin Thaal Paarthu Uzitharuven - உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை,Thanmaiyai - இந்த ஸ்வபாவத்தை
என்றும்,Endrum - என்றைக்கும் நிலைத்திருக்கும்படியாகக் கடாக்ஷித் தருளவேணும்
உன்னை விரும்புவதே,Unnai Virumbuvadhe - நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்,Manam - நெஞ்சில்
விள்ளேன்,Villain - தவிராதவனாயிருக்கின்றேன்.
2442நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்- தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று- 61
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு.
மதுசூதன் தன்னை,Madhusoodhan Thannai - மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்,Manam Ketham - மனவருத்தங்கள்
சாரா,Saraa - வந்துசேராவாம்
ஒன்றி நின்று,Onri Nindru - பொருந்தி நின்று
ஏழ் உலகை,Ezhu Ulagai - ஸப்தலோகங்களிலும்
ஆணை ஒட்டினான்,Aanai Ottinaan - (தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று,Indru - இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்,Thanakke Thanjam Aa Thaan Kollil - தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று,Sendru - (நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு,Onri Nindra Thiru - (என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்,Enakke Thaan - என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.
2443நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்- மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச் சொல்லும்படி அன்றிக்கே ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீயபதி தானே- 62
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து.
திரு இருந்த மார்வன்,Thiru Irundha Maarvan - பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்,Sireedharan Than - ‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை,Vandu Ulavu Than Thuzhai Thar Thannai - வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி,Soodi - தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து,Thariththu - அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்,Thiru Nindra Pakkam Thiravithu Endru Ooraar - ‘பிராட்டி பொருந்தியிருக்கப்பெற்ற வலப்பக்கத்தை யுடைய வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறியமாட்டாதவர்கள்.
கரு நின்ற,Karun Nindra - (தங்களைப்போலே) கர்ப்பவரஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்,Kallaakku Uraippar - (பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.
2444நான்முகன் திருவந்தாதி || நான் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் – தரித்து இருந்தேன் ஆகைக்காக-பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்- 63
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது.
தாராகணம்,Thaarakanam - நக்ஷத்ரகணங்களினுடைய
போர்,Por - (சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த,Virithu Uraitha - (ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை,Vem Naagathu Unnai - (பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து,Therithu - அநுஸந்தித்தும்
எழுதி,Ezhuthi - எழுதியும்
வாசித்தும்,Vaasiththum - (எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்,Kaettum - (ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி,Vanangi - நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்,Vazhipattum - உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்,Poosiththum - பூஜித்தும்
போது போக்கினேன்,Podhu Pookkinen - காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே,Thariththirundhen Aagave - ஸத்தை பெறுவதற்காக.
2445நான்முகன் திருவந்தாதி || அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை- உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே-நமக்கு உத்பாதகனானவன் –ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே இவ்வாத்மாவுக்கு உறுவது – 64
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது.
பொன் மகரம் காதானை,Pon Makaram Kaadhanai - அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி,Aadhi - ஜகத்காரண பூதனும்
பெருமானை,Perumaiyai - பெருமை பொருந்தியவனும்
நாதனை,Nadhanai - (அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை,Nallaanai - (ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை,Naaranai - நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை,Nam Ezhpirappu Arukkum Sollaanai - நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்கவல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்,Podhu Aana Ittu Irainji Aeththumin - புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே,Solluvadhai - (அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது,Soodhu - நல்ல வாய்ப்பு
2446நான்முகன் திருவந்தாதி || ஸ்மர்தவ்யனான ஸ்ரீ எம்பெருமானுடைய நீர்மையாலே ஸ்ரீ பரம பத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார் அன்றிக்கே ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்- ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம் 65
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை – யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்.
மாது ஆய,Maathu Aaya - அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை,Maalavanai - (ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை,Maadhavanai - திருமாலைக் குறித்து
சொல் மாலை,Sol Maalai - இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு,Yaadhanum Valla Aa Sindhiththu Iruppeerkku - ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்,Vaikundhaththu Idam Illaiyo Solliir - ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்,Solliir - சொல்லுங்கள்
சூது ஆவது,Soodhu Aavathu - இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்,En Nenjaththu Enninain - என்மனத்தில் உறுதி கொண்டேன்.
2447நான்முகன் திருவந்தாதி || நான் ஸ்ரீ எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன் அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்- 66
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம்.
