| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2402 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின ஸ்ரீ எம்பெருமானுடைய சீற்றத்தையும்- அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் – இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது – ஸ்ரீ நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் – 21 | இவையா பிலவாய் திறந்தெரி கான்ற இவையா எரிவட்டக் கண்கள் – இவையா எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான், அரிபொங்கிக் காட்டும் அழகு. | திறந்து,Thirandhu - விரிந்து எரி கான்ற,Eri Kaandru - நெருப்பை உமிழ்ந்த பிலம் வாய்,Pilaam Vaai - பாழி போன்ற பெரியவாய் இவையா,Ivaiyaa - இதுவோ! எரி வட்டம்,Eri Vattam - கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற கண்கள்,Kangkal - திருக்கண்கள் இவையா,Ivaiyaa - இவையோ! எரி,Eri - அக்நிபோலே பொங்கி,Pongi - கிளர்ந்து காட்டும்,Kaattum - தோன்றின திருமேனியை யுடையனாய் இமையோர் பெருமான்,Imaiyor Perumaan - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன் அரி,Ari - நரசிங்கமூர்த்தியாய் பொங்கி,Pongi - கிளர்ந்து காட்டும்,Kaattum - காட்டின அழகு,Azhagu - அழகு இவையா,Ivaiyaa - என்ன விஷயம்! |