திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2428 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது – 47 | நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் ,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம். | பதவுரை Show / Hideஆளியும்,Aaliyum - யாளிகளும் கோள் அரியும்,Kool Ariyum - வலிமை தங்கிய சிங்கங்களும் பொன்,Pon - பொன்களும் மணியும்,Maniyum - மாணிக்கங்களும் முத்தமும்,Muthamum - முத்துக்களும் பூ மரமும்,Poo Maramum - பூத்தமரங்களும் பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்,Pala Mani Neerodu Poruthu Urulum Kaanamum - பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும் வானரமும்,Vaanaramum - குரங்குகளும் வேடும்,Vedum - வேடச்சாதியுமாகிற இவற்றை உடை,Uday - உடையதான வேங்கடம்,Vengadam - திருமலையானது நல் மணி வண்ணன் ஊர்,Nal Mani Vannan Oor - நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம் |