பண்டு,Pandhu - என்னைத் திருத்திப்பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு,Padam Naaga Anai Nedhiya Maarku - படங்களையுடைய சேஷசயனத்தில் பள்ளிகொண்டருள்பவனாயிருந்த ஸர்வெச்வரனுக்கு
இன்று,Indru - இப்போது முதலாக
எல்லாம்,Ellam - மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது,Idam Aavathu - வாஸஸ்தானமாவது
என் நெஞ்சம்,En Nenjam - எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு,Mathi Soodi Thannodu - பிறைச்சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை,Ayanai - பிரமனையும்
திடம் ஆக,Thidam Aaga - பரம்பொருளாக
வையேன்,Vaiyen - மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்,Vaiyen Naan - (த்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்,Aal Seyyen - (அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன் (இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்,Valam - (திருமாலின் பரிக்ஹமாயிருக்கப்பெற்ற) மிடுக்கேயாம்.
2448நான்முகன் திருவந்தாதி || நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை – பஹூ குணனான ஸ்ரீ எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் – நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இறே என்கிறார் ஆகவுமாம் – இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து- ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் – இவை அன்று உத்தேச்யம்-அவனை ஏத்துகையே உத்தேச்யம் 67
வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை
நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம்.
நாரணைனை,Naaranainai - ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை,Naapathiyai - (என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை,Gnanam Perumaanai - அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்,Vaikal Nalam Aaga Aethum Thiram - எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக,Valam Aaga - நன்மைதருவதாகிலுமாகுக
சீர்அணனை,Seeranai - நற்குணங்களை பொருந்தியிருக்கப்பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக,Maattaamai Thaan Aaga - நன்மைதரமாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக,Kulam Aaga - நற்குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக,Kuttram Thaan Aaga - கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)
2449நான்முகன் திருவந்தாதி || யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் – அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது- 68
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.
நமனும்,Namanum - யமனும்
தன் தூதுவரை,Than Thoodhuvarai - தனது சேவகர்களை
கூவி,Koovi - அழைத்து
செவிக்கு,Sevikku - (அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்,Thiruvadi Than - ஸர்வேச்வரனுடைய
நாமம்,Naamam - திருநாமத்தை
மறந்தும்,Marandhum - மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்,Puram Thozhaamanthar - தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பெல் மின் கண்டீர்,Thirampel Min Kandheer - (ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி,Irainji - வணங்கி
சாதுவர் ஆய்போதுமின்கள் என்றான்,Saadhuvaar Aaypodhuminngal Endraan - (கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திகக்கடவீர்கள் என்று சொன்னான்.
2450நான்முகன் திருவந்தாதி || செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம் பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்- கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் – 69
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.
செவிக்கு இன்பம் ஆவதுவும்,Sevikku Inbam Aavadhuvum - கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்,Sem Kanmaal Naamam - புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு,Bhuvikku - பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே,Bhuviyum Adhuvae - (நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத்திருநாமமே
கவிக்கு நிறைபொருள் ஆய்நின்றானே,Kavikku Niraiporul Aayninraan - பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர்பட்டேன்,Nerpatten - தெய்வாதீனமாக அடையப்பெற்றேன்,
பார்க்கில்,Paarkkil - ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்,Marai Porulum Aththanaiye Thaan - வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.
2451நான்முகன் திருவந்தாதி || இஜ் ஜகத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்- கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்- வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில் நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ பிரசித்தம் அன்றோ -என்கிறார் – 70
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் – யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய்.
தான் ஒருவன் ஆகி,Thaan Oruvan Aagi - (விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று,Sendru - (மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு,Aangu - அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை,Iru Nilaththai - விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த,Adipadaiththa - திருவடியினளவாக ஆக்கிக் டிகாண்ட (அளந்து கொண்ட)
சேய்,Sey - சிறுபிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்,Yen Oruvan Aay - விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி,Tharani - பூமியை
இடந்து அடுத்து,Idandhu Aduthu - (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்,Eiyittril - (தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது,Thangiyathu - தரித்தமையை
யான் ஒருவன்,Yaan Oruvan - நானொருவன் மாத்திரம்
இன்றா,Inndraa - இன்றாக
அறிகின்றேன் அல்லேன்,Arikkinren Alleen - அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
2452நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்- பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது அறியாது இருந்த அளவேயோ – சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான் அறியப் போமோ -என்கிறார் 71
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.
