| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2394 | நான்முகன் திருவந்தாதி || மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள் ஸ்ரீ எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் – 13 | வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக் கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், – வீடாக்கும் மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன். | வீடு ஆக்கும் பெற்றி அறியாது,Veedu Aakkum Pettri Ariyadhu - மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல் மெய்,Mei - சரீரத்தை வருத்தி,Varuththi - (உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி கூடு ஆக்கி,Koodu Aakki - எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி நின்று,Ninru - இப்படி நெடுங்காலம் தவம்புரிந்தும் உண்டு கொண்டு,Undu Kondu - (தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும் உழல்வீர்,Uzhalveer - திரிகின்றவர்களே! வீடு ஆக்கும்,Veedu Aakkum - மோக்ஷத்தைத் தரக்கூடிய மெய் பொருள்தான்,Mei Porulthaan - மெய்யான உபாயமானயிருப்பவனும் வேதம் முதல் பொருள்தான்,Vedham Muthal Porulthaan - வேதங்களினால் முழு முதற்கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும் விண்ணவர்க்கு,Vinnavarkku - நித்யஸூரிகளுக்கு நல் பொருள்தான்,Nal Porulthaan - போக்யமான வஸ்துவாயிருப்பவனும் நாராயணன்,Naarayanan - ஸ்ரீமந்நாராயணனே யாவன். |