திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2426 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2426நான்முகன் திருவந்தாதி || அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் ஸ்ரீ திருமலை -என்கிறார் – வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் – 45
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம், பரிந்து படுகாடு நிற்ப – தெரிந்தெங்கும் தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
பதவுரை Show / Hide
புண்டரீகம் பாதம்,Pundareegam Paatham - திருவடித் தாமரைகளில்
புரிந்து,Purinthu - அன்புபூண்டு
மலர் இட்டு,Malar Ittu - புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து,Parinthu - மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப,Padukaadu Nirpa - வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்,Engum - ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து,Therinthu - விளங்கி
தான் ஓங்கி நின்கின்றான்,Thaan Ongi Ninkindraan - குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும்பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே,Than Aruvi Vengadame - குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்,Vaanorkkum - நித்யஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்,Mannorkkum - நிலத்தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு,Vaippu - நிதியாயிருக்கும்.