சிறியன்,Siriyan - (ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்,Aniyan - ஸுலபனாயும்
மிக பெரியன்,Miga Periyan - (அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க்கொண்டு
சேயன்,Seyyan - எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற,Aayan Aay Nindra - இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையையுடையனாயும்
துவரை கோன் ஆய்நின்ற,Thurai Kon Aay Nindra - த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிகுந்த
மாயன்,Maayan - எம்பெருமான்
அன்று,Andru - (பாரதயுத்தம் நடந்த) அக்காலத்தில்
ஓதிய,Othiya - (திருத்தேர்த்தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச்செய்த
வாக்கு அதனை,Vaakku Adhanai - (சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்,Kallaar - அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்,Mei Gyaanam Il - தத்துவவுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்,Aedhilar Aam - பகவத் விரோதிகளாவர்.
2453நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் – இவ் வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் – நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும் என்னச் சொல்லுகிறார் –என்றுமாம்- 72
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல – நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்.
இல்லறம் என்னும் சொல்லும்,Illaram Ennum Sollum - க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்மயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும் (- (முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு))
சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல
இல்லேல்,Illeel - அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்,Thuravaram Ennum Sollum - ஜ்ஞாநயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல
இல்லேல்,Illeel - அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்,Allana Aram Ennum Sol - (பக்தியோகம் தேசவாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல
நல் அளம் ஆவனவும்,Nal Alam Aavavanum - நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்,Naal Vedam Maa Thavavum - நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது,Naaranane Aavathu - ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பன வாகின்றன.
ஈது,Eethu - இவ்வுண்மையை
அன்று என்பார் அது,Andru Enbar Adhu - மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது.
2454நான்முகன் திருவந்தாதி || அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று – வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்- அவன் என்றும் உண்டாக்கி வைத்த ஸ்ரீ பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா- என்கிறவர்களால் காணப் போகாது ஸ்ரீ க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாய பாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்- 73
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த
பண்டைத்தா னத்தின் பதி.
அனைத்து உலகும்,Anaiththu Ulagum - எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த,Undu Umizhndha - (பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான்தன்,Per Aazhiyaanthan - பெருமைதங்கிய திருவாழியாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை,Perumaiyai - மஹிமையை
அறிவார் ஆரே,Arivaar Aare - அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த,Aavan Vaiththa - அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி,Pandait Thaanaththin Pathi - பரமபதமார்க்க மென்னத் தகுந்த சரமச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்,Kaar Serindha Kandaththaan - நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்,En Kannaaan - நான் முகனும்
காணான்,Kaanaan - அறியமாட்டார்கள். (அவர்களே அறியமாட்டாதபோது மற்றபேர்கள் அறியமாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)
2455நான்முகன் திருவந்தாதி || தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் – தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்- ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் – மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி – ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக ஸ்ரீ திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து – அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க- ஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து ஸ்ரீ திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ளப் பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது- 74
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா.
பதி பகைஞற்கு ஆற்றாது,Pathi Pagaignarukku Aattraadhu - ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி, (- (ஒன்று வேறொன்றை))
பாய் திரை நீர்பாழி,Paai Thirai Neerpaazhi - பாம்பின அலைகளோடே கூடின நீரையுடைத்தான கடல்போலே குளிர்ந்த திருபடுக்கையை
மதித்து,Mathiththu - புகலிடமாக நம்பி
அடைந்த,Adaindha - வந்துபற்றின
வாள் அரவம் தன்னை,Vaal Aravam Thannai - ஒளிபொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து,Mathiththu - ஆதரித்து
அவன் தன்,Avan Than - அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய,Val Aagathu Aettriya - வலிமைதங்கிய சரீரத்திலே ஏறவிட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது,Maameeni Maayavanai Allaadhu - சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
என் நா,En Naa - எனது நாவானது
ஏத்தாது,Aethaadhu - தோத்திரம் செய்யாது.
2456நான்முகன் திருவந்தாதி || ஏவம்விதமான ஸ்ரீ எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்- 75
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் – பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு.
