| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2419 | நான்முகன் திருவந்தாதி || மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் – அதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் – ஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே பண்ணும் அபிமானமும் அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும் அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் – 38 | அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன்,உகைக்கு மேல், எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும், அப்போது ஒழியும் – அழைப்பு. | அகைப்பு இல் மணிசரை,Akaiyppu Il Manisarai - உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை ஆறு சமயம்,Aaru Samayam - (நீ சங்களான) ஆறு மதங்களில் புகைத்தான்,Pugaitthan - புகும்படி செய்தவனும் பொரு கடல் நீர் வண்ணன்,Poru Kadal Neer Vannan - அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன் உகைக்கும் ஏல்,Ugaiykkum Ael - உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில் அப்போது,Appodhu - அப்போதே எத் தேவர் வாலாட்டும்,Eth Thevar Vaalattum - எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும் எவ்வாறு செய்கையும்,Evvaru Seigaiyum - எவ்விதமான (பஜ்ஞம் முதலிய) காரியங்களும் அழைப்பு,Azhaiyppu - (தேவதைகளின்) ஆஹ்வாகமும் ஒழியும்,Ozhiyum - ஒழிந்து போய்விடும் |