| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2414 | நான்முகன் திருவந்தாதி || தாம் ஸ்ரீ கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் – அசாதாரணையான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் – 33 | அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு – வடிப்பவள வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து, கோப்பின்னு மானான் குறிப்பு. | குறிப்பு,Kurippu - (அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால் (- (எம்பெருமான்)) அடி,Adi - திருவடியாலே சகடம்,Sakadam - சகடாஸுரனை சாடி,Saadi - ஒழித்தும் அரவு,Aravu - காளியநாகத்தை ஆட்டி,Aatti - வாலைப்பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும் யானை,Yaanai - குவலயாபீட மென்னும் யானையை பிடித்து,Pidiththu - பற்றிக்கொண்டு பின்னைக்கா,Pinnaikka - நப்பின்னைப் பிராட்டிக்காக வல் ஏறு,Val Eru - கொடிய ரிஷபங்களினுடைய எருத்து,Eruththu - முசுப்பை ஒசித்து,Osiththu - கொம்பை முறித்தொழித்தும் பேய்,Pei - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய முலை,Mulai - முலையில் தடவியிருந்த நஞ்சு,Nanju - விஷத்தை உண்டு,Undu - அமுது செய்து அவளாயிரை மாய்த்தும் வடி பவளம் வாய் தோளி,Vadi Pavalam Vaai Tholi - அழகிய பவளம் போன்றவாயையும் தோளையும்டையளான இறுத்து,Iruththu - முறித்தொழித்தும் பின்னும் கோ ஆனான்,Pinnum Ko Aanaan - தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான். |