தீக்கொண்ட செம் சடையான்,Theekonda Sem Sadaiyaan - நெருப்புப்போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக,Nalam Aaga - தகுதியாக
என்றும்,Endrum - எந்நாளும்
பூ கொண்டு,Poo Kondo - புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று,Pin Sendru - அநுஸித்து
வல்ல ஆறு,Valla Aaru - தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த,Aetha - துதிக்க
மகிழாத,Maghilaadha - (இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்,Vaikundham Selvanar - ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு,Sae Adi Mael Paatu - திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு,Naak Kondo - நாவினால்
மானிடம்,Maanidam - மனிதர்களை
பாடேன்,Paadeen - பாடமாட்டேன்
2457நான்முகன் திருவந்தாதி || லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று- அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் – 76
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட் ட தற்பு.
பாட்டும் முறையும்,Paatum Muraiyum - இயலும் இசையும்
படு கதையும்,Padu Kathaiyum - பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்,Pal Porulum - பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்,Eettiya Thiyum - (பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்,Iru Visumbum - பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்,Kaetta Manuvum - வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி,Karuthi - அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்,Marai Naankum - நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன,Maayan Thana - ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட,Maayail Patt - ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு,Tharpu - தத்துவங்களாம்.
2458நான்முகன் திருவந்தாதி || என்னுடைய தோஷத்தையும் பாராதே ஸ்ரீ எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு- என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் – 77
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், – எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு.
தட கடலை,Thada Kadalai - பரந்த தெற்கு சமுத்ரத்தை (- (விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி))
கல் கொண்டு,Kal Kondu - மலைகளினால்
தூர்த்த,Thoortha - அணைசெய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்,Kadal Vannam Thaan - கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை,Ennai - (தோஷமு வடிவெடுத்தவனான) என்னை
தற்பு,Tharpu - உள்ளபடியே
அறியான் ஏலும்,Ariyaan Aelum - அறிந்திலனாயினும்,
என் கொண்ட,En Konda - என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்,Vem Vinaiyum - கொடிய பாவங்கள் யாவும்
நீங்க,Neenga - என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு,Kandu - அழகிய திருக்கண்களாலே குளிரக்கடாக்ஷித்து
மனம்,Manam - தனது திருவுள்ளத்தை
வைத்தான்,Vaiththaan - (என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
ஏ வினையும்,Ae Vinaiyum - பாபமென்று பேர்பெற்றவை யடங்கலும்
மாயும்,Maayum - உருவழிந்துபோம்
2459நான்முகன் திருவந்தாதி || உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால் அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் – திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் – 78
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, – வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங்
காரலங்க லானமையா லாய்ந்து.
காமன்,Kaaman - மன்மதனுடைய
உடல்,Udal - சரீரத்தை
கொண்ட,Konda - நீறாக்கின
தவத்தாற்கு,Thavaththaarku - தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை,Umai - (மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த,Unartha - தெரிவிக்க,
அங்கு,Angu - அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை,Aar Alangkal Aanamai - மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்,Aayndhaal - ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே,Vandu Alambum Thaar Alangkal Neelmudiyana Than Peyarkettirundhe - வண்டுகள் ஒலிக்கப் பெற்றபூமாலயை நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு,Kandu Vananginaarkku - நேரேகண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்,En Aam Kol - எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)
2460நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து- ஸ்ரீ பரம பதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் ஸ்ரீ பரம பதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை – சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார் 79
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், – ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.
ஆதி,Aadhi - ஜகத்காரணபூதனான
பெருமானை,Perumaiyai - ஸர்வேச்வரனை
அன்பினால்,Anbinal - ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு,Aayndhu Konda - அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து,Vaayndha Manaththu - (தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்,Iruththa Vallaarkal Thaamum - நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்,Tham Vaikundham - தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து,Viraindhu - சீக்கிரமாக
காண்பார்,Kaanpaar - காணவிரும்பமுடையராய்
ஏய்ந்த,Eyndha - ஆத்மாவோடு செறிந்த
தம்மெய்,Thammaiy - தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக,Kuntham Aaga - வியாதியாக
விரும்புவர்,Virumbuvar - எண்ணுவர்
2461நான்முகன் திருவந்தாதி || லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது – இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் – பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த ஸ்ரீ கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் 80
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன் – பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு,படுநரகம்
வீடின வாசற் கதவு.
