திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2432 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2432நான்முகன் திருவந்தாதி || அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் ஸ்ரீ பரம பதத்திலும் இல்லை -என்கிறார் – ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்- ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று – 51
எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான் தனக்காவான் தானேமற் றல்லால – புனக்காயா வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு விண்ணெல்லா முண்டோ விலை.
பதவுரை Show / Hide
புனம்,Punam - தன்னிலத்திலே வளர்கிற
காயா,Kaayaa - காயாம்பூவினுடைய
வண்ணனே,Vannane - நிறம்போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு,Enakku - (உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப்பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே,Aavaar Aar Oruvarae - ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்,Emperumaan - ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்,Thaanae Thanakku Aavaan Allaal - தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனேயன்றி
மற்று,Mattru - எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்,Unnai Pirar Ariyaar - நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு,En Mathikku - (உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம்விலை உண்டோ,Vin Ellamvilai Undo - மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?