திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2438 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2438நான்முகன் திருவந்தாதி || அவனுடைய ஸ்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று – அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன- அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ஸ்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்- ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே – 57
ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான், பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், – மருங்கிருந்த வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம் ஆனவர்தா மல்லாக தென்.
பதவுரை Show / Hide
பேசில்,Pesil - உண்மைபேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே,Peru Kuruntham Saaythavane - பெரிய குருந்தமரத்தை வேர் பறியத்தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்,Orungu Irundha Nal Niyaiyum Thee Vinaiyum Aavaan - உடன்நிற்கும் புண்யபாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த,Marungu Irundha - ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர்தாம்,Vaanavardham - தேவர்களும்
தானவர்தாம்,Thaanavardham - அசுரர்களும்
தாரகைதான்,Thaaragaithaan - இப்பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர்தாம்,En Nenjam Aanavardham - என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்,Allaatthu En - அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது.