திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2424 | நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் – 43 | மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. | பதவுரை Show / Hideமங்குல் தோய் சென்னி,Mangul Thoy Senni - மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான வடவேங் கடத்தானை,Vadaveeng Kadaththaanai - வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு காப்பு அணிவான்,Kaappu Anivaan - திருவந்திக் காப்பிடுவதற்காக திங்கள் சடை ஏற வைத்தானும்,Thingal Sadai Aera Vaiththaanum - சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும் தாமரை மேலானும்,Thamarai Melaanum - தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும் தாம்,Thaam - ஆகிய இவர்கள் குடை ஏற குவித்துக் கொண்டு,Kudai Aera Kuviththuk Kondo - திருமுத்துக்குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு கங்குல்,Gangul - ஸந்த்யா காலந்தோறும் புகுந்தார்கள்,Pugundhaargal - திருமலைக்குச் செல்லுவர்கள் |