உலகம்,Ulagam - சிறந்த பாகவதர்கள்
பரந்து,Parandhu - எங்குத் திரிந்து
பாடின,Paadina - பாடின பாடல்களையும்
ஆடின,Aadina - ஆடின ஆட்டங்களையும்
கேட்டு,Kettu - கேட்டதனால்
படு நரகம் வாசல்,Padu Naragam Vaasal - க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு,Kathavu - கதவுகள்
வீடின,Veedhina - விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்,Mel Orunaal - முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க,Vellam Parakka - பிரளய வெள்ளம் பரவினபோது
உலகம்,Ulagam - உலகங்களை யெல்லாம்
கரந்து,Karandhu - (திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த,Kaathu Alitha - துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்,Kannan - கண்ணபிரானை
விரைந்து அடைமின்,Virainthu Adaimin - சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்
2462நான்முகன் திருவந்தாதி || நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ- என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் – மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி ஸ்ரீ பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் – காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் – 81
கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
வினையாவி தீர்ந்தேன், – விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.
நீ,Nee - (ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி,Katra Mozhi Aagi - நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து,Kalandhu - என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை,Nal Tamizhai - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி,Vidhai Aaga Viththi - (பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை,En Ullaththai - எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்,Vilaitthai - விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்,Manam - மனமானது
கதவு என்றும்,Kathavu Endrum - எம்பெருமானையடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்,Manam Kaanal Aam Endrum - (மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்,Kuthaiyum Vinai Aavi Theerndhen - (ஆகவிப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.
2463நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் – இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்- செவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத- ஸ்ரீ சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை- 82
கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து
காம வேள் தாதை,Kaama Vel Thathai - மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்,Alarntha Alarkal Ittu Aeththum Eesanum - மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து,Veenthu - தேவாதிதேவன்
என் உள்ளத்து,En Ullaththu - எனது நெஞ்சிலே
கலந்தான்,Kalandhaan - சேர்ந்து கொண்டான்
நான்முகனும்,Naanmuganum - பிரமனென்ன
என்ற இவர்கள்,Endra Ivargal - என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத,Vittu Aeththa Maattadha - நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்,Eethu Oppathu Nalam Thaanum Undaer - இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)
2464நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று – தரிக்க மாட்டாதே இருக்கும் – சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்- இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –என்றுமாம்- 83
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், – சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர்.
நேமியான்,Nemiyaan - திருவாழியாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்,Maal Vannan - வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு,Saarndhavarukku - தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்,Vendar Aay - அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்,Vinnavar Aay - தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்,Maathu Aay - தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
மற்று எல்லாம் ஆய்,Mattru Ellam Aay - மற்றுமுள்ள எல்லாவகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்,Aatran - ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி,Vin Aagi - ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்,Thannali Aay - அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்,Manthar Aay - மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால்,Pinnaal - இவ்வளவுக்குமேலும்
தன் கொடுக்கும்,Than Kodukkum - தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்,Thaan Seyyum Pithir - (இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்
2465நான்முகன் திருவந்தாதி || ருத்ரனும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்- அவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் — 84
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.
அதிரும் கழல் கால,Adhirum Kazhal Kaala - ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மனன்னை,Manannai - ராஜாதிராஜனான
கண்ணனையே,Kannanaie - கண்ணபிரானையே
நாளும்,Naalum - எந்நாளும்
தொழ,Thozha - தொழும்படியாக
காதல்,Kaadhal - ஆசைப்படுவதையே
தொழில்,Thozhil - நித்ய கருமமாக
பூண்டேன்,Poondhen - ஏற்றுக்கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்,Pithirum Manam Ileen - (விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்,Pinjagan Thannodu Edhiravan - (ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்,Avan Enakku Neraan - அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.
2466நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் – மற்று வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்த ஒண்ணாதபடி -ஸ்ரீ எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்- எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த- 85
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன்.
கழி சினத்த,Kazhi Sinath - மிகக்கோபத்தை யுடையவனும்
வல்லாளன்,Vallalan - மிக்க வலிமையுடையவனும்
வானார் கோன்,Vaanar Kon - குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி,Vaali - வாலியினுடைய
மதன்,Madhan - மதத்தை (கொழுப்பை
அழித்த,Azitha - தொலைத்த
வில் ஆளன்,Vil Aalan - சார்ங்கவில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து,Nenjaththu - எனது நெஞசிடத்து
உளன்,Ulan - எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு,Enakku - (அந்த இராமபிரானுடைய திருக்குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்,Thozhil - நித்யகருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த,Thollai Maal Than Naamam Aetha - புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு,Enakku - (உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே,Mattrathuve - கீழ்ச்சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்,Pozhudhu Podhum - போதுபோகும்.
