திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2388 | நான்முகன் திருவந்தாதி || அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க- நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் – பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை – உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது – 7 | இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை. | பதவுரை Show / Hideநாரணனே,Naaranane - நாராயணனே!, இன்று ஆக,Indru Aaga - இனறைக்காகவுமாம் நாளையே ஆக,Naalaiye Aaga - நாளைக்காகவுமாம் இனி சிறிது நின்று ஆக,Ini Siridhu Nindru Aaga - இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்) நின் அருள்,Nin Arul - உன்னுடைய கிருபை என் பாலதே,En Palathe - என்னையே விஷயமாக வுடையதாகும் நன்று ஆக,Nandru Aaga - நிச்சயமாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்,Naan Unnai Andri Ileen Kandaai - நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண் நீ,Nee - நீயும் என்னை அன்றி இலை,Ennai Andri Ilai - என்னையொழிய வேறொரு நகஷ்யனை உடையை யல்லைகாண். |