திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2436 | நான்முகன் திருவந்தாதி || இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து -ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் – உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்- ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் – 55 | கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர். | பதவுரை Show / Hideஅமரர் கடை நின்று,Amarar Kada Nindru - (இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றிநின்று நாளும்,Naalum - நெடுங்காலம்வரையில் கழல் தொழுது,Kazhal Thozhudhu - (அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெறமாட்டாமல்) இடை நின்ற இன்பத்தர் ஆவர்,Idai Nindra Inbathar Aavar - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள் குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே,Kudai Nindra Neer Ootham Meeni Nedumaale - (இவ்வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல்போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே! நின் அடியை,Nin Adiyai - உனது திருவடிகளை ஓத வல்லாரவர்ஆர்,Oda Vallaravar Aar - அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!) |