திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2433 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்- இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்- 52 | விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் – முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர். | பதவுரை Show / Hideதக்கோர்,Thakkor - அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள் விலைக்கு ஆள்படுவர்,Vilakku Aalpaduvar - ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பர்கள் விசாதி ஏற்று உண்பர்,Vichaadhi Aetru Unbar - (மிகுத்யுதானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள் தலைக்கு ஆள்பலி திரிவர்,Thalaikku Aalpali Thirivar - ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள் முலைக்கால்விடம் உண்டவேந்தனையே,Mulaikkaalvidam Unda Vendaanaiye - (பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே வேறுஆ எத்தாதார்,Veerumaa Ettaadhaar - விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய் கல்லாதவர்,Kallaadhavar - அறிவுகெட்டவர்களாய்க்கொண்டு கடம் உண்டார்,Kadham Undaar - பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள். |