| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2427 | நான்முகன் திருவந்தாதி || திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற ஸ்ரீ திருமலையை எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்- அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று- 46 | வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென் றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும் வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே, நாடுவளைத் தாடுமேல் நன்று. | மா மதியை,Maa Mathiyai - ‘சிறந்த (இந்த) சந்திரனை மணி விளக்கு ஆ,Mani Vilakku Aa - மங்கள தீபமாக வைப்பன் என்று,Vaippan Endru - (திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக) கை நீட்டும்,Kai Neettum - உயரத்தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற யானையை,Yaanaiyai - ஒருயானையை (பிடிப்பதற்காக) எப்பாடும்,Eppaadum - நாற்புறமும் வேடு வளைக்க,Veedu Valaikka - வேடர் சூழ்ந்து கொள்ள குறவர்,Kuravar - (அங்குள்ள) குறவர்கள் வில் எடுக்கும்,Vil Edukkum - (அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான வேங்கடமே,Vengadame - திருமலையையே நாடு,Naadu - நாட்டிலுள்ளாரனைவரும் வளைத்து,Valaiththu - விரதக்ஷிணம் பண்ணி ஆடுதும் ஏல்,Aaduthum Ael - (மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம்பண்ணப் பெற்றால் நன்று,Nandru - நல்லது |