2467நான்முகன் திருவந்தாதி || ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் – அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன் நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்- 86
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை.
நல் நெஞ்சை,Nal Nenjai - எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்,Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்,Ulan Kandaai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்,Than Oppaan - (தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு,Thamiyerku - ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்,Endrum Ulan Kandaai - எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து,Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்,Ulan Kandaai - நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு,En Oppaarkku - என்னைப்போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்,Thaan Eesan Aayi Ulan Kaan - தானே நிர்வாஷகனாயிருக்கிறான் காண்
இமை,Imai - இதனை அறி.
2468நான்முகன் திருவந்தாதி || சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் — தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்- 87
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார் – சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர்.
இமயம் பெருமலைபோல்,Imayam Perumalipol - பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட,Indiranarkku Itta - இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து,Samayam Virundhu - வழக்கமான ஆராதனையை
உண்டு,Undu - உட்கொண்டபோது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்,Kaarkandan Naanmuganodu Kaappaan Aar - சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்,Aar Kaappaar - காப்பாற்றினது யார்?
சமயங்கள்,Samayangal - வைதிக மதங்களை
கண்டான்,Kandaan - பிரவர்த்திப்பித்தவன்
ஆர்,Aar - யார்?
அவை காப்பான்,Avai Kaappaan - அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்,Aar - யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்,Ulagodu Uyir Undaan Aar - உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)
2469நான்முகன் திருவந்தாதி || இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் – உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்- அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் ஸ்ரீ எம்பெருமான் திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு- 88
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, – செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.
உடல் ஒழிய,Udal Ozhiy - சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு,Uyir Kondu - ஆத்மாவைப் பிடித்துக்கொண்டு
ஓடும்போது,Oadum Podhu - (யமபடர்கள்) ஓடும்போது
ஓடி,Oadi - (எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர,Seyal Theera - பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து,Sindhithu - ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே,Vazhvaarae - வாழநினைப்பவர்களே
வாழ்வார்,Vazhvaar - வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற,Ayirvu Endra - கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்,Theerppaan - தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
பாடி,Paadi - வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்,Siru Samayam Pandhanaiyaar - அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸாரபந்தத்திற்கே காரணமாகவுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்,Vazhvu Ael - வாழ்ச்சியோ வென்றால்
பழுது,Pazhuthu - உபயோகமற்றது.
2470நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை வெளியிட்டு அருளுகிறார் – கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்- சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் – இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது- 89
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு,
பழுது ஆகாது ஒன்று,Pazhuthu Aagathu Ondru - பழுதுபடாத (சிறந்த) ஒரு பாயத்தை
அறிந்தேன்,Arindhen - தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்,Paal Kadalaan Paatham - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து,Vazhavaa Vagai Ninaithu - தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை,Vaikal Thozhuvaarai - எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி,Kandu Irainji - கண்டு வணங்கி
வாழ்வார்,Vazhvaar - வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து,Kalanda Vinaikethu - ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
வின் திறந்து,Vin Thirandhu - பரமபதவாசலைத் திறந்து
மிக்கு,Mikku - சிறப்புடனே
வீற்றிருப்பார்,Veettriruppaar - எழுந்தருளியிருக்கப்பெறுவர்
2471நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள் ஸ்ரீ திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் – ஸ்ரீ பகவானை ஆராதித்தவர்கள் விண்ணாள்வர் -என்றபடி- விலஷணமான ஸ்ரீ பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார் ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து- அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் 90
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்.
விண்,Vin - பரமபதத்தில்
வீற்றிருந்து,Veettrirundhu - பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்,Aala Venduvar - ஆட்சிசெய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்,Vengadaththaan Paal - திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்,Pal Malargal - பலவகைப்பட்ட மலர்களை
திருந்த,Thirundha - நன்றாக
வைத்தாரே,Vaiththaare - ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து,Varum Mathi Paarththu - (எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்,Anbinar Aay - பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே,Mattravarkke - அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்,Thaalvu Aay Iruppaar - அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்,Thamar - அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்,Mel Thirundha Vaazhvaar - முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.
2472நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் – நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி 91
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் – அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று.
