| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2420 | நான்முகன் திருவந்தாதி || லோக வ்ருத்தாந்தம் ஆன படியாகிறது என்று கை வாங்கி-தமக்கு ஸ்ரீ திருமலையையும் அங்கு நின்று அருளுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்- மலையிலே பெரிய அருவிகள் ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும் பயப்பட்டு ஒதுங்கும் திருமலை– அன்றிக்கே நெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் – இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம் 39 | அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண, இழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப்பே ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை வெருவி யரவொடுங்கும் வெற்பு. | திருவேங்கடத்தானை,Thiruveengadathaanai - திருவேங்கடமுடையானை காண,Kaan - கண்ணால் ஸேவிக்க அழைப்பன்,Azhaiyppan - வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன் வரன்றி வந்து இழிய,Varanri Vandu Izhaiya - திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து) யானை,Yaanai - யானைகளானவை வெருவி,Veruvi - பயப்பட்டு நிற்கவும் அரவு,Aravu - மலைப் பாம்புகளானவை மழை,Mazhai - மழைபோல் சொரிகின்ற பேர் அருவி,Per Aruvi - பெரிய அருவிகளானவை மணி,Mani - அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை ஒடுங்கும்,Odundum - (அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற வெற்பு,Verppu - திருமலையை கூட,Kooda - சென்று கூடவேணுமென்று திருக்கூடல் இழைப்பன்,Thirukoodal Izhaippan - கூடலிழைக்கின்றேன் |