| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2443 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்- மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச் சொல்லும்படி அன்றிக்கே ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீயபதி தானே- 62 | திருநின்ற பக்கம் திறவிதென் றோரார், கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய், தார்தன்னைச் சூடித் தரித்து. | திரு இருந்த மார்வன்,Thiru Irundha Maarvan - பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே) சிரீதரன் தன்,Sireedharan Than - ‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை,Vandu Ulavu Than Thuzhai Thar Thannai - வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை சூடி,Soodi - தலைக்கு அலங்காரமாக அணிந்து தரித்து,Thariththu - அதனால் ஸத்தை பெற்று, திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்,Thiru Nindra Pakkam Thiravithu Endru Ooraar - ‘பிராட்டி பொருந்தியிருக்கப்பெற்ற வலப்பக்கத்தை யுடைய வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறியமாட்டாதவர்கள். கரு நின்ற,Karun Nindra - (தங்களைப்போலே) கர்ப்பவரஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை கல்லாக்கு உரைப்பர்,Kallaakku Uraippar - (பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள். |