மால் வண்ணன்,Maal Vannan - கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை,Thaal Thaamarai - திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு,Malargal Ittu - புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி,Irainji - வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று,Thaal Thaamarai Adaivom Endru - அத்திருவடித்தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்,Thamar Aavaar - பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்,Thamarai Melarkum - திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்,Aadu Aravu Aartharkum - ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்,Amararukkum - நித்யஸூரிகளுக்கும்
யாவர்க்கும்,Yaavarkkum - மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்,Amararhal - மேற்பட்டவராவர்
2473நான்முகன் திருவந்தாதி || நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி ஸ்ரீ எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் – கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-ஸ்ரீ எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் – என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே 92
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை – என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு.
கரு இருந்த நாள் முதலா,Karun Irundha Naal Mudhala - (நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு,Kaappu - (எம்பெருமானாலே) ரக்ஷைபெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு,Thiru Endrum Irundha Marvan Siritharanukku - பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்,Aal Aay - ஆட்பட்டவனாய்
நெடு மாலை,Nedu Maalai - (அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து,En Nenjaththu - என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து,Vaiththu - ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்,Nindrum Irundhum Endrum - நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்,Marandharieen - மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.
2474நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் ஸ்ரீ எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் – ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான சம்பந்தத்தை யுடையவனே இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார் 93
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், – ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
அங்கு,Angu - அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்,Pal Uyirkkum - எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்,Aappu Ozhiyavum - சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து,Aakkai Koduthu - சரீரங்களைக் கொடுத்து
அளித்த,Alitha - அருள்செய்த
கோனே,Kone - ஸ்வாமிந்!
காப்பு,Kaappu - (நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்,Marandharieen - ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்,Kannane Endru Iruppan - எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்,Gunam - திருக்குணங்களினால்
பரனே,Parane - சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்,Mei Thelindhaar Thaam - உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்,Unnaividha Thuniyaar - உன்னை விட மாட்டார்கள்.
2475நான்முகன் திருவந்தாதி || சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் – குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது – வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் – மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் – அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும் என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்- 94
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று.
வேறு ஆனார்,Veeru Aanaar - வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக,Neeru Aaga - சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து,Thelindhu - (ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்,Thelindha Pai Paambu Inanaiyaai - விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு,Adiyeerkku - அடியேனுக்கு
அருளாய்,Arulaai - அருள்புரிய வேணும்
என்று,Endru - வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி,Kaik Kaatti - (பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
களம படுத்து,Kalama Paduthu - (அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின்பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்,Vembum Kari Aagum - வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே
மெய் தெளிந்தார்,Mei Thelindhaar - உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்
என் செய்யார்,En Seyyaaar - எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும்  செய்யக்கூடியவர்களே)
2476நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்- மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே – வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் – ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்- அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்- 95
ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை
இடநாடு காண இனி.
அடிமை,Adimai - அடிமையை
என்றேன்,Endraen - ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை,Pirappu Idumbai - ஸம்ஸாரதுக்கங்களில் நின்றும்
இழிந்தேன்,Izhindhen - நீங்கினேன்
அமரர்க்கு,Amarar Kku - பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை,Amaramai - என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்,Aandren - (ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்,Kadannaadum - ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்,Man Naadum - இப்பூலோகத்தையும்
கை விட்டு,Kai Vittu - உபேக்ஷித்து
மேலே,Mele - எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்,Idam - (அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு,Naadu - திருநாட்டை
காண,Kaan - கண்டு அநுபவிக்கலாம்படி
இனி,Ini - இப்போது
ஆன்றேன்,Aandren - (பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்
2477நான்முகன் திருவந்தாதி || நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-அதுக்கடியான சேஷியான ஸ்ரீ மன் நாராயணன் நீ நன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்- சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான ஸ்ரீ நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார் தேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு – 96
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.
எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானே!
உன்னை,Unnai - உன்னை
ஈசற்கும்,Eesarkkum - ருத்ரனுக்கும்
நான் முகற்கும்,Naan Mukarkkum - பிரமனுக்கும்
தெய்வம்,Deivam - தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்,Ini Arindhen Ini Arindhen - இப்போது திட்டமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ,Kaaranan Nee - ஸகலஜகத்துக்கும் காரணபூதன் நீ
கற்றவை நீ,Kattravai Nee - இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ,Karppavai Nee - இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை,Nal Kirisai - நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ,Naaranan Nee - நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்,Naan Nangu Arindhen - நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்