திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2415 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2415நான்முகன் திருவந்தாதி || என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் – உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் – 34
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த, குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல், தான்கடத்தும் தன்மையான் தாள்.
பதவுரை Show / Hide
கோட்டியூர் மேயானை,Kottiyoor Meyaanai - திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை,Vengadathu Meyaanai - திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த,Aetha - துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு ஆசை
நன்மை பயக்க,Nanmai Payakka - (எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு குதூஹலம்,
மெய் வினை,Mei Vinai - சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்,Noi - வியாதிகளும்
எய்தாமல்,Eydhamal - வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான,Thaan Kadaththum Thanmaiyana - தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தான்,Thaan - திருவடிகளை
வெறுப்பனோ,Veruppano - மறந்திருப்பனோ.