திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2429 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்- ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து பரம ப்ராப்யமான ஸ்ரீ திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்- 48 | வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், – வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை. | பதவுரை Show / Hideவிண்ணோர்,Vinnor - நித்யஸூரிகளால் மெய்ம்மையால்,Meimmaiyaal - உண்மையான பக்தியுடனே தொழுவதுவும்,Thozhuvadhuvum - ஆச்ரயிக்கப்படுவதும் வேங்கடமே,Vengadame - திருமலையே வினை,Vinai - பாவங்களையும் மெய் நோய்,Mei Noi - உடம்பைப் பற்றின நோய்களையும் தீர்ப்பதுவும்,Theerppadhuvum - போக்கடிக்கவல்லதும் வேங்கடமே,Vengadame - திருமலையே தானவர் வீழ,Thaanavar Veezha - அசுரர்கள் மாளும்படி தன் ஆழிபடை தொட்டு,Than Aazhipadai Thottu - தனது சக்ராயுதத்தைப் பிடித்து வானவரை,Vaanavarai - தேவர்களை காப்பான்,Kaappaan - காத்தருளுமெம் பெருமானுடைய மலை,Malai - திருமலை வேங்கடமே,Vengadame - திருவேங்கடமேயாயம் |